screw driver ஸ்டோரீஸ்
"என்ன சொல்ல..??" அசோக் எரிச்சலாக திரும்ப கேட்டான்.

"ஏன் சொதப்புனேன்னு சொல்லு..!!" ஒரு குழப்பத்தில் அவர் அந்த மாதிரி கேட்கவும், அசோக் உச்சபட்ச டென்ஷன் ஆனான்.

"ஐயோ.. அதான் நான் ஒன்னும் சொதப்பலைன்னு சொல்றேன்ல..??" என்று கத்தினான்.

"சரிடா சரிடா..!! என்ன ஆச்சுன்னு சொல்லு..!!"

"அந்த ஆளு லவ் ஸ்டோரிதான் ப்ரொட்யூஸ் பண்ணுவாராம்.. நான் சொன்ன த்ரில்லர் ஸ்டோரி அவருக்கு பிடிக்கல..!! ஏதாவது லவ் ஸ்டோரி வச்சிருக்கீங்களான்னு கேட்டாரு.. நான் இல்லைன்னு சொல்லிட்டு கெளம்பி வந்துட்டேன்.. அவ்வளவுதான்..!!"

அசோக் சொன்னதும் சில வினாடிகள் நெற்றியை தேய்த்தவாறு யோசித்துக்கொண்டிருந்த மணிபாரதி, அப்புறம் 

"ம்ம்..!! ஏண்டா அசோக்.. நீ ஏன் ஒன்னு பண்ணக் கூடாது..??" என்று மகனிடம் கேட்டார்.

"என்ன..??"

"நான்தான் எக்கச்சக்கமான லவ் ஸ்டோரி எழுதிருக்கேனே.. நீ ஏன் அந்த ஸ்டோரிலாம் சொல்லி சான்ஸ் தேடக்கூடாது.. நீ ஏன் அதுல ஏதாவது ஒன்னை படமா எடுக்க கூடாது..??" மணிபாரதி கேட்டுவிட்டு பெருமிதமாக சிரிக்க, அசோக் அவரையே கடுப்புடன் முறைத்தான்.

"ஸாரி டாடி..!! தமிழ் ரசிகர்களுக்கு அப்படி ஒரு தாங்க முடியாத துயரத்தை குடுக்குறதுக்கு நான் தயாரா இல்ல..!!" அசோக் கிண்டலாக சொன்னதை கேட்டு பாரதி சிரிக்க, மணிபாரதி டென்ஷன் ஆனார்.

"ஏண்டா.. நான் எழுதுன ஸ்டோரிலாம் உனக்கு அவ்வளவு கேவலமா போச்சா..??"

"அப்படி இல்ல டாடி.. உங்க ஸ்டோரின்னு இல்ல.. எந்த லவ் ஸ்டோரியும் எனக்கு பிடிக்கல.. ஒரே வெறுப்பா இருக்கு..!!"

"ஓஹோ.. அந்த வெறுப்புலதான் அந்த ப்ரொட்யூசர்கூட சண்டை போட்டுட்டு வந்தியா..??" சங்கீதா மீண்டும் கிண்டலாக ஆரம்பித்தாள்.

"என்னது..?? சண்டை போட்டானா..??" பாரதியும், மணிபாரதியும் இப்போது ஒன்றாக அதிர்ந்தார்கள்.

"அந்த கதை தெரியாதா உங்களுக்கு.. கிஷோர் எனக்கு எல்லாம் சொல்லிட்டான்..!! இருங்க.. இவன் என்ன பண்ணான்னு சொல்றேன்..!!" சங்கீதா ஆர்வமாக,

"ஏய்.. உன் வாயை வச்சுட்டு கொஞ்ச நேரம் சும்மா இருக்க மாட்டியா..?? சும்மா நொனநொனன்னு..!!" அசோக் தங்கையிடம் சலிப்பாக சொன்னான்.

"ஏன்.. சொன்னா என்ன ..?? நான் சொல்லுவேன்..!!"

"ப்ச்.. சொல்றேன்ல.. கம்னு இரு..!!"

"முடியாது போடா..!!"

திமிராக சொன்ன சங்கீதா கிஷோர் தன்னிடம் சொன்ன விஷயத்தை அப்பாவிடம் சொல்ல ஆரம்பித்தாள். அசோக் தங்கையை முறைத்து பார்த்தான். அவனுக்கு.. சங்கீதாவிடம் உளறியிருக்கிறான் என்று கிஷோர் மீதும் கடுப்பு.. இவள் வாயை அடைக்க முடியவில்லையே என்று சங்கீதா மீதும் எரிச்சல்..!! அசோக் இரண்டுக்கும் சேர்த்து ஒரே தீர்வாய் யோசித்தான்..!!

