Romance நீயே என் இதயமடி
#8
Heart 
டேய் கார்த்தி ... டேய் கிளம்பிட்டியா வேகமா வாடா மணி ஆயிருச்சு பாரு என மாடியில் இருக்கும் தன் மகன்  அறையை நோக்கி அழைத்தவாறு தனது மகள் திவ்யாவிடம் ஒரு பையை கொடுத்து இந்தாம்மா இத பத்திரமா வச்சுக்கோ என சொல்லிக்கொண்டிருக்கையிலயே

ஃப்ளு கலர்  ஜீன்ஸ் ம்  ஃப்ளாக் கலர்  ஃபுல் ஹான்ட் ஷர்ட்டும்  அணிந்து கொண்டு அதன் ஸ்லீவை மடித்துவிட்டவாாறு அழகாய் இறங்கி வந்தான் 18 வயது நிரம்ப போகும் கார்த்திக்.

டேய் தம்பி என்னடா கோவிலுக்கு போகையில இந்த சட்டையை போட்டுக்கிட்டு வர உங்கப்பா திட்ட போறாரு போயி வேற சட்டை போட்டுக்கிட்டு வா என அவனிடம் சொல்ல.....

இந்த சட்டைக்கு என்னமா....
இதுக்கு எதுக்கு அவரு வைய போறாரு... 
என கேட்க

டேய் கோவிலுக்கு போகைல கருப்பு சட்ட வேணாம்.
உங்கப்பா மத்தநாள் போட்டாலே வைவாறு ஒழுங்கா போய் நல்ல பிள்ளையா வேற சட்டையை போட்டுக்கிட்டு வா என தனது மகனை கண்டித்தால்

வாயில் எதையோ முணுமுணுத்தபடி படிகளில் ஏரியவன்....

தேவி என்ன இன்னும் கிளம்பலயா  அவன் இன்னும் என்ன பன்னிக்கிருக்கான் என வெளிய இருந்து அவனது அப்பாவின் குரல் கேட்கவும் விறுவிறுவென படிகளில் ஏறினான் கார்த்திக்.....

அன்று சக்திவேல் மீனாட்சி தேவி திருமணநாள் என்பதால்  மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தரிசனம் செய்ய குடும்பத்துடன் வந்திருந்தனர்...


மதுரை என்றாலே அனைவர்க்கும் முதலில் ஞாபகம் வருவது மீனாட்சி அம்மன் கோவில்தான்....
மதுரை மாநகரின் மத்தியில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு நான்கு கோபுர வாசல் இதற்கு நான்கு மாடக்கூடல் என்றும் பெயர் .... 
இங்கு பொற்றாமரை குளம், மற்றும் கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டை விளங்கும் அஷ்ட சக்தி மண்டபம் , முதலி மண்டபம், சேர்வைக்காரர் மண்டபம் , கிளிகூட்டு மண்டபம் மங்கையர்க்கரசி மண்டபம், ஆயிரம் கால் மண்டபம் ஆகியவை அமையப்பெற்று பெருமை சேர்க்கிறது.
 நாற்திசையிலும் எழில் மிகு கோபுரங்கள் கோவில் வாயிலாக இருக்கும் பட்சத்திலும் மீனாட்சி அம்மன் கிழக்கு நோக்கி அருள் பாளிப்பதால் பெரும்பாலான பக்தர்கள் யாவும் கிழக்கு கோபுரத்தை கை கூப்பி வணங்கியபடியே அம்மனை காண உடச்செல்கின்றனர்....

முதலில் அனைவரும் விபூதி விநாயகரை வணங்கிவிட்டு அங்குள்ள விபூதியை அள்ளி விநாயகர் மீது பூசிவிட்டு அம்மனை தரிசிக்க செல்வது மரபாக உள்ளது....


திவ்யா கார்த்தி ரெண்டு பேரும் நல்லா சாமிய கும்பிடுங்க.....
நல்லா படிக்கணும் நல்ல பேரு வாங்கணும் நல்ல உடல் ஆரோக்கியத்தை குடுங்க அப்டின்னு நல்லா வேண்டிக்கோங்க என தனது பிள்ளைகளுக்கு சொல்லியவாறு அதையே தனது வேண்டுதலாய் வைத்தார் சக்திவேல்....

தாயே என் பிள்ளைகள் என் வீட்டுக்காரர் எல்லாரும் நல்லா இருக்கனும் அவுங்களுக்கு நல்ல கைகால் சுகத்தை கொடு , எந்த பிரெச்சனையும் வர கூடாது என தன் பிள்ளைகளுக்கும் கணவருக்காகவும் மட்டும் அந்த மீனாட்சி தேவியிடம் நமது மீனாட்சி தேவி மனமுருகி வேண்டியபடி அணைத்து ஸ்வாமிகளிடமும் இதையே வேண்டுதலாய் வைத்து தரிசனத்தை முடித்தார்கள்

தரிசனத்தை முடித்துவிட்டு தெப்பத்திற்கு வந்தவர்கள் மேல் படிக்கட்டுகளில் அமர்ந்திருக்க அதில் கார்த்தி மட்டும் கீழே இறங்கி சென்று தெப்பத்தின் கடைசி படியில் நின்றபடி வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான்...

