Fantasy இளவரசியின் திட்டம் by சகோதரன்
#16
சாரங்கன் ஒரு துறவி போல வேடம் அணிந்திருந்தான். இளம் துறவியாக அவன் தோற்றம் இருந்தது. கட்டுடலை மறைக்க காவிநிற மேலாடையும், இடைகச்சை மேல் காவி வேட்டியும் அணிந்திருந்தான். வேங்கை நாட்டின் இலட்சனையோடு கூடிய சீருடையில் சில காவலர்கள் வழி நடத்தி செல்ல.. நகருக்குள் நுழையும் கூட்டத்தோடு கலந்திருந்தான். கருங்கல் பெரு மதில்களை அவர்கள் கடந்தவுடன்... ஒரு சங்கொலி ஒலித்தது. கோட்டையின் வாயில் கதவுகள் மூடப்பட தயாராக இருந்தன. வெளிசுற்று வீரர்கள் அணிவகுத்து நிற்க எல்லாவற்றையும் பார்த்தும் பார்க்காதபடி "ஓம் நமசிவாய.." என்று முனகியபடி நடந்தான்.

அவன் நகரின் நகரை அடைந்ததும் வியாபாரிகள் கூட்டம் சந்தையை நோக்கி நகர்ந்தது. சிலர் அருகிலிருந்த மடங்களில் தங்கினார்கள். ஆனால் இளம் துறவி சாரங்கன் மட்டும் நடந்து கொண்டே இருந்தான். நகரின் தெருக்களை அவன் அடைந்த போது அர்க்கிய மந்திரங்கள் ஒலிக்க தொடங்கியது. அந்தி பொழுதின் அந்தணன் வழிபட வேண்டிய கடமை. "நமோ தேவோ பவ.." ஒரு அந்தணன் தன் பங்கிற்கு வேத மந்திரங்களை வீட்டின் முன்புறம் அமர்ந்து உச்சரித்துக் கொண்டிருந்தான். ஒரு குதிரையில் வீரன் விரைந்தான். ஒன்றிரண்டு மக்கள் நடமாடிக் கொண்டிருந்தார்கள். சில வீரர்கள் தெருக்களில் உள்ள விளக்குத் தூண்களில் தீபமேற்றி கொண்டிருந்தார்கள். சாரங்கன் யாரையும் தொந்தரவு செய்யாமல் நகர்ந்தான்.

இளம் சாமியாரின் வருகையை கண்டு ஒரு குட்டிப் பெண் அவனிடத்தில் வந்தாள். அவளின் தலைமுடி வாரப்படாமல் களைந்திருந்து. எண்ணையிட்டு ஒரு வாரம் ஆகியிருக்கலாம். இடையில் மட்டுமே ஆடை அணிந்திருந்தாள். அதுவும் அழுக்கேறி நெடுநாளாக அவள் அணிந்திருப்பதை தெரிவித்தது. "சாமி.. என் தாய்க்கு மேலுக்கு முடியவில்லை. உங்கள் தவ பலத்தால் அதனை தீர்க்க உதவுங்கள்" என வணங்கினாள்.

சாரங்கனுக்கு அந்த குட்டிப் பெண்ணின் வேண்டுதலை புறந்தள்ள மணமில்லை. தன் தோள்பட்டை மீது வைத்திருந்த பைக்குள் சில நொடிகள் தேடி.. வெண் பட்டால் ஆன முடிச்சு பையை எடுத்தான். அதனை அவிழ்த்து மூலிகை திருநீற்றை ஒரு பிடி கையில் எடுத்தான்.
"சிறுமியே.. கைகளை நீட்டி பிரசாதம் வாங்கிக்கொள்" என கூறினான். அவளும் தனது இருகைகளையும் ஒருசேர இணைத்து அவன் முன்பு நீட்டினாள். சல்க் என மூலிகை திருநீறு அவள் கைகளில் நிறைந்தது.
"தினம் இரவு இதில் ஒரு சிட்டிகை தாயை உண்ண சொல்.. சிறுமியே.. நெற்றில் மறவாமல் பூசு. நம்பிக்கை குணமாக்கும்."
சிறுமி அதை கவனமுடன் கொண்டு சென்றாள். தூரத்திலிருந்து ஒரு ஒற்றன் இந்நிகழ்வை கவனித்துக் கொண்டான்.