"கேளுங்க டாடி.. அந்த ப்ரொட்யூசர்க்கு இவன் சொன்ன கதை புடிக்கலையாம்.. அவரும் டைரெக்டா எனக்கு புடிக்கலைப்பான்னு சொல்லிருக்காரு.. இவனுக்கு செம கடுப்பு..!! அந்த கடுப்புல என்ன பண்ணிருக்கான் தெரியுமா.. அந்த ப்ரொட்யூசரோட பொண்ணை.." சங்கீதா சொல்லிக்கொண்டிருக்கும்போதே, அசோக் இடையில் புகுந்து,

"இங்க பாரு சங்கு.. மொதல்ல நான் சொல்றதை கொஞ்சம் கேளு..!!" என்றான்.

"என்ன..??"

"நீ கிஷோர் கட்டிக்கப் போற பொண்ணு.. அவன் சொல்றதைலாம் நீ மத்தவங்கட்ட சொல்ல மாட்டேன்ற ஒரு நம்பிக்கைல.. அவன் என்னைப் பத்தின சில விஷயங்களை உன்கிட்ட சொல்லிருக்கலாம்..!! அதெல்லாம் நீ இப்படி வெளில சொல்றது ரொம்ப தப்பு..!!"

"ஏன்.. இதுல என்ன தப்பு இருக்கு..??"

"புரியலையா உனக்கு..?? சரி.. புரியிற மாதிரியே சொல்றேன்..!! இப்போ.. கிஷோர் எனக்கும் ஃப்ரண்டுதான்.. அவன் சொல்றதைலாம் நான் மத்தவங்கட்ட சொல்ல மாட்டேன்ற ஒரு நம்பிக்கைல.. அவன் உன்னைப் பத்தின சில விஷயங்களை என்கிட்ட சொல்லிருக்கான்..!! அதெல்லாம் என்னைக்காவது நான் உன்கிட்ட வந்து சொல்லிருக்கனா.. ம்ம்..?? வாயை மூடிட்டு கம்முனு இருக்குறேன்ல..??" என்று அசோக் அழகாக சங்கீதாவின் மூளைக்குள் ஆணி செருகினான்.

"எ..என்னைப் பத்தியா..?? என்னைப் பத்தி என்ன சொன்னான்..?? - ஆணி வேலை செய்ய ஆரம்பித்து விட்டது.

"அதெல்லாம் எதுக்கு சங்கு..?? சொன்னா உனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்..!!"

"ப..பரவால.. சொல்லு..!!"

"கண்டிப்பா தெரிஞ்சுக்கிட்டே ஆகணுமா..??"

"ஆமாம்..!! சொல்லு..!!"

"ப்ச்.. என்னத்த சொல்றது சங்கு..!! உன்னைப் பத்தி பேச ஆரம்பிச்சாலே.. அப்படியே பொலம்புறான்..!! 'உன் தங்கச்சிக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையாடா'ன்னு.. அப்படியே ரத்தக் கண்ணீர் வடிக்கிறான்..!!"

"ஏ..ஏன்..??" கேட்ட சங்கீதாவுக்கு அல்ரெடி முகம் சுருங்கிப் போயிருந்தது.

"பாடுறேன்ற பேர்ல.. தெனம்தெனம் அவனை நீ அணுஅணுவா சித்திரவதை பண்றியாம்.. 'தாங்க முடியலைடா சாமி'ன்றான்..!! நரி மாதிரி ஊளையிடுறியாம்.. அதை லவ்லி வாய்ஸ்னு வேற சொல்ல சொல்லி.. அவனை கம்பெல் பண்றியாம்..!! இதுல இப்போ புதுசா.. சினிமால ப்ளேபேக் பாடுறதுக்கு வேற அவனை சான்ஸ் தேட சொல்லி இம்சை பண்றியாம்..!! 'இவ வாய்ஸை கேட்டா.. அந்த ம்யூசிக் டைரெக்டர் என் மூஞ்சில காறித் துப்பமாட்டானா'ன்னு கதர்றான்..!!"

"இ..இல்ல.. நீ பொய் சொல்ற.. கிஷோர் அப்படிலாம் சொல்லிருக்க மாட்டான்..!!" சங்கீதா சொன்னவிதத்திலேயே கிஷோர் மீது அவளுக்கிருந்த நம்பிக்கையில்லாத்தன்மை தெரிந்தது.

