அவிழும் முடிச்சுகள் !!
மேனகா அன்று நடந்த எல்லாவற்றையும் நினைத்து பார்க்க , மனோ கொலை பண்ண வேண்டிய ஞாயம் அவளுக்கு புரிந்தது ...



அப்போ மனோ தான் கொலை பண்ணதா ? மேனகா கேள்வியில் மூழ்க , இன்ஸ்பெக்டர் கார்த்திக்கு அந்த அதிர்ச்சியான தகவலும் வந்து சேர்ந்தது !



சப் இன்ஸ்பெக்டர் முரளி கொல்லப்பட்டான் !



வாட் எப்படி எங்க ?



சார் அவர் மட்டும் கொல்லப்படல , கூடவே சித்ராவும் . ஹெட் கான்ஸ்டபிள் எல்லா தகவலையும் கொட்ட , கொலைகாரனுக்கு வெறி ஜாஸ்தி ஆகிடிச்சோ ?


ஓகே இமிடியட்டா இந்த நம்பரை ட்ரெஸ் பண்ணுங்க உடனடியா டிராக் பண்ணி அரெஸ்ட் பண்ணுங்க !! கமிஷனர்கிட்ட நான் பேசுறேன் , கூடுதல் ஃபோர்ஸ் இப்பவே ஏற்பாடு ஆகும் ...


அடுத்த நொடி கமிஷனருக்கு கால் பண்ண ஓரளவுக்கு ரஃப் ஸ்கெட்ச் என்னன்னு சொல்லி உடனடியாக ஒரு டீம் ஏற்பாடு பண்ண சொல்ல, காக்கிகள் மனோவை தேடி சென்னையை சலிக்க தொடங்கியது !!


பரப்பரப்பின் உச்சத்தை அடைந்த இன்ஸ்பெக்டர் கார்த்தியிடம் மெல்ல மேனகா ... சார் அப்படின்னா ரவியை கொன்னுட்டாங்களா ? அதுக்கு தான் இப்படி வெறி கொண்டு தேடுறீங்களா ? ரவி பெரிய பணக்காரன் அதான் இப்படி பறக்குறீங்க இதே ஒரு சாதாரண ஆளு செத்துருந்தா இப்படியா ஆளா பறப்பீங்க ??


மேனகாவின் கேள்வி கார்த்தியின் மூளையை தாக்க , அப்படியே சோபாவில் சரிந்து உக்கார்ந்து விட்டான் !! அப்படின்னா ரவி சாக வேண்டிய காரணம் எதோ மேனகாவிடம் உள்ளது !! மெல்ல தன் விசாரணையை ஆரம்பித்தான் ஆய்வாளன் கார்த்தி !!



மேடம் உங்களுக்கு தெரிந்த எல்லா உண்மைகளையும் சொல்லிடுங்க மனோ தப்பே பண்ணிருந்தாலும் அவன் பக்கம் ஞாயம் இருந்தால் என்னால ஆனா உதவியை நான் செய்கிறேன் ..


சொல்லப்போனா மனோவை முழுசா காப்பாற்றவே நான் தயாராக இருக்கிறேன் !!


மனசு வெறுத்துப்போன மேனகா , தனக்கு தெரிந்த எல்லா உண்மைகளையும் சொல்ல அப்படின்னா நீங்க மனோவின் டீச்சரா ?


ஆமா சார் !!


அன்னைக்கு ஹோட்டலில் ... ஓகே அப்புறம் என்னாச்சு ?
[+] 3 users Like dannyview's post
Like Reply


Messages In This Thread
RE: அவிழும் முடிச்சுகள் !! - by dannyview - 09-02-2022, 05:09 AM



Users browsing this thread: 37 Guest(s)