தாயின் துரோகம்
தீபக் பக்கத்துவீட்டு பையனுடன் விளையாடுவதை மாதவி அவர்களுக்கு தெரியாமல் சற்று மறைவில் இருந்து பார்த்தால் அங்கே தீபக் பக்கத்து வீட்டு பையன் குமாருடன் விளையாடிக் கொண்டிருந்தான்..

அவன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான் அப்பொழுது குமார் தீபக் என்ன இன்னைக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்க டெய்லி அழுது வடிந்த முகமா தானே இருப்பேன்னு கேட்டான் அதற்கு தீபக் நான் இனி அப்படி இருக்க மாட்டேன் நான் நேத்து எங்க அப்பாவை பார்த்தேன் எங்க அப்பா எவ்வளவு தெரியுமா பெரிய ஹீரோ மாதிரி இருப்பாரு உங்க அப்பாவை விட பெரிய ஆளா இருப்பாரு எங்க அப்பா இன்னும் கொஞ்ச நாள்ல எங்க வந்து என்ன அவருடைய கூட்டிட்டு போயிருவாரு நான் அவரோட ஜாலியா இருப்பேன் அப்படின்னு சொன்னான் ..அதற்கு குமார் அப்போ நீங்க என்கூட ஸ்கூல்ல படிக்க மாட்டியா என்று கேட்டான் அதற்கு தீபக் நான் இனி உன் கூட இருக்க மாட்டேன் நீ உன் தங்கச்சி பாப்பா கூட என்ன விளையாட விட மாட்டேங்குற நான் எங்க அப்பாகிட்ட எனக்கு புது தங்கச்சி பாப்பா வேணும்னு கேட்டேன் அப்புறம் எனக்கு வாங்கித் தருவார் ...
நான் அப்பா தங்கச்சி பாப்பா எல்லாரும் ஒண்ணா இருப்போம் பொது அம்மா கூட அப்பாட்ட சொல்லி வாங்கி பயன் எனக்கு இந்த அம்மா பிடிக்கல பொது அம்மா என்ன ரொம்ப கேர் பண்ணி பாப்பாங்க நாங்க சந்தோசமா இருப்போம்னு சொன்னான்



மாதவிக்கு தான் செய்த பாவம் தனக்கு எதிராக திரும்பி வருகிறது என்று உணர்ந்தாள் எனவே திரும்பி வீட்டுக்குள் சென்றால் அங்கு ஏற்கனவே பாண்டியும் சரண்யாவும் டைனிங் ஹாலில் அவளுக்காக காத்து இருந்தார்கள் ...அவர்களுடன் சேர்ந்து அவளும் சாப்பிட அமர்ந்தாள் சாப்பிடும் போது தான் இனி வேலைக்கு செல்ல இருப்பதாக சொன்னாள் அதற்கு சரண்யா நமக்கு பணத்திற்கு என்ன பஞ்சமா நீ ஏன் வேலைக்கு செல்ல வேண்டும் என்று சொல்கிறாய் வீட்டிலிருந்தே ஏதாவது சின்ன சின்ன வேலைகளை செய்து கொண்டிரு என்றால் ..

அதற்கு அவள் எனக்கு வீட்டில் இருக்க போர் அடிக்கிறது நான் வேலைக்கு சென்றால் தான் மனது கொஞ்சம் இலகுவாக இருக்கும் என்றாள் சரண்யாவும் சரி கொஞ்ச காலம் போய் வா என்றாள் சரண்யா அவனை கொஞ்ச காலம் விட்டு பிடிக்க வேண்டும் என்று மனதில் தீர்மானித்தாள் காலை நேரத்தில் மாதவி வெளியே கிளம்பி போனாள் தன்னுடைய சான்றிதழ்களையும் கொண்டு சென்றாள் பல இடங்களில் வேலை தேடி அலைந்தார் எங்கும் கிடைக்கவில்லை..

இறுதியாக ஒரு ஷாப்பிங் காம்ப்ளக்சில் கணக்கு வழக்குகளை செய்ய ஒரு ஆள் தேவை என்ற விளம்பரம் அவள் கண்ணில் பட்டது ஆக்கவுண்ட்ஸ் படித்து இருந்தால் அந்த வேலை கிடைக்கும் என உள்ளே சென்று கேட்டுப் பார்த்தால் அங்கு ஒரு பெண் அமர்ந்திருந்தாள் அவள் அவளுடைய சான்றிதழ்களை வாங்கி பார்த்தாள் பார்த்துவிட்டு நானும் எங்கு வேலை தான் செய்கிறேன் என் பெயர் ராணி இந்த ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் ஓனர் வெளியூரில் இருக்கிறார் அவர் இன்னும் மூன்று மாதங்களில் இங்கே வருவார் நானும் இங்கே சேர்ந்து ஒரு மாதம் தான் ஆகிறது நீங்கள் கொஞ்ச நேரம் வெளியே அமர்ந்திரு நான் அவருடன் போனில் பேசிவிட்டு அவர் சரி என்றால் நீங்கள் எங்கே வேலை செய்யுங்கள் என்றாள் ..