"நான் ஏன் பொய் சொல்லப் போறேன் சங்கு..?? இந்த 'லவ்லி வாய்ஸ்.. சினிமா சான்ஸ்..' இதுலாம்.. அவன் சொல்லாம எனக்கு எப்படி தெரியும்.. நீயே சொல்லு..!! எனக்கு கிஷோரை பாத்தா ரொம்ப பாவமா இருக்கு சங்கு.. அதான் உன்கிட்ட இவ்வளவு தூரம் பேசிட்டு இருக்கேன்..!! எனக்கு ஏதாவது பிரச்னைன்னா.. கிஷோர்தான் என் கஷ்டத்தை காது குடுத்து கேட்பான்..!! நீ இப்படி பாடி பாடி.. அந்த காது ஜவ்வை கிழிச்சு வச்சுடாத சங்கு.. ப்ளீஸ்.. உன்னை கெஞ்சிக் கேட்டுக்குறேன்..!!"

அசோக் கெஞ்சலான குரலில் சொல்லி முடித்தான். சங்கீதாவோ பேயிடம் அறை வாங்கியவள் மாதிரி, விழிகளை விரித்து வைத்தபடி அமர்ந்திருந்தாள். உள்ளுக்குள் எழுந்த துக்கத்தை அடக்க முனைபவள் பாதிரி, உதடுகளை அழுந்த கடித்துக் கொண்டாள். ஆனால் ஒருசில வினாடிகள் கூட அவளால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. அவளுடைய கண்களில் இருந்து பொலபொலவென கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது. 'டாடீஈஈ..!!' என்று குழந்தை மாதிரி கத்திக்கொண்டே, மணிபாரதியை கட்டிக்கொண்டாள். அவருடைய மார்பில் முகம் புதைத்து, அவளது முதுகு குலுங்க குலுங்க அழ ஆரம்பித்தாள். அவர் பதறிப்போனார்.

"ஐயையோ.. என்னம்மா நீ..?? இந்தப்பய சும்மா சொல்றான்மா.. மாப்ள அப்டிலாம் சொல்லிருக்க மாட்டாரு..!!" என்று மகளை சமாதானம் செய்ய முயன்றார்.

"ஏய்.. ஏண்டா அவளை அழ வைக்கிற..??" பாரதி இப்போது மகனை செல்லமாக கடிந்து கொள்ள,

"இல்ல மம்மி.. அவன் சொன்னதைத்தான் நான் சொன்னேன்..!!"

அசோக் நல்லபிள்ளை மாதிரி சொல்லிவிட்டு, தனது திட்டம் பலித்துவிட்ட திருப்தியில் அல்வாவை விண்டு வாயில் போட்டுக்கொள்ள ஆரம்பித்தான். அழுகிற மகளை தேற்ற மணிபாரதி படாத பாடு பட்டுக் கொண்டிருந்தார். பாரதி அவர்கள் இருவரையும் அமைதியும், அவஸ்தையுமாய் பார்த்துக் கொண்டிருந்தாள். அழுது கொண்டிருந்த சங்கீதா திடீரென எழுந்தாள்.

"இருங்க டாடி.. நான் இப்போவே அவனுக்கு ஃபோன் பண்ணி கேக்குறேன்..!!"

"ஐயோ.. சொல்றதை கேளும்மா..!! இவன் சொன்னதை நம்பி.. இந்த நேரத்துல மாப்ள கூட சண்டை போடப் போறியா..??"

"சண்டை போடல டாடி.. அப்டி சொன்னியா இல்லையான்னு மட்டும் கேக்குறேன்..!!"

"அதெல்லாம் வேணாம்மா.. எதா இருந்தாலும் நிதானமா காலைல பேசிக்கோ..!!"

"ப்ளீஸ் டாடி.. எனக்கு இப்போவே தெரிஞ்சாகனும்..!!" சங்கீதாவின் பிடிவாதத்தில், இப்போது மணிபாரதி டென்ஷன் ஆகிப் போனார்.

"அப்பப்பப்பா...!! சொன்னா கேட்க மாட்டியா நீ..?? அதான் காலைல பேசிக்கலாம்னு சொல்றேன்ல..??"

அப்பா அந்த மாதிரி குரலை உயர்த்தி கத்தவும், சங்கீதா இப்போது பட்டென அமைதியாகிப் போனாள். ஆனால் மணிபாரதிக்குத்தான் ஏறிய டென்ஷன் இறங்க சிறிது நேரம் பிடித்தது. அந்த டென்ஷனுடனே மனைவியிடம் திரும்பி சொன்னார்.

