Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
இந்தியாவில் சீனப் பொருட்கள் குவியும் அபாயம்
புதுடில்லி: அமெரிக்காவின் வரி உயர்வு நடவடிக்கையால், சீனாவில் இருந்து அதிக அளவில் மலிவு விலை பொருட்கள் குவியும் அபாயம் உள்ளது.
[Image: Tamil_News_large_2278772.jpg]

கடந்த வாரம், அமெரிக்கா, 20 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான சீனப் பொருட்களுக்கு, 10 - 25 சதவீதம் வரி உயர்வை அமல்படுத்தியது. அத்துடன், மேலும், 30 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு, வரி உயர்த்தப்படும் எனவும் அறிவித்துள்ளது. இதற்கு பதிலடியாக, அமெரிக்காவின், 6,000 கோடி டாலர் மதிப்புள்ள பொருட்களின் வரியை, சீனா உயர்த்தியுள்ளது.






எச்சரிக்கை:

இந்த பரஸ்பர வர்த்தகப் போரால், சீனாவின் மலிவு விலை பொருட்கள், அதிக அளவில் இந்தியாவில் குவியும் அபாயம் உள்ளதாக, தர நிர்ணய நிறுவனமான, 'இந்த் - ரா' எச்சரித்துள்ளது. இது குறித்து, இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: அமெரிக்காவின் வரி உயர்வை சமாளிக்க, இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில், சீனா ஏற்றுமதியை அதிகரிக்கும். இதனால், இந்தியாவின் உற்பத்தி மற்றும் தேவைப்பாட்டிற்கான இடைவெளி குறையும். உள்நாட்டு வர்த்தகம், குறிப்பாக, மின்னணு சாதனங்கள், இரும்பு, உருக்கு மற்றும் இயற்கை ரசாயனப் பொருட்கள் அதிக அளவில் குவியும்.


[Image: gallerye_044607886_2278772.jpg]


கடந்த ஆண்டு, சீனாவில் இருந்து, 54 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான பொருட்களை, அமெரிக்கா இறக்குமதி செய்தது. இது, அமெரிக்காவின் மொத்த இறக்குமதியில், 18 சதவீதம்; மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 2.34 சதவீதம். இந்த அளவிற்கு சீனாவை, அமெரிக்கா சார்ந்துள்ளது. அதனால், வரி உயர்வு காரணமாக, அமெரிக்காவில் பொருட்கள் விலை உயரும். இது, அந்நாட்டின் பணவீக்க உயர்வுக்கு வழி வகுக்கும். அமெரிக்க முதலீட்டாளர்களின் அன்னிய முதலீடுகள் குறையும். இதுவும், இந்தியாவிற்கு சாதகமற்ற அம்சம் தான்.

அதுபோல, சீனா, அதன் யுவான் கரன்சி மதிப்பை குறைத்தால், அது, அன்னியச் செலாவணிக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு குறைய வழி வகுக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 18-05-2019, 09:55 AM



Users browsing this thread: 16 Guest(s)