அவளும் வெளியே சென்று காத்திருந்தாள் உள்ளே ராணி விஜய்க்கு போன் செய்தாள் தற்பொழுது ஒரு பெண் கணக்கு வழக்குகளை பார்ப்பதற்காக நாம் விளம்பரம் செய்து இருந்ததை பார்த்து விட்டு வந்திருக்கிறாள் அவளுடைய சான்றிதழ்களை பார்த்தேன் நன்றாக தான் உள்ளது நீங்கள் பார்த்துவிட்டு ஓகே சொன்னால் வேலைக்கு எடுத்து விடலாம் என்றால் அதற்கு விஜய் நான் வர மூன்று மாதம் ஆகும் நீ தான் அங்கு வேலை செய்கிறாய் உனக்கு அவளுடன் வேலை செய்வதற்கு விருப்பம் என்றால் அவளை சேர்த்துக்கொள் நான் வந்து பார்க்கும் பொழுது எனக்கு பிடித்திருந்தால் தொடர்ந்து வேலையை பார்க்கட்டும் அவளிடம் தற்காலிகமாக தான் இந்த வேலைக்கு எடுத்துள்ளோம் என்று பேரை சொல்லி விடு நான் வந்து பிறகு பார்க்கிறேன் என்றான் உடனே ராணியும் சரி என்றாள்..

பிறகு ராணி மாதவியை உள்ளே அழைத்து விஜய் கூறியதை அவளிடம் சொன்னாள் இவ்வாறாக மாதவியும் விஜயின் காம்ப்ளக்சில் அவளுக்கு தெரியாமலேயே வேலைக்கு சேர்ந்தாள் ஒரு மாதம் கழிந்தது ஒருநாள் காலையில் சற்று தாமதமாக வேலைக்கு கிளம்பினார் அவள் ஏற்கனவே அதை ராணியிடம் கூறியிருந்தால் வெளியே வந்தவள் தீபக் மட்டும் தனியாக இருப்பதை பார்த்தாள் எப்படியும் அவன் அவளை மதித்து பேச மாட்டான் என்பது அவளுக்கு தெரியும் இருந்தாலும் பெற்ற மனதால் அதை ஒதுக்க முடியவில்லை எனவே அருகில் சென்று ஏன் இங்கே தனியாக இருக்கிறாய் உன்னுடன் விளையாட வருவானே குமார் அவன் எங்கே என்றாள் தீபக் வேறு பக்கமாக பார்த்துக்கொண்டு அவன் ஸ்கூலுக்கு போயிட்டான் இனி சாயங்காலம் தான் வருவா நான் சாயங்காலம் அவனுடன் விளையாடுவேன் என்றான்

அதற்கு மாதவி நானும் உன்னை ஸ்கூலில் சேர்த்து விடுகிறேன் நீ போகிறாயா என்று கேட்டாள் தீபத்திற்கு சந்தோஷமாக இருந்தது இருந்தாலும் தான் இங்கு ஸ்கூலுக்கு போனால் அப்பா வந்த பிறகு அவருடன் போக முடியாது அதனால் நான் போகவில்லை அப்பா வந்த பிறகு அவருடன் சென்று அவர் சேர்த்துவிடும் ஸ்கூலில் நான் படிப்பேன் என்றான் மாதவிக்கு மனதுக்கு சங்கடமாக இருந்தது ஏனென்றால் விஜய் தீபக்கை ஏற்றுக் கொள்வாரா என்பது சந்தேகமே ஆனால் தீபக் மனதில் பல்வேறு கற்பனைகளை வடித்து வைத்திருக்கிறான் எல்லாம் தன்னால்தான் இனி என்ன செய்வது என்று யோசித்தாள் பிறகு தீபத்தை நோக்கி பரவாயில்லை தீபக் நான் உன்னை நாளைக்கு ஸ்கூலில் சேர்த்து விடுகிறேன் அப்பா வந்தவுடன் நீ வேறு ஸ்கூலுக்கு போகலாம் என்று சொன்னால் உடனே தீபக் அப்படியானால் குமார் படிக்கும் ஸ்கூலில் என்னை சேர்த்து விடுங்கள் நான் இங்கே படித்துவிட்டு அப்பா வந்தவுடன் குமாரிடம் சொல்லிவிட்டு அப்பாவுடன் போய் விடுவேன் என்றான் அவளும் சரி நாளைக்கு நான் உன்னை ஸ்கூலுக்கு கூட்டி போகிறேன் என்றாள்