"இதுக ரெண்டையும் ஒண்ணா வீட்டுக்குள்ள வச்சுக்கிட்டு எந்த நேரமும் ஒரே டென்ஷனா இருக்குடி..!! எப்ப பாரு.. ஏதாவது சண்டை.. பிரச்சனை..!! யாராவது ஒருத்தருக்கு மொதல்ல கல்யாணத்தை முடிச்சாத்தான்.. நாம நிம்மதியா இருக்க முடியும் போல இருக்கு..!! பேசாம.. சங்கீதா கல்யாணத்தை உடனே முடிச்சுட்டா என்ன..??"

"என்னங்க.. வெளையாடுறீங்களா..?? எத்தனை தடவை சொல்றது.. அசோக்குக்கு முடிச்சுட்டுத்தான் அவளுக்கு முடிக்கணும்னு..!!" பாரதியின் குரலிலும் ஒருவித தீவிரம் தெரிந்தது.

"ப்ச்..!! அப்புறம் அவனுக்கு பொண்ணு பாக்க ஆரம்பிக்கலாமான்னா.. அதுக்கும் வேணான்னு சொல்ற..??"

"இங்க பாருங்க..!! நம்ம வீட்டுல எல்லாருக்கும் லவ் மேரேஜ்தான்.. அதேமாதிரி அசோக்குக்கும் லவ் மேரேஜ்தான்னு நான் எப்போவோ முடிவு பண்ணிட்டேன்.. நாம ஒன்னும் அவனுக்கு பொண்ணு பாக்க தேவை இல்ல.. எல்லாம் அவனே பாத்துப்பான்..!!"

"ம்க்கும்.. எனக்கு என்னவோ நம்பிக்கை இல்ல..!!"

"ஏன் அப்படி சொல்றீங்க..??"

"இவன் ஃபேஸ்புக் அக்கவுன்ட் பாத்திருக்கியா நீ..??"

"இ..இல்ல.. ஏன்..??"

"இருநூத்தி சொச்சம் ஃப்ரண்ட்ஸ் இருக்காங்க இவனுக்கு... அத்தனை பேரும் ஆம்பளை தடிப்பசங்க..!! இவன் செல்போனை எடுத்துப்பாரு.. அதுல மருந்துக்குகூட ஒரு பொண்ணு காண்டாக்ட் நம்பர் இருக்காது..!! நாம லவ் மேரேஜ்னு முடிவு பண்ணி என்ன பிரயோஜனம் பாரதி.. இவன் கொஞ்சமாவது முயற்சி எடுத்துக்க வேணாமா..?? இவன்தான் லவ்னாலே இன்ட்ரஸ்ட் இல்லாம இருக்கானே..??"

"நீங்க ஏன் அப்படி நெனைக்கிறீங்க..?? அவன் மனசுக்கு புடிச்ச மாதிரி ஒரு பொண்ணை இதுவரை அவன் பாக்கலைன்னு நெனச்சுக்காங்க..!! இப்போ என்ன வயசாச்சு அவனுக்கு.. இருபத்தஞ்சு வயசுதான ஆகுது..?? இன்னைக்கோ நாளைக்கோ.. அவனுக்கு புடிச்ச மாதிரி ஒரு பொண்ணை பாக்கப் போறான்.. அவ கூட பேசிப்பழக போறான்.. லவ் பண்ண போறான்.. பதிலுக்கு அந்தப்பொண்ணையும் இவனை லவ் பண்ண வைக்கப் போறான்..!!" பாரதி நம்பிக்கையாய் சொல்லிக்கொண்டிருக்க,

"கிழிச்சான்...!!!!" அண்ணன் மீது ஆத்திரத்தில் இருந்த சங்கீதா இடையில் புகுந்து கத்தினாள்.

"இவனலாம் எவ லவ் பண்ணுவா..?? இவன் மூஞ்சியும் மொகறைக்கட்டையும்..!! இவனை எவளாவது லவ் பண்ணுவான்னு வெயிட் பண்ணிட்டு இருந்தா.. நான் கெழவி ஆகுற வரை கல்யாணம் பண்ணிக்காம வெயிட் பண்ண வேண்டியதுதான்..!! இவனுக்குலாம் அரேஞ்ட் மேரேஜ்தான் சரி.. அதுவும், அப்பா அம்மாவுக்கு பயந்துக்கிட்டு மாடு மாதிரி மண்டையை மண்டையை ஆட்டுற எவளாவது மாட்டுனாத்தான் உண்டு..!!"

