19-05-2019, 10:06 AM
ஆன்ட்டி ரொம்ப தேங்க்ஸ்!' - ஆதரவற்ற குழந்தைகளால் நெகிழ்ந்த சென்னை போலீஸ் அதிகாரி
சென்னை தாம்பரத்தில் உள்ள காப்பகத்துக்குச் சென்ற போலீஸ் இணை கமிஷனர் மகேஸ்வரியைப் பார்த்த மாணவிகள், `ஆன்ட்டி உங்களால் நாங்கள் ஹேப்பியாக இருக்கோம்' என்று கூறினர். அதைக்கேட்ட இணை கமிஷனர் மகேஸ்வரி சந்தோஷமடைந்தார்.
சென்னை தாம்பரம் லோகநாதன் தெருவில் செயல்படும் காப்பகத்தில் 100 மாணவ, மாணவிகள் உள்ளனர். ஸ்கூல் திறப்பதையொட்டி காப்பகத்தில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு உதவி செய்ய தாம்பரம் சரக காவல்துறையினர் முடிவு செய்தனர். இதையடுத்து தாம்பரம், குரோம்பேட்டை காவல் நிலையத்தில் உள்ள காவலர்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் தங்களால் முடிந்த பணத்தைக் கொடுத்தனர். அதன்மூலம் 100 மாணவ, மாணவிகளுக்குத் தேவையான ஸ்கூல் பேக், வாட்டர் பாட்டில், நோட்டு புத்தகம், பேனா, பென்சில் ஆகியவற்றை வாங்கினர். தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கும் விழா இன்று நடந்தது.
இணை கமிஷனர் மகேஸ்வரி மாணவ, மாணவிகளுக்குக் கல்வி உபகரணங்களை வழங்கினார். அப்போது அதை வாங்கிய மாணவி ஒருவர், ஆன்ட்டி உங்களால் நாங்கள் ஹேப்பியாக இருக்கிறோம்,தேங்க்ஸ் என்று கூறினார். மேலும், நீங்கள் இங்கு அடிக்கடி வர வேண்டும். நீங்கள்தான் எங்களுக்கு ஒரு ரோல்மாடல் என்று மாணவ, மாணவிகள் கூறினர். அதைக்கேட்ட இணை கமிஷனர் மகிழ்ச்சியடைந்தார். கண்டிப்பாக நான் இந்தக் காப்பகத்துக்கு அடிக்கடி வருவேன். எங்களால் முடிந்த உதவிகளை உங்களுக்கு செய்வோம் என்று இணை கமிஷனர் மகேஸ்வரி தெரிவித்தார். இந்த விழாவில் துணை கமிஷனர் முத்துசாமி, உதவி கமிஷனர் அசோகன், இன்ஸ்பெக்டர்கள் சந்துரு, மோகன்ராஜ் உட்பட காவலர்கள் கலந்துகொண்டனர்.
காப்பகத்தின் நிர்வாகி பாஸ்கர் கூறுகையில், ``சென்னை காவல்துறை, மனிதநேயத்தோடு செயல்பட்டுவருகிறது. கடந்த தீபாவளி பண்டிகையையொட்டி காப்பகத்தில் உள்ளவர்களுக்கு பட்டாசு, ஸ்வீட், டிரஸ் ஆகியவற்றைக் கொடுத்தனர். தற்போது, ஸ்கூல் திறப்பதையொட்டி கல்வி உபகரணங்களை வாங்கிக் கொடுத்துள்ளனர். காப்பகத்தில் உள்ளவர்களில் பலருக்கு தங்களின் பெற்றோர் யாரென்றே தெரியாது. ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்பதற்கு ஏற்ப இங்குள்ளவர்களின் மகிழ்ச்சியில் காவலர்களின் அன்பைப் பார்க்கிறேன்" என்றார்.
காவல்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``காப்பகத்தில் தங்கியிருந்து படிக்கும் மாணவ, மாணவிகளுக்குத் தேவையான உதவிகளை செய்ய திட்டமிட்டோம். அதுதொடர்பாக தாம்பரம், குரோம்பேட்டை ஆகிய காவல் நிலையங்களில் பணியாற்றுபவர்களுடன் ஆலோசித்தோம். உடனடியாகக் காவலர்கள் தங்களால் முடிந்த பணத்தைக் கொடுத்தனர். அதைக்கொண்டு ஸ்கூல் பேக், நோட்டு புத்தகம் உள்ளிட்ட பொருள்களை வாங்கினோம். வெளியில் யாரிடமும் உதவி கேட்கவில்லை. இங்கு தங்கியிருக்கும் 4 பேர் நர்ஸிங் படிக்கின்றனர். ஒரு மாணவன், கல்லூரிக்குச் செல்ல உள்ளார். அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்வது தொடர்பாக ஆலோசித்துவருகிறோம். காவல்துறையின் பணி, குற்றங்களைத் தடுப்பதும் குற்றவாளிகளைப் பிடிப்பதும் மட்டுமல்ல. சமூகசேவைகளில் ஈடுபடுவதும் காவல்துறையின் கடமைதான். மனிதநேயத்தோடு நாங்கள் இந்த உதவிகளைச் செய்துள்ளோம்" என்றார்.