மாதவி வேலைக்கு வந்த உடன் ராணியிடம் தான் தன் மகனை பள்ளியில் சேர்க்க இருப்பதால் முதலாளியிடம் சொல்லி நாளை மட்டும் அரை நாள் விடுப்பு தருமாறு கூறச் சொன்னார் அவளும் விஜய்யிடம் கேட்டு அனுமதி வாங்கி தந்தார் மறுநாளில் பாண்டியும் சரண்யாவும் மாதவியும் தீபக்கும் சேர்ந்து குமார் படிக்கும் பள்ளிக்கு சென்றார்கள் அங்கு தலைமை ஆசிரியை பார்த்து குமாரின் பள்ளி சேர்க்கை குறித்து ஆலோசித்தார் அப்போது அந்த ஆசிரியை உங்கள் கணவர் வரவில்லையா என்று கேட்டாள் அதற்கு அவள் வேலை காரணமாக வெளியூர் சென்று இருப்பதாக கூறினாள் அதற்கு அந்த ஆசிரியை பெற்றோரின் கையொப்பத்தை தந்தையின் கையெழுத்தும் அவசியம் என்றால் இங்கே அது கட்டாயமாக்கப்பட்ட ஒன்று ஆனால் அப்பா இல்லை என்றாலும் அம்மா இல்லை என்றாலும் அது அவசியமில்லை இருக்கும்பட்சத்தில் இந்தப் பள்ளியில் அது கட்டாயமாக்கப்பட்ட ஒன்று என்றால் நீங்கள் தற்போது அவர் வரவில்லை என்றாலும் அவர் வந்தவுடன் கண்டிப்பாக அவருடைய கையெழுத்தை வாங்கி தரவேண்டும் என்றால் அதற்கு மாதவியும் சரி என்றாள் பாண்டிக்கு அவமானமாக இருந்தது பிள்ளையின் தகப்பன் குத்து கல்லாக அருகில் இருந்தும் தன்னால் தகப்பன் என்று சொல்ல முடியவில்லை ஏனென்றால் சரண்யாவும் அருகில் இருக்கிறாள் தங்கள் இருவருக்கும் தான் வயது பொருத்தம் சரியாக இருக்கிறது தற்போது தான் தீபக்கை தன்னுடைய மகன் என்றார் அந்த ஆசிரியை கேவலமாக பார்ப்பாள் அதை அவன் விரும்பவில்லை எனவே அமைதியாக இருந்தான் இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது தீபக் வெளியே சென்றிருந்தான் தன்னுடைய நண்பன் குமாரை பார்க்கலாம் என்று வெளியே சென்றிருந்தான்

அந்த சமயத்தில் விஜய் தன்னுடைய கம்பெனியில் விடுப்பு எடுத்து விட்டு தான் இங்கு வருவதற்கு ஏதுவாக ஒரு வீடு பார்க்கலாம் என்று வந்திருந்தான் .. ஏற்கனவே விஜய் தான் தற்பொழுது வேலை பார்க்கும் கம்பெனியில் தன்னுடைய வேலையை ராஜினமா செய்திருந்தான் .. ஆனால் அவர்கள் விஜய்யின் திறமையை நன்கு அறிந்ததால் அவன் ஏற்கனவே வேலை பார்த்த கிளையில் அவனுக்கு ஜிஎம் போஸ்ட் கொடுத்து அங்கே வேலை பார்க்குமாறு கூறினார்கள் அவனும் ஒப்புக்கொண்டான் ..

