29-01-2022, 10:26 PM
ஒருவழியாக பாண்டியும் சரண்யாவும் மாதவியும் விஜயின் வீட்டை கண்டுபிடித்து வந்துவட்டார்கள் .ஆனால் அவர்களை வரவேற்றது பூட்டிய கதவு தான் .அவர்களுக்கு குழப்பமாக இருந்தது இவ்வளவு சீக்கிரமாக எங்கே போய்விட்டான் என்றுு யோசித்தபடி அங்கே நின்றார்கள் .
அவர்கள் நிற்பதை பார்த்த பக்கத்து வீட்டு அம்மா அவர்களும் விஜயின் திருமணத்திற்கு வந்திருப்பார்கள் என்று யூகித்து அவர்களாகவேே வந்து ,விஜயை பார்க்க வந்தீர்களா அவன்் திருமணத்திற்கு கோயிலுக்குு போய் இருக்கிறான் நீங்களும்் போனாள அங்குு பார்க்கலாம் கோவில் இங்கிருந்து பக்கம்தான் இரண்டு தெரு தள்ளி இருக்கிறது என்று சொன்னார் .முகூர்தம் இன்னும் பத்து நிமிடத்தில்் இருக்கிறது நீங்கள் இப்பொழுது போனாாள் திருமணத்தை பார்க்கலாம் உடனே போங்கள் என்றாாள .
அவர்களும் யாருக்கோ திருமணம் என்று நினைத்து நாம் அவனை கோவிலில் பார்த்து பேசலாம் .அவன் கோவிலில் வைத்து பிரச்சனை பண்ண மாட்டான் அங்கிருந்து அவனை இங்கே கூட்டிட்டு வந்து நமது திட்டத்தை செயல்படுத்தலாம் என்று தங்களுக்குள் பேசிவிட்டு காரில் கிளம்பி போனார்கள் .அவர்கள் அங்கே சேர்ந்த நேரத்தில் கோவிலில் விஜய்க்கும் ரேவதிிக்கும் திருமணம் முடிந்திருந்தது .அவர்கள்் கோவிலின படிக்கட்டில் இறங்கி வர தொடங்கினார்கள் முதன் முதலில் இதை மாதவி தான் பார்த்தாள் அவள்் கையில் பாண்டிக்கும் அவளுக்கும் பிறந்த பையன் இருந்தான் .ரேவதியின்் கையில் அவளுடைய மாலையும் விஜய்யின் மாலையும்் இருந்தது அவள் கழுத்தில் விஜய்்் கட்டிய புத்தம் புது தாலி அவளை நான் புதுமணப்பெண் என்று சொல்லியது. அவளுடைய வெட்கம் மாதவிக்கு வேறுு ஏதோ கதை சொல்லியது அவளுடைய இன்னொருு கரம் விஜயின் கரத்தோடு பின்னிபிணைந்து இருந்தது .மாதவியை தொடர்ந்து காரில் இருந்து இறங்கிய பாண்டியும் சரண்யாவும்் அந்தக் காட்சியை கண்டு தங்கள் தலையில் இடிி விழுந்தது போல் நின்றார்கள்.