Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
விஜய் சேதுபதி கதை எழுதி, தயாரிக்கும் ‘சென்னை பழனி மார்ஸ்’
[Image: vijay-sethupathijpg]

விஜய் சேதுபதி தயாரிக்கும் படத்துக்கு ‘சென்னை பழனி மார்ஸ்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதன் கதையையும் விஜய் சேதுபதி எழுதியுள்ளார்.
விஜய் சேதுபதி நடிப்பில், பிஜு விஸ்வநாத் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு ரிலீஸான படம் ‘ஆரஞ்சு மிட்டாய்’. ‘கைலாசம்’ என்ற வயதான கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்தார். மேலும், ‘விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ்’ சார்பில் இந்தப் படத்தையும் அவரே தயாரித்தார்
இதுதவிர, இந்தப் படத்தின் கதையை பிஜு விஸ்வநாத்துடன் சேர்ந்து விஜய் சேதுபதியும் எழுதினார். ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங்கையும் பிஜு விஸ்வநாத் கவனிக்க, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்தார். விமர்சகர்களிடையே  இந்தப் படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில், இந்தக் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளது. இந்தப் படத்துக்கு ‘சென்னை பழனி மார்ஸ்’ எனத் தலைப்பு வைத்துள்ளனர். பிஜு விஸ்வநாத் இயக்கவுள்ள இந்தப் படத்தின் கதையை, விஜய் சேதுபதி - பிஜு விஸ்வநாத் இணைந்து எழுதியுள்ளனர்.
‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்தைப் போலவே இந்தப் படத்தின் ஒளிப்பதிவு மற்றும் எடிடிங்கையும் பிஜு விஸ்வநாத்தே கவனிக்கிறார்.
மேலும், இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். ஆனால், இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவில்லை. முதன்மைக் கதாபாத்திரங்களில் புதுமுகங்கள் நடிக்கின்றனர். நிரஞ்சன் பாபு இசையமைக்கும் இந்தப் படத்தில், 6 பாடல்களையும் விக்னேஷ் ஜெயபால் எழுதியுள்ளார். இந்தப் படத்தின் இசை உரிமையை திங்க் மியூஸிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
வருகிற 22-ம் தேதி இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடுகிறார் விஜய் சேதுபதி.
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 19-05-2019, 09:42 AM



Users browsing this thread: 3 Guest(s)