19-05-2019, 09:46 AM
பணம் புகழைக்காட்டிலும் மரியாதை ரொம்ப முக்கியம் - காஞ்சனா ரீமேக்கில் இருந்து ராகவா லாரன்ஸ் விலகல்
ஃபர்ஸ்ட் லுக் வெளியான வேகத்தில் தனது இந்தி படத்திலிருந்து வெளிவந்துள்ளார் இயக்குநர் நடிகர் ராகவா லாரன்ஸ்
இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அக்ஷய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். . அக்ஷய் குமார், கண்ணுக்கு மையிடுவது போல் போஸ்டர் வடிவமைக்கப்பட்டிருந்தது. பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் தயாரித்துக்கொண்டிருக்கும் இப்படம் அடுத்த வருடம் ஜூன் 5ஆம் தேதி ரிலீஸாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஃபர்ஸ்ட் லுக் வெளியான வேகத்தில் தனது இந்தி படத்திலிருந்து வெளிவந்துள்ளார் இயக்குநர் நடிகர் ராகவா லாரன்ஸ்
தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக ரசிகர்களின் ஆதரவு பெற்ற சீரிஸ் திரைப்படம் 'காஞ்சனா' . முந்தைய படங்களான 'காஞ்சனா- 1', 'காஞ்சனா- 2' படங்களைக் காட்டிலும் அதிக ரசிகர்களை கவர்ந்து 'காஞ்சனா-3' ஸ்லீப்பிங் ஹிட் ஆகியுள்ளது. இந்நிலையில், ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் தமிழில் ஹிட் அடித்த 'காஞ்சனா'வின் முதல் பாகத்தை இந்தியில் ரீமேக் செய்ய நடிகர் அக்ஷய் குமார் முடிவெடுத்தார். அந்த படத்தை இயக்கும் வேலையை லாரன்சிடமே கொடுத்தார். வீரம், விவேகம்,விஸ்வாசம் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக இருந்த வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். 'லக்ஷ்மி பாம்ப்' என்று பெயர் வைக்கப்பட்டுப் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வந்தது.
கியாரா அத்வானி ஹீரோயினாக நடிக்கும் படத்தில் சரத்குமார் நடித்த திருநங்கை கேரக்டரில் அமிதாப் பச்சன் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. முறையான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. தமிழிலிருந்து எட்டு வருடங்கள் கழித்து இந்தப் படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அக்ஷய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். . அக்ஷய் குமார், கண்ணுக்கு மையிடுவது போல் போஸ்டர் வடிவமைக்கப்பட்டிருந்தது. பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் தயாரித்துக்கொண்டிருக்கும் இப்படம் அடுத்த வருடம் ஜூன் 5ஆம் தேதி ரிலீஸாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் விஷயம் தனக்கு தெரிவிக்கப்படவில்லை. தன்னைக் கேட்டு அலோசித்தும் செய்யவில்லை என தனது வருத்தத்தை பதிவு செய்துள்ள லாரன்ஸ் இப்படத்திலிருந்து விலகுவதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து லாரன்ஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது என்னவென்றால் " மதியாதார் தலைவாசல் மிதியாதே என்ற தமிழ் முதுமொழி ஒன்று உள்ளது அதன் படி நான் 'லக்ஷ்மி பாம்ப் படத்திலிருந்து வெளியேறவுள்ளேன். பணம்,பெயர், புகழைக் காட்டிலும் சுயமரியாதை என்பது இந்த உலகத்தில் மனிதனுக்கு மிகவும் முக்கியமானது.
இப்படத்திலிருந்து வெளியேறுவதற்கு நிறைய காரணங்கள் உள்ளது. முக்கியமான ஒன்று ஃபர்ஸ்ட்லுக். என் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளிவந்ததை மூன்றாவது ஆள் சொல்லிக் கேட்டேன். இந்த ஃபர்ஸ்ட் லுக் எனது கவனத்திற்கு கொண்டு வராமலேயே வெளியிடப்பட்டுள்ளது. அந்த போஸ்டரின் டிசைனும் திருப்தியளிக்கவில்லை. தனது படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியாவதை இன்னொருவர் மூலம் அறிந்து கொள்வது ஒரு இயக்குநருக்கு மிகுந்த வேதனையளிக்கக்கூடிய ஒன்று.நான் மிகுவும் அவமதிக்கப்பட்டதாகவும் ஏமாற்றப்பட்டதாகவும் நினைக்கிறேன். இந்த கதை படமாவதை நான் தடுக்கமுடியாது, அது தொழில் நேர்மையும் அல்ல. அக்ஷய் குமார் சார் நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். சீக்கிரமே அவரை பார்த்து இக்கதையைக் கொடுத்துவிடுவேன். இந்த மாதிரி விஷயம் வேறு எந்த இயக்குநருக்கும் நடக்கக்கூடாது.' என்று தெரிவித்துள்ளார்