சென்னை தாம்பரத்தில் உள்ள காப்பகத்துக்குச் சென்ற போலீஸ் இணை கமிஷனர் மகேஸ்வரியைப் பார்த்த மாணவிகள், `ஆன்ட்டி உங்களால் நாங்கள் ஹேப்பியாக இருக்கோம்' என்று கூறினர். அதைக்கேட்ட இணை கமிஷனர் மகேஸ்வரி சந்தோஷமடைந்தார்.
சென்னை தாம்பரம் லோகநாதன் தெருவில் செயல்படும் காப்பகத்தில் 100 மாணவ, மாணவிகள் உள்ளனர். ஸ்கூல் திறப்பதையொட்டி காப்பகத்தில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு உதவி செய்ய தாம்பரம் சரக காவல்துறையினர் முடிவு செய்தனர். இதையடுத்து தாம்பரம், குரோம்பேட்டை காவல் நிலையத்தில் உள்ள காவலர்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் தங்களால் முடிந்த பணத்தைக் கொடுத்தனர். அதன்மூலம் 100 மாணவ, மாணவிகளுக்குத் தேவையான ஸ்கூல் பேக், வாட்டர் பாட்டில், நோட்டு புத்தகம், பேனா, பென்சில் ஆகியவற்றை வாங்கினர். தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கும் விழா இன்று நடந்தது.
இணை கமிஷனர் மகேஸ்வரி மாணவ, மாணவிகளுக்குக் கல்வி உபகரணங்களை வழங்கினார். அப்போது அதை வாங்கிய மாணவி ஒருவர், ஆன்ட்டி உங்களால் நாங்கள் ஹேப்பியாக இருக்கிறோம்,தேங்க்ஸ் என்று கூறினார். மேலும், நீங்கள் இங்கு அடிக்கடி வர வேண்டும். நீங்கள்தான் எங்களுக்கு ஒரு ரோல்மாடல் என்று மாணவ, மாணவிகள் கூறினர். அதைக்கேட்ட இணை கமிஷனர் மகிழ்ச்சியடைந்தார். கண்டிப்பாக நான் இந்தக் காப்பகத்துக்கு அடிக்கடி வருவேன். எங்களால் முடிந்த உதவிகளை உங்களுக்கு செய்வோம் என்று இணை கமிஷனர் மகேஸ்வரி தெரிவித்தார். இந்த விழாவில் துணை கமிஷனர் முத்துசாமி, உதவி கமிஷனர் அசோகன், இன்ஸ்பெக்டர்கள் சந்துரு, மோகன்ராஜ் உட்பட காவலர்கள் கலந்துகொண்டனர்.
காப்பகத்தின் நிர்வாகி பாஸ்கர் கூறுகையில், ``சென்னை காவல்துறை, மனிதநேயத்தோடு செயல்பட்டுவருகிறது. கடந்த தீபாவளி பண்டிகையையொட்டி காப்பகத்தில் உள்ளவர்களுக்கு பட்டாசு, ஸ்வீட், டிரஸ் ஆகியவற்றைக் கொடுத்தனர். தற்போது, ஸ்கூல் திறப்பதையொட்டி கல்வி உபகரணங்களை வாங்கிக் கொடுத்துள்ளனர். காப்பகத்தில் உள்ளவர்களில் பலருக்கு தங்களின் பெற்றோர் யாரென்றே தெரியாது. ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்பதற்கு ஏற்ப இங்குள்ளவர்களின் மகிழ்ச்சியில் காவலர்களின் அன்பைப் பார்க்கிறேன்" என்றார்.
காக்கிக்குள்ளும் ஈரம் இருப்பதைக் காவல்துறையில் பணியாற்றும் பலர் நிரூபித்து வருகின்றனர். கோட்டூர்புரத்தில் உள்ள தலைமைக் காவலர், சம்பள பணத்தில் கல்வி உதவிகளைச் செய்துவருகிறார். அதுபோல இன்ஸ்பெக்டர் சரவணபிரபு ஆண்டுதோறும் உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு உதவிகளைச் செய்துவருகிறார். தற்போது, தாம்பரம் காவல் சரகத்தில் உள்ளவர்கள் ஆதரவற்ற 100 மாணவ, மாணவிகளுக்கு உதவிகளைச் செய்துள்ளனர்.