நகருள் ஒரு இளம் துறவி புதியதாக தோன்றியிருக்கிறார். உதவி என கேட்ட சிறுமிக்கு மந்திர பொடியை தந்துள்ளார். யார் இவர்? எங்கிருந்து வருகிறார்? வருகையின் நோக்கம் என்ன?. என்பதெல்லாம் அவனுக்கு‌ தெரிந்து கொள்ள வேண்டிய தேவை இருந்தது. இதெல்லாம் அறியாத இளம் துறவி வேடம் பூண்டிருந்த சாரங்கன்.. குறிப்பிட்ட அன்னசத்திரம் தேடி தெரு தெருவாக அலைந்து கொண்டிருந்தான்.

வழியில் தென்பட்ட ஒருவரிடம் "ஐயா.. பெருந்தொண்டர் வாதாபி அன்னசத்திரம் எங்குள்ளது?" என்றான். அவர் நடுத்தர வயதுடைய நபர். நேர்த்தியான அங்கியை அணிந்திருந்தார். நெற்றி நீறு அவரை பக்திமான் என்று கூறியது. கழுத்திலும் கையிலும் இருந்த பொன் ஆபரணங்கள் அவர் மதிப்பை உணர்த்தியது.
"அதற்கு நீங்கள் இன்னும் இரண்டு சாலையை கடக்க வேண்டும்‌ துறவி. என் வீடு அருகில் தான் உள்ளது.. வாருங்களேன் உங்களுக்கு சேவை செய்ய காத்திருக்கிறோம்."
"தங்களுக்கு சிரமம் வேண்டாம் ஐயா.. நான் அன்னசத்திரத்திற்கே செல்கிறேன். "
"அதெல்லாம் தொந்தரவு இல்லை துறவி. வாருங்கள் என்னோடு.. அந்த அன்னசத்திரத்தில் ஒரு இம்சை இருக்கிறது."
"இம்சையா? என்ன இம்சை.."
"காதை கொஞ்சம் அருகில் கொண்டு வாருங்கள்.. " துறவியும் அந்த வழியே சென்றவரை நெருங்கினார்.
"அங்கு ஆணும்.. ஆணும்.. உறவு கொள்ளும் இம்சை இருக்கிறது. நீங்கள் வேறு இளம் துறவியாக இருக்கின்றீர்கள். அங்கு சென்றால் உங்களை காப்பாற்றுவார் இல்லை."
".. ஆ.. இது விந்தையாக இருக்கிறதே.."
"ஆமாம்.. ஆனால் நடைமுறையில் நிகழத்தான் செய்கிறது."
"வேங்கையரசருக்கு இங்கு நடப்பது தெரியுமா"
"தெரியாமல்.. " அவர் அதற்கு மேல் கூறவில்லை.
"அவர் ஏன் இதனை தடுக்கவில்லை"
"துறவியே.. இதெல்லாம் அரசியல். சாலையில் இவற்றை பற்றி பேச இயலாது. வீட்டிற்கு வாருங்கள். இரவு உணவை முடித்துவிட்டு பேசலாம். "
"அதுவும் சரிதான். வேங்கை அரசின் ஒற்றர்கள் எங்கும் இருக்கலாம்." என்றான் துறவி சாரங்கன். ஒற்றர்களைப் பற்றி துறவிக்கு எப்படி தெரிந்திருக்கும்.. என சிந்தனை வந்தாலும்..
"வாருங்கள்" ஏன வாய்நிறைய அழைத்து தன் இல்லம் நோக்கி வழிநடத்தினார் அந்த மனிதர்.

தான் தேடி வந்த சத்திரத்தை விட இந்த மனிதரிடம் அதிகம் தெரிந்து கொள்ள வாய்ப்புள்ளது. சககால அரசியல் அறிந்து கொள்வது அவசியம் என அவருடன் நடந்தான். மின்னல் போல ஒரு வெளிச்சம் வந்தது. அதேன்ன என கவனத்தை செலுத்தினான். முன்னால் செல்லும் அவரின் காலில் வீரக்கழலில் ஒரு வீட்டின் சாளத்தின் வழியே வந்த வெளிச்சம் பட அதிலிருந்து கண்ணாடியில் சூரியனின் கதிர்கள் பட்டு ஏற்படும் பின்பம் போல வெளிச்சம் பரவியது. அவரது காலில் வீரக்கழல் மாட்டப்பட்டிருப்பதை கண்டு சாரங்கனுக்கு திகைப்பு உண்டானது. இவர் சாதாரணமாக நம்மை சந்தித்து பேசிய நபரா.. அல்லது நம்மை சந்திப்பதற்காகவே வந்தவரா.. யாராக இருந்தாலும் நமக்கென்ன என சாரங்கன் அவன் பின்னே நடந்தான்.
horseride sagotharan happy
Like Reply


Messages In This Thread
RE: இளவரசியின் திட்டம் by சகோதரன் - by sagotharan - 28-02-2022, 11:44 AM



Users browsing this thread: 2 Guest(s)