Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
சென்னை மக்கள் மெட்ரோ நீரை ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி?
[Image: 63890.jpg]
சென்னையில் வசிப்பவர்கள் மெட்ரோ நீரை ஆன்லைன் மூலமாக பதிவு செய்யும் முறை நடைமுறையில் உள்ளது. பதிவு செய்வதற்கான வழிமுறைகள் என்ன?
சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் அதள பாதாளத்திற்கு சென்றுவிட்டது. பருவமழை பொய்த்துப் போனதாலும், ஆழ்துளை கிணறுகள் அதிக அளவில் அமைக்கப்பட்டதாலும் இந்த நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், இந்த கோடைக் காலத்தில் சென்னையில் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான சென்னை மக்கள் மெட்ரோ நீரையே நம்பியுள்ளனர். இந்நிலையில் சென்னையில் வசிப்பவர்கள் மெட்ரோ நீரை ஆன்லைன் மூலமாக பதிவு செய்யும் முறை நடைமுறையில் உள்ளது. அதன்படி 

[Image: 072031_57439.jpg]
மெட்ரோ நீரை பெற விரும்பும் பயனர்கள், https://chennaimetrowater.tn.gov.in என்ற இணையம் மூலமாக எளிதாக பெறமுடிகிறது. முதலில் இணையதளத்தில் முகப்பு பக்கத்தில் உள்ள Book a water tanker என்ற ஆப்சனை தேர்வு செய்ய வேண்டும். பின்பு தோன்றும் பக்கத்தில் முகவரி, பெறப் போகும் நீரின் கொள்ளளவு உள்ளிட்ட தகவல்களை பதிவிட வேண்டும்.
பின்பு OTP எனப்படும் ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் வழியாக மெட்ரோ நீர் புக்கிங் உறுதி செய்யப்படுகிறது. வெற்றிகரமாக புக் செய்யப்பட்டவுடன் பயனரின் செல்போனிற்கு ரகசிய எண் ஒன்று அனுப்பப்படுகிறது. மெட்ரோ நீர் வீட்டிற்கு கொண்டு‌வரப்படும் போது, ரகசிய எண்ணை பயனர்கள் தெரிவிக்க வேண்டுமென வலியுறுத்தப்படுகிறது.
[Image: 071632_q.JPG]
6000 லிட்டர் மெட்ரோ நீருக்கு, 475 ரூபாயும், 9 ஆயிரம் லிட்டர் மெட்ரோ நீருக்கு 700 ரூபாயும் கட்டணமாக பெறப்படுகிறது. பய‌னருக்களுக்கு உட‌னடியாக நீர் வேண்டும் பட்சத்தில் தட்கல் முறையில் பதிவுச் செய்யும் முறையும் உள்ளது. ஒருவருக்கு மெட்ரோ நீர் வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டவுடன் அவர் ஏழு நாட்களுக்கு பிறகு மட்டுமே மீண்டும் மெட்ரோ நீரை பதிவு செய்யமுடியும்.
அரசின் மெட்ரோ இணையம் மூலம் நீரை எளிதாக பெறமுடிவதாக பயனடைந்தவர்கள் தெரிவிக்கின்றனர்
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 18-05-2019, 09:49 AM



Users browsing this thread: 95 Guest(s)