[Image: RA+5.jpg]

சங்கீதா ஆத்திரத்தில் அறிவில்லாமல் படபடவென பொரிந்து தள்ள, பெற்றோர்கள் இருவரும் ஸ்தம்பித்துப் போய் அவளை பார்த்தார்கள். தங்கையின் வார்த்தைகள் அசோக்கின் மனதை குத்திக் கிழிக்க.. அமைதியாக.. எதுவும் பதில் பேச தோன்றாதவனாய்.. ஒருவித வெறித்த பார்வை பார்த்தபடி அமர்ந்திருந்தான்..!! அல்வாவை ஸ்பூனால் விண்டு எடுத்தவன், பிறகு அதை உதட்டுக்கு எடுத்துச் செல்ல வலுவில்லாது போன மாதிரி மீண்டும் தட்டிலேயே போட்டான். மகனின் மனக்காயத்தை பட்டென புரிந்து கொண்ட பாரதி, அவனுடைய முகத்தையே பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

"எனக்கு போதும் மம்மி..!! தூக்கம் வருது.. நான் போய் படுக்குறேன்..!!"

அசோக் அமைதியாக சொல்லிவிட்டு, எழுந்து உள்ளே சென்றான். சங்கீதாவுக்கு உண்மையிலேயே அவள் செய்த தவறு புரியவில்லை. அசோக் தனது குரலை கேலி செய்வதும், தான் அவனது விளம்பரத்தை கேலி செய்வதும் மாதிரியேதான் இதையும் நினைத்தாள். தான் வீசிய வார்த்தைகள் எந்த அளவிற்கு அண்ணனின் மனதை புண்படுத்தியிருக்கும் என்று புரிந்து கொண்டாள் இல்லை. அதனால்தான் அவன் அவ்வாறு எழுந்து சென்றபோது,

"என்ன ஆச்சு இவனுக்கு திடீர்னு..??" என்று அம்மாவிடம் குழப்பமாக கேட்டாள். பாரதியோ பதிலுக்கு சீறினாள்.

"பேசுறதெல்லாம் பேசிட்டு என்னாச்சுன்னா கேக்குற..?? இன்னைக்கு அவன் பொறந்த நாளுடி.. இன்னைக்குப் போய் இப்படிலாம் பேசி.. அவனை..!! வாய்.. வாய்.. அப்படி வாய் உனக்கு..!! அந்த கொழுப்பெடுத்த வாயை அப்படியே கோணூசி வச்சு தைக்கணும்..!!"

படபடவென சொல்லிவிட்டு, அல்வா தட்டை எடுத்துக்கொண்டு கிச்சனுக்கு நகருகிற அம்மாவையே, சங்கீதா எரிச்சலாக பார்த்தாள். பிறகு அப்பாவிடம் திரும்பி முறையிட்டாள்.

"பாருங்க டாடி மம்மியை..!! அவன் ஏதோ லூசுத்தனமா பண்ணதுக்கு.. என்னைப் புடிச்சு திட்..!!' சங்கீதா சொல்லிக்கொண்டிருக்கும்போதே,

"இல்லம்மா சங்கீதா.. நீ பேசுனது ரொம்ப தப்பு..!! அண்ணன்ட்ட அப்படிலாம் இனிமே பேசாத..!!"

மணிபாரதி அமைதியாக சொல்லிவிட்டு எழுந்து சென்றார். அப்பாவும் அந்த மாதிரி சொன்னதும்தான், 'நிஜமாகவே நான் செய்தது தவறுதானோ..?' என்ற சந்தேகமே சங்கீதாவுக்குள் எழுந்தது..!!

தனது அறைக்குள் நுழைந்த அசோக், விளக்கை கூட அணைக்காமல், வேறு உடை அணிந்து கொள்ளவும் தோன்றாமல், அப்படியே படுக்கையில் விழுந்தான். கண்களை இறுக்கி மூடிக்கொண்டான். சங்கீதா சிந்திய வார்த்தைகள் இன்னும் அவன் இதயத்தில் ஊசி போல பாய்ந்து, சுருக் சுருக்கென குத்திக் கொண்டிருந்தன. மூச்சை சீராக உள்ளிழுத்தும் வெளியிட்டும்.. துடிக்கிற நெஞ்சை அமைதிப்படுத்த முயன்றுகொண்டிருந்தான்..!!

"பொண்ணுககிட்ட எப்படி பேசனும்னே தெரியாதா உனக்கு..??"