அங்கு இவனுக்கு அருகிலே இவனை விட இரு வயது குறைவாய் உள்ள ஒரு பெண் சிறுமி ஒருவளுடன் வந்து தனது பாவாடையை சற்று உயர்த்தி தன் இரு கால்களுக்கு இடையில் வைத்து தெப்பத்தை நோக்கி குனிந்து நீரை கையில் அள்ளி சிறுமியின் தலையில் தொளித்துவிட்டு மீண்டும் அள்ள போகையில் பேலன்ஸ் தவறுவது போல் இருக்க அருகில் நின்றவனின் கையை பிடித்தாள்.......

அதுவரை வேறெங்கோ பார்த்தபடி இருந்தவன் தனது கையை யாரோ பற்றுவது போல் தெரியவும் உடனே திரும்பி பார்க்க சரியாய் அதே நேரத்தில் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு நிமிர்ந்தாள் அவள்......

இருவரும் பார்த்துக்கொண்ட அந்த நொடியில் இருவருக்குள்ளும் மின்னலாய் ஏதோ ஒரு உணர்வு ஏற்பட தங்களை மறந்து அந்த உணர்வை அனுமதித்து அனுபவித்தப்படி நின்றனர்....

அப்போது அக்கா என அந்த சிறுமி ஒரு முறைக்கு இருமுறை அழைத்த பிறகே தெளிந்த அவள் சட்டென தான் பற்றியிருந்த அவனது கையை உதறி விடுவித்து விட்டு தனது பாவாடையை ஒற்றை கையால் உயர்த்தி பிடித்தவாறு விறுவிறுவென அழகாய் படிகளில் ஏறி ஓடினாள் அந்த சிறுமியுடன்........

அவள் போவதையே லேசான புன்முறுவலுடன் பார்த்து கொண்டிருந்தவன் அவள் கண்ணை விட்டு மறையும் தொலைவு வரை பார்த்தவன் அவள் பிடித்திருந்த இடத்தில் தனது மற்றொரு கையை பிடித்தவாறு அவளை நினைத்தபடி நிற்க சட்டென ஏதோ தோன்ற தன் குடும்பத்தினர் அமர்ந்திருந்த திசையை நோக்கினான் அங்கு அவர்கள் யாரையும் காணவில்லை உடனே படிகளில் ஏறி மேலே வந்தவனை சற்று தொலைவில் இருந்து அவனது அக்கா திவ்யா அழைத்தாள்......

எங்ககா போனீங்க
 அம்மாவையும் அப்பாவையும் எங்க  என இவன் கேட்க...

வெளிய ப்ரெசாதம் கொடுக்க போனோம் அவுங்க அங்கதான் கொடுத்துகிட்டு இருக்காங்க என ஒரு திசையை காட்டிவிட்டு நடக்க இவனும் அக்காவுடன் இணைந்து நடந்தால்....

கோவிலில் இருந்து வீட்டுக்கு வந்தவன் நேராக தனது அறைக்கு சென்று கட்டிலில் விழுந்தான்....

விழுந்தவன் கோவிலில் பார்த்த அந்த பெண்ணின் ஞாபகத்தில் புதைந்தான்....

யார்டா கார்த்தி அந்த பிள்ள.....
பாத்தா உடனே நம்மள என்னமோ பண்ணிட்டா.....

அவள பாக்கையில இங்க என்னமோ பண்ணுச்சடா.....
என தன் இதயம் இருக்கும் பகுதியில் கை வைத்தவாறு தன்னுடன் தானே பேசிக்கொண்டிருந்தான்...

அந்த கண்ணு அதுக்கு மேல அழகான புருவம் அதுக்கு மத்தியில ஒரு பொட்டு அதுக்கு மேல மெல்லிய திருநீர் கீற்று இப்படி அந்த பெண்ணை பற்றி நினைகயிலும் அவளை பார்த்த போது இதயத்தில் ஏற்பற்ற உணர்வு இப்போதும் ஏற்பட அதை அனுபவித்தப்படியே இருக்க....

அப்போது அவன் அறைக்கு வந்த திவ்யா....

கார்த்தி கீழ வா அம்மா சாப்பிட கூப்புடாங்க  என சொல்ல....

நீ போக்க நான் வரேன் என திவ்யாவிற்கு பதில் சொல்லிவிட்டு தன்னை சரிப்படுத்தி கொண்டு கீழ் வந்தவன் சாப்பிட அமர....

டிவி-யில் .......

துளி துளி துளி மழையாய் வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே
பார்த்தால் பார்க்க தோன்றும்
பேரை கேட்க தோன்றும்
பூப்போல் சிரிக்கும்போது
காற்றாய் பறந்திட தோன்றும்

செல் செல் அவளுடன் செல் என்றே கால்கள் சொல்லுதடா
சொல் சொல் அவளுடன் சொல் என்றே நெஞ்சம் கொல்லுதடா
அழகாய் மனதை பறித்துவிட்டாளே


என்ற பாடல் ஓட  இவனுக்கு தான் கோவிலில் கண்ட பெண்ணின் ஞாபகம் குடியேறியது.......
Like Reply


Messages In This Thread
RE: நீயே என் இதயமடி - by Arunkumar - 19-05-2019, 01:42 PM



Users browsing this thread: 1 Guest(s)