அங்கே பள்ளிக்கு அருகில் ஒரு வீடு விலைக்கு வருவதாக ப்ரோக்கர் சொல்லியிருந்ததால் அதை பார்க்க வந்திருந்தான் அவனுக்கு வீடு மிகவும் பிடித்து இருந்தது எனவே பிடித்திருப்பதாக சொல்லி கூடிய விரைவில் குடித்தனம் வருவதற்காக வருவதாக சொன்னான் ..
அவன் தன் வாகனத்தை பள்ளிக்கு அருகில் பார்க் செய்திருந்தான் தீபக் அந்தக் காரை பார்த்துவிட்டான் பார்த்தவுடன் அது தங்கள் கார் என்று அறிந்து விட்டான் கடைசியாக அதை தன் தந்தை எடுத்துச் சென்றது அவனுடைய ஞாபகத்தில் வந்தது உடனடியாக அப்பா என்று கத்திக்கொண்டு வெளியே ஓடினான் இதை உள்ளே இருந்தவர்கள் கேட்டார்கள் உடனே மாதவி வெளியே வந்து விட்டாள் ..சரண்யாவும் பாண்டியும் அந்த ஆசிரியரிடம் சொல்லிவிட்டு வெளியே வந்தார்கள் அங்கே தீபக் வெளியே ஓடிவந்து விஜயை பார்த்தவுடன் கட்டிப்பிடித்து அப்பா தூக்கு என்றான் விஜய்க்கு அவனை பார்த்தவுடன் அவன் யார் என்று தெரிந்தது ஆனாலும் அவனால் ஒரு சிறு குழந்தையின் பாசத்தை விட்டு விட முடியவில்லை எனவே அவனை தூக்கினான் உடனே தீபக் அவனின் முகம் எங்கும் முத்தத்தால் அவனை குளிப்பாட்டினாள் விஜயின் முகமெங்கும் தீபக்கின் முத்த மழையால் ஈரமாக இருந்தது அந்த சிறு குழந்தையின் முத்தத்திற்கு ஈடாக விஜய்யும் தீபக்கிற்கு முத்தமிட்டான் மகிழ்ச்சியான குரலை கேட்டு வெளியே விளையாடிக் கொண்டிருந்த குமாரும் வந்தான் குமார பார்த்த தீபக் குமார் இதுதான் எங்கள் அப்பா எப்படி இருக்கிறார் என்றால் அதற்கு குமார் நன்றாக இருக்கிறார் நீ சொன்னது போலத்தான் இருக்கிறார் அங்கிள் என்னையும் தூக்கங்கள் என்றான் உடனே விஜய் தீபக்கை ஒரு கையிலும் குமாரை ஒரு கையிலும் தூக்கினான் கொஞ்ச நேரம் கொஞ்சி விட்டு நீங்கள் விளையாடுங்கள் எனக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது நான் கிளம்புகிறேன் என்றான் அதற்கு குமார் அங்கிள் நீங்கள் எங்கே வந்து விடுங்கள் தீபக்கும் நீங்கதான் படிக்கப் போகிறான் நீங்கள் அவனையும் என்னையும் பிரித்து விடாதீர்கள் ...நாங்கள் இரண்டு பேரும் பிரண்ட்ஸ் என்றான் அதற்கு விஜய் சரிப்பா அங்கிள் கொஞ்ச நாளில் இங்கே வந்து விடுவேன் என்றான் பிறகு தீபத்தை பார்த்து நான் போய் வரவா என்றான் அதற்கு தீபக் சரிப்பா போயிட்டு சீக்கிரமா வந்திடுங்க நான் உங்களுக்காக காத்திருப்பேன் என்றான் இதனை பார்த்த மூவரும் அதிர்ச்சியாக நின்றார்கள் ..

ஆனாலும் மனதில் சரண்யாவும் பாண்டியனும் எப்படியும் தீபக் கைவைத்து விஜயை மடக்கி விடலாம் என்று நினைத்தார்கள் ஆனால் மாதவியோ முதன்முறையாக தாய்மை நிறைந்த குணத்தோடு தீபக் இனிமேலாவது சந்தோஷமாக இருக்கட்டும் அவன் சந்தோசமாக இருக்க வேண்டுமென்றால் விஜயுடன் தான் இருக்க வேண்டும் தன்னுடைய வாழ்க்கை ஏற்கனவே நாசமாகி போய்விட்டது இனிமேல் அது தீபக் உடன் தொடர வேண்டாம் என்று மனதிற்குள் கடவுளை பிரார்த்தித்தாள் ..

ஆளுக்கு ஒரு கணக்குப் போட்டார்கள் ஆனால் ஆண்டவனின் கணக்கு ஒன்று உள்ளது அதை காலம் அவர்களுக்கு உணர்த்தும்

அங்கு வேலை முடிந்தவுடன் விஜய் தனது ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் ஊருக்கு சென்று அங்கு இருந்த வேலைகளை முடித்து விட்டு கிளம்ப ஆயத்தமானான் அப்பொழுது ராணி மாதவியின் பயோடேட்டாவை கொண்டு வந்து கொடுத்தாள் அதை கையில் வாங்காமல் நான் அந்த பெண்ணை இன்னும் கொஞ்ச நாள் கழித்து நேரில் வந்து பார்த்து கொள்கிறேன் நீங்கள் உங்கள் வேலையை தொடருங்கள் இனிமேல் இங்கு வரும் வருமானத்தை கவனமாக கையாள வேண்டும் யாரிடமும் கொடுக்கக் கூடாது ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் என்னிடம் சொல்லுங்கள் என்றான் பிறகு கிளம்பி அவனுடைய இருப்பிடத்திற்கு சென்று விட்டான்...
[+] 4 users Like Ananthakumar's post
Like Reply


Messages In This Thread
RE: தாயின் துரோகம் - by Ananthakumar - 01-02-2022, 09:32 AM



Users browsing this thread: 9 Guest(s)