அசோக் ப்ளஸ் டூ படிக்கையில், அவனுடன் படித்த இரட்டை ஜடை போட்டிருக்கும் ஒரு பெண், இவனை கேவலமாய் ஒரு பார்வை பார்த்தபடி வீசிவிட்டு சென்ற வார்த்தைகள், ஏனோ இப்போது அவன் காதுக்குள் ஒலித்தன. அந்தப் பெண்ணின் பெயர் கூட இப்போது அசோக்கிற்கு நினைவில்லை. ஆனால் அவள் உதிர்த்து சென்ற வார்த்தைகள் இன்னும் அவன் உள்ளத்துக்குள் உயிரோடிருக்கின்றன.

சில நிமிடங்கள் அவ்வாறு அமைதியாக சலனமில்லாமல் கிடந்திருப்பான். பிறகு அவனது தலைமுடியை யாரோ வருடுவது போலிருக்க, இமைகளை திறந்து பார்த்தான். அவனுக்கு அருகே பாரதி அமர்ந்திருந்தாள். காயப்பட்டு கிடக்கிற மகனையே பரிவுடன் பார்த்தபடி இருந்தாள்.

[Image: RA+6.jpg]

"எ..என்ன மம்மி..??"

"அவ ஏதோ வெளையாட்டுத்தனமா பேசிட்டா அசோக்.. அதெல்லாம் மனசுல வச்சுக்காத..!!"

"இ..இல்ல மம்மி.. அப்படிலாம் ஒன்னும் இல்ல.. எனக்கு எதும் வருத்தம்லாம் இல்ல..!!" அசோக் புன்னகையுடன் பொய் சொன்னான்.

"ம்ம்.. உனக்கு எதும் வருத்தம் இல்லன்னா சரிதான்..!!"

"அவ சொல்றதும் சரிதான் மம்மி.. எனக்குலாம் அரேஞ்ட் மேரேஜ்தான் சரி.. என்னல்லாம் எவ லவ் பண்ணுவா..??" அசோக் அந்தமாதிரி சுய இரக்கத்துடன் சொல்ல, பாரதிக்கு பொசுக்கென்று கோவம் வந்தது.

"இப்படிலாம் அறிவில்லாம பேசினா.. அறைஞ்சு பல்லை உடைச்சிடுவேன் அசோக்..!! பேசுற பேச்சைப் பாரு..!! உனக்கு என்னடா கொறைச்சலு..?? உனக்கு லவ் பண்ண தகுதி இல்லன்னா.. உலகத்துல யாருக்குமே அந்த தகுதி இல்லன்னு அர்த்தம்..!!"

அம்மா அந்தமாதிரி கோவப்பட்டது அசோக்கிற்கு மிகவும் இதமாக இருந்தது. அந்த கோவத்திற்குள் புதைந்திருந்த அவளது அதீத அன்பை அவன் உணர்ந்துகொண்டதுதான் அதன் காரணம். மெல்ல உதடுகள் பிரித்து கொஞ்சமாய் சிரித்தான். பிறகு சற்றே புரண்டு, அம்மாவின் இடுப்பை சுற்றி இரண்டு கைகளையும் போட்டு அவளை அணைத்துக்கொண்டு, அவள் மடிமீது தலைசாய்த்து படுத்துக் கொண்டான். பாரதி மென்மையாக அவன் தலைமுடியை கோதிவிட, அசோக் மெலிதான குரலில் சொன்னான்.

"எனக்கு இந்த லவ்லாம் வேணாம் மம்மி..!! நீயே ஏதாவது ஒரு பொண்ணு பாரு.. உனக்கு புடிச்சிருந்தா போதும்.. நான் கட்டிக்கிறேன்..!!"

"ப்ச்.. ஏன்டா இப்படிலாம் பேசுற..?? நீ லவ் மேரேஜ்தான் பண்ணிக்கனும்னு, நான் ஏன் இவ்வளவு பிடிவாதமா இருக்குறேன்னு கூடவா உனக்கு புரியலை..?? காதல்ன்றது ஒரு அற்புதமான உணர்வு அசோக்.. அது ஒரு அழகான அனுபவம்..!! நம்ம குடும்பத்துல எல்லாரும் அதை அனுபவிச்சிருக்கோம்.. என் பையனுக்கும் அந்த அனுபவம் கெடைக்கணும்னு அம்மா ஆசைப்படுறேண்டா..!! அது தப்பா..??"

"ஹ்ம்ம்.. உன் ஆசைல ஒன்னும் தப்பு இல்ல..!! இப்போ என்ன.. உனக்கு உன் பையன் லவ் பண்ணனும்.. அவ்வளவுதான..?? சரி.. மேரேஜ் பண்ணிக்கிட்டு என் பொண்டாட்டியை லவ் பண்ணிக்கிறேன்.. போதுமா..??"

