19-05-2019, 02:02 AM
(This post was last modified: 02-08-2025, 10:16 AM by Navki. Edited 1 time in total. Edited 1 time in total.)
"ஓ யெஸ். எவ்வளவு?" என்றான்.
அந்த பிரெண்டு வாழ்க என்று மனதுக்குள் வாழ்த்தினான்.
"ஜஸ்ட் ஹண்ட்ரெடுதான்" இளநீலக் கலர் சுடிதாரில் இருந்த அவள் புன்னகை மின்னலாக ஜொலித்தது.
அவன் உடனே பணத்தை எடுத்து அவளிடம் நீட்டினான்.
அவள் இரண்டு டிக்கெட்களை வைத்திருந்தாள். அதிலிருந்து ஒன்றை பிரித்து அவனிடம் நீட்டினாள்.
பரவசத்துடன் வாங்கினான்.
"உங்களுக்கு?" என்று அவள் கையை பார்த்துக் கொண்டே கேட்டான் .
கையில் இருந்த இன்னொரு டிக்கெட்டைக் காண்பித்தாள்.
"இருக்கு "
முத்துப் போன்ற அவளின் அழகான வெள்ளைப் பல்வரிசைப் புன்னகை அவனைச் சுண்டி இழுத்தது.
"ஓ.. பட் நீங்க படம் பாக்கலையா?"
"பாக்கனும்" தன் வியாபாரம் முடிந்து விட்டது என்பதைப் மோல உடனே அங்கிருந்து நகர்ந்து வேகமாகப் போனாள்.
அவன் அவளின் பின்னழகு அசைவுகளை ரசித்து வெறித்தான்.
அவள் அவனை திரும்பிக் கூட பார்க்கவே இல்லை. ஆனாலும் அவளின் வாலிப அழகில் அவன் உள்ளம் கொள்ளை போனது.