Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
`தேர்தல் ஆணையர்கள் ஒரே கருத்துடன் இருக்கவேண்டிய அவசியமில்லை!’ - சுனில் அரோரா
இந்திய தேர்தல் ஆணையம் ஒரு தலைமைத் தேர்தல் ஆணையர், இரண்டு தேர்தல் ஆணையர்கள் என மூன்று பேர் கொண்ட அமைப்பு. தேர்தல் ஆணையத்தின் முக்கிய முடிவுகள், தேர்தல் நடத்தை விதி மீறல் புகார்கள் மீதான நடவடிக்கைகள் தொடர்பாக இந்த மூன்று தேர்தல் ஆணையர்கள் கொண்ட குழுதான் இறுதி முடிவு எடுக்கும். தேர்தல் ஆணையத்தின் அனைத்து இறுதி முடிவுகளும் முடிந்தவரையில் ஒருமனதாக இருக்க வேண்டும் ஒருவேளை தேர்தல் ஆணையர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால் பெரும்பான்மை அடிப்படையில் முடிவுகள் தீர்மானிக்கப்படும் என்று தேர்தல் ஆணைய விதிமுறைகள் கூறுகின்றன.
[Image: 120_14052.jpg]
தேர்தல் ஆணையத்தின் அனைத்து முடிவுகளும் பெரும்பாலும் ஒருமனதாகவே எடுக்கப்படுகின்றன. தற்போது ஏழாவது கட்டமாக நடைபெற்று வருகிற பொதுத் தேர்தலில் தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்குச் சாதகமாக ஒருதலைப்பட்சமாகச் செயல்பட்டு வருவதாக அனைத்து எதிர்க்கட்சிகளும் முன்னாள் தேர்தல் ஆணையர்களுமே குற்றம் சாட்டி வருகின்றனர். தேர்தல் நடத்தை விதிகளை மீறும் விதத்தில் பிரசாரம் செய்ததற்காக மாயாவதி, யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட அரசியல்வாதிகளுக்குத் தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட நாள்கள் பிரசாரம் செய்ய தடைவிதித்தது. ஆனால், பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க தலைவர் அமித் ஷா மீதும் இருந்த அதே போன்ற புகார்களில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. 


[Image: 1238_14179.jpg]
தேர்தல் பிரசாரத்தில் மதத்தைப் பயன்படுத்தியது பாதுகாப்புப் படைகளைப் பயன்படுத்தி தேர்தலில் வாக்குகள் கேட்டது எனப் பிரதமர் நரேந்திர மோடி மீது பல புகார்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அந்தப் புகார்களின் மீது நடவடிக்கை எடுத்த தேர்தல் ஆணையம் பிரதமர் மோடியும் பா.ஜ.க தலைவர் அமித் ஷாவும் எந்தவொரு தேர்தல் நடத்தை விதிகளையும் மீறவில்லை என அனைத்துப் புகார்களையும் தள்ளுபடி செய்து சான்றளித்தது. இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் முடிவுகள் ஒருமனதாக எடுக்கப்படவில்லை என்றும் பெரும்பான்மை அடிப்படையிலே எடுக்கப்பட்டதாகவும் செய்திகள் வந்தன. தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா பிரதமருக்கு ஆதரவாகக் கருத்து தெரிவிக்க மற்றுமொரு தேர்தல் ஆணையர் அசோக் லாவாசா அந்தக் கருத்தில் முரண்பட்டு பிரதமருக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். தேர்தல் ஆணையத்தின் இறுதி உத்தரவில் அசோக் லாவாசாவின் மாற்றுக் கருத்துகள் பதிவு செய்யப்படவில்லை.
[Image: 1237_14471.jpg]
தேர்தல் ஆணையத்தின் இறுதி உத்தரவில் தன்னுடைய மாற்றுக் கருத்தைப் பதிவு செய்வது விதி என்றும் அதைக் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் எனக்கோரி தலைமைத் தேர்தல் ஆணையருக்கு அசோக் லாவாசா பலமுறை கடிதம் எழுதியுள்ளார். இதில் எந்தக் கடிதத்துக்கும் சரியான பதில் கிடைக்காததால் தேர்தல் ஆணையர்களின் கூட்டத்தில் கலந்துகொள்ள அசோக் லாவாசா மறுத்துவிட்டதாகச் செய்திகள் வரத்தொடங்கின.
[Image: 1236_14056.jpg]
தற்போது அதற்கு விளக்கம் தெரிவித்து தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “தேர்தல் ஆணையர்கள் அனைவரும் ஒரே கருத்துடன் இருக்க வேண்டியது அவசியமில்லை. கடந்த காலங்களிலுமே பலமுறை தேர்தல் ஆணையர்கள் கருத்து முரண்பட்டுள்ளனர். ஆனால், இவை பெரும்பாலும் தேர்தல் ஆணையத்தின் உள் விவகாரங்களாகவே இருந்து வந்துள்ளன. தேர்தல் சமயம் முடிந்த பிறகு அல்லது தேர்தல் ஆணையர்களின் ஓய்வுக்குப் பிறகுதான் இதுபோன்ற தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆனால், தற்போது தேர்தல் சமயத்தில் தேவையற்ற சர்ச்சை உருவாக்கப்படுகிறது. இது இயல்பானதே. 14-ம் தேதி நடைபெற்ற தேர்தல் ஆணையக் கூட்டத்தில் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் 13 என ஒருமனதாகக் கண்டறியப்பட்டுள்ளன. அதில் தேர்தல் நடத்தை விதிகளும் ஒன்று என்றார்.”
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 19-05-2019, 09:54 AM



Users browsing this thread: 100 Guest(s)