Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
தாய், தந்தை, தம்பி எரித்துக்கொலை :'ஏசி வெடிப்பு' நாடகமாடிய அ.தி.மு.க. பிரமுகர் மனைவியுடன் கைது
[Image: Tamil_News_large_2279080.jpg]
திண்டிவனம், சொத்துக்காக தாய் தந்தை மற்றும் சகோதரனை எரித்துக் கொலை செய்து 'ஏசி' வெடித்து இறந்ததாக நாடகமாடிய அ.தி.மு.க. பிரமுகர், அவரது மனைவியை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தைச் சேர்ந்தவர் ராஜ் 60; இவரது மனைவி கலைச்செல்வி 55; இவர்களது மகன்கள் கோவர்த்தனன் 30; கவுதமன் 26; கோவர்த்தனன் அ.தி.மு.க. நகர மாணவர் அணி தலைவராக உள்ளார். இவரது மனைவி தீபகாயத்ரி 27.
கடந்த 15ம் தேதி ராஜ், கலைச்செல்வி, கவுதம் ஆகியோர் தீயில் கருகிய நிலையில் இறந்து கிடந்தனர். மற்றொரு அறையில் இருந்த கோவர்த்தனன், அவரது மனைவி தீபகாயத்ரி உயிர் தப்பினர்.
'ஏசி' வெடித்து அதனால் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பேரும் இறந்ததாக கூறப்பட்டது.
சந்தேகம்
ஆனால் ராஜ் உடலில் வெட்டுக் காயம், ரத்தக்கசிவு, மூன்று பேரும் இறந்து கிடந்த ஹாலில் பெட்ரோல் வாசனை ஆகியவை போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
கோவர்த்தனனிடம் தீவிர விசாரணை நடத்தினர். அவர் மூவரையும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
எஸ்.பி. ஜெயக்குமார் கூறியதாவது:
ராஜ் குடும்பத்திற்கு பல கோடி ரூபாய் சொத்துகள் உள்ளன. கோவர்த்தனன் பல தொழில்கள் நடத்தி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தற்போது இரண்டு கார்களை வைத்து டிராவல்ஸ் நடத்தி வருகிறார். அவர் மேலும் பணம் கேட்ட போது பெற்றோர் தர மறுத்துவிட்டனர். 
7 மாதங்களுக்கு முன் இவரது திருமணம் எளிமையாக நடந்தது. 
தற்போது கவுதமிற்கு ஆடம்பரமாக திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்துள்ளனர். தம்பிக்கே வீட்டில் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதால் ஆத்திரமடைந்த கோவர்த்தனன் மூன்று பேரையும் தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளார். 
15ம் தேதி 3 பீர்பாட்டில்களில் பெட்ரோலை நிரப்பி பெற்றோர், தம்பி துாங்கிய அறையில் வீசியுள்ளார். வெளியே வந்துவிடாமல் இருக்க அறைக்கதவுகளையும் பூட்டிவிட்டார். 
சற்று நேரத்திற்குப்பின் திறந்தபோது ராஜ் தீக்காயத்துடன் வெளியே வந்துள்ளார். 
அவரை கத்தியால் கழுத்தில் வெட்டி கோவர்த்தனன் கொலை செய்துள்ளார். மூன்று கொலைகளையும் கணவர் செய்தது தெரிந்தும் தீபகாயத்ரி உடந்தையாக இருந்துள்ளார். அதனால் அவரையும் கைது செய்துள்ளோம், என்றார். 
தீபகாயத்ரி, 3 மாத கர்ப்பமாக உள்ளார். அவரை திண்டிவனம் இரண்டாவது குற்றவியல் நடுவர் நளினிதேவி முன் ஆஜர்படுத்திபடுத்தி சிறையில் அடைத்தனர்.
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 19-05-2019, 09:50 AM



Users browsing this thread: 47 Guest(s)