"ஹையோ.. மேரேஜ்க்கு அப்புறம் வர்ற லவ் வேற.. நான் சொல்ற லவ் வேற..!! மேரேஜ்க்கு அப்புறம் வர்றது, வேற வழி இல்லாம வர்றது.. கட்டி வச்சுட்டாங்களேன்னு கட்டாயத்தினால வர்றது.. அது எல்லாருக்குமே கெடைக்கும்..!! ஆனா நான் சொல்ற லவ் அப்படி இல்ல.. புரியுதா உனக்கு..??"

"ம்ம்.. புரியுது..!! ஆனா.. சும்மா சும்மா 'லவ் பண்ணு லவ் பண்ணு'ன்னு சொன்னா.. நான் யாரைப் போய் லவ் பண்றது..?? எனக்கு மனசுக்கு பிடிச்ச மாதிரி யாராவது கெடைக்க வேணாமா..??"

"நீ யார்ட்டயாவது பேசினாத்தான மனசுக்கு பிடிச்சிருக்கா இல்லையான்னு தெரியும்..?? நீதான் எந்த பொண்ணுட்டயும் பேசகூட மாட்டேன்றியே..??"

"எனக்கு எவ கூடவும் பேசணும்னு தோணல மம்மி.. அது என் தப்பா..??"

"பொய் சொல்லாத..!! அப்படிலாம் இருக்க வாய்ப்பே இல்ல.. ஸ்கூல்ல, காலேஜ்ல, இப்போ வொர்க் பண்ற இடத்துலனு.. இதுவரை ஒரு பொண்ணு கூடவா உன்னை அட்ராக்ட் பண்ணல..?? உண்மையை சொல்லு..!! எவளாவது ஒருத்தியாவது இருப்பா..!! 'அழகா இருக்காளே..'ன்னு தோணிருக்கலாம்.. 'நல்ல பொண்ணு மாதிரி தெரியுதே..'ன்னு நெனச்சிருக்கலாம்.. 'இவ கூட பேசிப் பழகினா எப்படி இருக்கும்'னு ஆசை வந்திருக்கலாம்..!! சொல்லு.. இதுவரை அப்படி எந்த பொண்ணையுமே நீ மீட் பண்ணது இல்லையா..??"

பாரதி அந்தமாதிரி கேட்கவும், பளிச்சென்று அசோக்கின் மனதுக்குள் தோன்றியது, சற்று முன் ஃபுட் கோர்டில் பார்த்த அந்தப்பெண் தான்..!! அம்மா சொன்ன மூன்று விஷயங்களுமே, அந்தப்பெண்ணைப் பார்த்தபோது தனக்குள் தோன்றியதை எண்ணி, அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது..!! உடனே அவன் உள்ளத்துக்குள் ஒரு புதுவித மாற்றம்..!! சங்கீதாவின் பேச்சால் மனதில் ஏற்பட்டிருந்த ரணம் உடனடியாய் ஆறிப்போய், இப்போது ஜிலுஜிலுவென ஏதோ தென்றல் வீசுவது மாதிரி சிலிர்ப்பாக இருந்தது..!!அவனையும் அறியாமல் அவன் உதடுகளில் ஒரு புன்னகை குடியேறியது..!! முகத்தை நிமிர்த்தி.. அம்மாவை ஏறிட்டு.. குரலில் ஒருவித குறுகுறுப்புடனே கேட்டான்..!!

"ஒருவேளை.. அப்படி யாராவது என்னை அட்ராக்ட் பண்ணினா.. நான் என்ன செய்யட்டும் மம்மி..??"

"ஹாஹா.. இது என்ன கேள்வி..?? போய் அந்த பொண்ணுட்ட பேசு..!!"

"ஆனா.. எனக்குத்தான் பொண்ணுங்கட்ட எப்படி பேசனும்னே தெரியாதே..??"

"எப்படி பேசணும்னா..?? எனக்கு புரியல..!!"

"எப்படின்னா.. ம்ம்ம்ம்... பொண்ணுங்களுக்கு எப்படி பேசினா புடிக்கும், எப்படி பேசினா புடிக்காது.. எதுக்கு சிரிப்பாங்க, எதுக்கு கோவப்படுவாங்க, எதுக்கு வெட்கப்படுவாங்க... எப்படி பேசினா 'ச்சோ.. ச்வீட்..'னு கொஞ்சுவாங்க.. இதுலாம் எதுவுமே எனக்கு தெரியாதே..?? அப்புறம் எப்படி அந்தப் பொண்ணுக்கு என் மேல லவ் வர வைக்கிறது..??"

"ஹாஹாஹாஹா..!! பொண்ணுங்களுக்கு லவ் வர வைக்கிறதுக்கு.. நீ சொல்ற மாதிரிலாம் இனிக்க இனிக்க பேசணும்னு அவசியமே இல்லடா கண்ணா..!!"

"அப்புறம்..??"

"நீ ரொம்ப அன்பானவன்னு அவளுக்கு புரிய வை.. உன்னை கட்டிக்கிட்டா நீ அவளை பத்திரமா பாத்துப்பேன்ற நம்பிக்கையை அவளுக்கு கொடு..!! இந்த ரெண்டு விஷயம் மட்டும் போதும்..!! எந்த மகாராணி மங்கம்மாவா இருந்தாலும்.. மயங்கித்தான் ஆகணும்..!!"

"நெஜமாவா..?? இது ரெண்டும் போதுமா..??" அசோக் இன்னும் நம்பிக்கை இல்லாமல் கேட்க,

"போதுண்டா..!! மம்மி சொல்றேன்ல.. நம்பு..!!" பாரதி உறுதியாக சொன்னாள்.

"இவ்வளவுதானா மம்மி..?? லவ்ன்றது இவ்வளவு சிம்பிளா..?? நான் ரொம்ப காம்ப்ளிகேட்டட்னு நெனச்சேன்..!!"

"ஹாஹா.. காம்ப்ளிகேட்டடான ப்ராப்ளத்துக்கு.. சொல்யூஷன் எப்போவுமே ரொம்ப சிம்பிள்தாண்டா மகனே..!!" சொல்லிவிட்டு பாரதி புன்னகைக்க,

"ம்ம்ம்...!!" அசோக்கும் அம்மாவை பார்த்து புன்னகைத்தான்.

"அதுசரி..!! இவ்வளவு விஷயம் கேக்குறியே.. அந்தமாதிரி ஏதாவது பொண்ணை பாத்துட்டு இருக்கியா..??" பாரதி குறும்பாக கேட்கவும், அசோக் தடுமாறிப் போனான்.

"ஐயோ.. அதுலாம் யாரும் இல்ல மம்மி..!!" என்று வெட்கத்துடன் சொன்னவாறு, அவளுடைய மடியில் முகத்தை புதைத்துக் கொண்டான்.

அம்மாவின் வருகைக்கு பிறகு, நம்பிக்கையூட்டும் விதமாய் அவள் பேசியபிறகு, அசோக்கின் மனது இப்போது லேசாகிப் போயிருந்தது. ஃபுட் கோர்டில் பார்த்த அந்தப்பெண், திரும்ப திரும்ப அவன் மனதுக்குள் வந்து போய்க் கொண்டிருந்தாள். ஒரு இதமான உணர்வு உடலெங்கும் பரவ, அந்த உணர்வு எப்போதும் நீடித்திருக்க வேண்டும் என்று அவன் மனம் விரும்பியது. மீண்டும் தலையை நிமிர்த்தி அம்மாவை ஏறிட்டான்.

"மம்மி..!!'

"ம்ம்..??"

"கொஞ்ச நேரம் இங்க இருக்குறியா..?? நான் தூங்குனப்புறம் போறியா..??" ஏக்கமாக கேட்ட மகனையே, பாரதி கனிவுடன் பார்த்தாள்.

"இருக்குறேண்டா கண்ணா.. படுத்துக்கோ.. தூங்கு..!!"

அசோக் அம்மாவின் மடிமீது தலைவைத்து படுத்துக் கொண்டான். அசோக்குக்கு அவனுடைய குடும்ப சூழலில் இருந்தும்.. நட்பு வட்டாரத்தில் இருந்தும்.. தனது தொழிலான விளம்பர உலகத்தில் இருந்தும்.. தனது லட்சியமான திரைப்பட உலகத்தில் இருந்தும்.. காதல் என்ற வார்த்தை எப்போதுமே ஒருவித நெருக்கடியையே அவனுக்கு தரும்..!! ஆனால் இப்போது பாரதி அவனது தலையை இதமாய் வருடிக்கொடுக்க.. அந்த நெருக்கடி எல்லாம் மறந்துபோய்.. கவலையெல்லாம் தீர்ந்து போனது போன்ற உணர்வுடன்.. மனதெல்லாம் நிம்மதி நிறைய ஆரம்பிக்க.. கொஞ்சம் கொஞ்சமாய் நித்திரையில் மூழ்கிப் போனான்..!!
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 19-05-2019, 12:20 PM



Users browsing this thread: 6 Guest(s)