17-05-2019, 08:51 PM
இது எல்லாவற்றையும், ப்ரியா திட்டமிட்டோ, கணேசன், ராம் கேட்டோ செய்யவில்லை! மாறாக, மிக இயல்பாக, ரம்யா இதுவரை தேடிக் கொண்டிருந்த ஒரு வடிகாலாக ப்ரியா மாறவும், மாற்றம் இயல்பாக வந்தது!
26.
3 வருடங்கள் ஆகியிருந்தது! ரம்யாவும், ப்ரியாவும் ஒன்று என்பது போல் மாறியிருந்தார்கள். பார்ட் டைம் வேலை தேடி வந்த ப்ரியா, வேலைக்குச் செல்லும் அவசியமே வரவில்லை! அவளின் எல்லாத் தேவைகளும், ரம்யாவால் தீர்க்கப்பட்டது!
ஆரம்பத்தில், இதற்காக மறுகிய ப்ரியா, இப்போதெல்லாம், அம்மா, இன்னைக்கு கடைக்கு போலாமா என்று கேட்கும் அளவிற்க்கு அந்த வீட்டில் ஒன்றியிருந்தாள். இது எத்தனை நாள் நீடிக்க முடியும், ப்ரியா அந்த வீட்டின் நிர்வாகியா, உறவா, என்ன மாதிரியான பிணைப்பு என்று யாரும் யோசிக்கவேயில்லை!
இன்னமும் வழக்கிற்கு தீர்ப்பு வரவில்லை என்றாலும், வழக்கில் ப்ரியா ஜெய்ப்பாள் என்பது உறுதியாகியிருந்தது. அதை விட முக்கியம், இந்த வழக்கு தனக்கு ஒன்றுமேயில்லை என்று ப்ரியா மாறியிருந்தாள். இப்படியாக 3 வருடங்கள் ஓடியிருந்தது!
இடைப்பட்ட காலங்களில், ரம்யா, ப்ரியாவின் நெருக்கம், ராமிற்கே பொறாமையை வரவழைத்தது!
ரம்யாவின் காதுகளில், ப்ரியா ரகசியம் பேசினாள்! ரம்யாம்மா, உங்க பாய்ஃபிரண்டு, என்னை முறைக்கிறாரு?!
ஏய், என்னடி சொல்ற?
ம்ம், இந்நேரம், அவரு தோள்ல சாஞ்சி, கதை பேசிட்டிருந்திருப்பீங்க, அது நடக்காம, அவரு கேர்ள்ஃபிரண்டை நான் கடத்திட்டு வந்துட்டேன்ல! அதான் முறைக்கிறாரு!
ஏய், என் பையனையே ஓட்டுறியா? வாயாடி!
ஓட்டுறதுன்னு முடிவு பண்ணிட்டா, பையன் என்னா, பேரன் என்னா? சரி, சரி, இதுக்கு மேல உங்களை புடிச்சு வெச்சா, அவரு பார்வையிலியே என்னை எரிச்சிடுவாரு! நான் போயி, என் பாய்ஃபிரண்டை கொஞ்சுறேன்! நீங்க, உங்க பாய் ஃபிரண்டுகிட்ட போங்க… இருந்தாலும் கடைசியா, அவரைச் சீண்டனுமே என்று சொன்ன ப்ரியா, ரம்யாவின் கன்னத்தில் முத்தமிட்டாள்!
ஏய், உனக்கு வாலு அதிகமாயிட்டே போகுது! ஒரு நாள் வாங்கப் போற இரு! சரி, அது யாருடி உன் பாய்ஃபிரண்டு, புதுசா?
ம்ம்… மிஸ்டர் கணேசன் தான்! நேத்து, என் கையை புடிச்சிகிட்டு, இந்த முறை, சென்னைக்கு போறதுக்கு மனசே இல்லைன்னு எவ்ளோ ஃபீல் பண்ணாரு தெரியுமா? உங்ககிட்ட இதுவரைக்கும், அதுமாதிரி சொல்லியிருக்காரா? இல்லீல்ல? இப்ப தெரிஞ்சிக்கோங்க, இந்த ப்ரியாவோட பவரை என்று கண்ணைச் சிமிட்டியவாறே சொல்லிவிட்டுச் சென்றாள்!
ராமின் தோள்களில் சாய்ந்தாலும், அவளது பார்வை, ப்ரியாவின் மேலேயே இருந்தது.
என்னம்மா அவளையே பாத்துட்டு இருக்கீங்க?!
என்னை மாதிரியே இருக்காடா! என்று ரம்யா ஒரு பெருமூச்சு விட்டாள்!
ரம்யாவின் வார்த்தைகளை விட, அவளது பார்வையும், பெருமூச்சும் ஏதோ உணர்த்துவது போல் இருந்தது ராமிற்க்கு!
ஒரு நாள்!
ராம் உடன் படித்தவன், கல்யாணம் என்று பத்திரிக்கை வைத்திருந்தான்! ராம், அதையேக் கையில் வைத்து, யோசித்துக் கொண்டிருந்தான். ப்ரியா, ரம்யாவின் காதுகளில் கிசுகிசுத்தாள்.
அங்க பாருங்க, உங்க பாய்ஃபிரண்ட், எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க மாட்டேங்குறாங்களேன்னு ஃபீல் பண்ணிட்டிருக்காரு!
ஏய் வாயாடி, உன் வீரமெல்லாம் என்கிட்டதான். ஆனா, அவனைக் கண்டாலே பம்முவ! இவ்ளோ பேசுறியே, தைரியமா அவன்கிட்ட போயி அவன் பேரைச் சொல்லி கூப்பிடு பாக்கலாம்! இன்னமும் சார் நு தானே கூப்பிடுற? 24 வயசெல்லாம் கல்யாணம் பண்ற வயசா?!
ஆங்… இந்தக் கதைதானே வேணாங்கிறது! உங்களுக்கு பயம், புதுசா வர்றவ, உங்க பாய்ஃபிரண்டை கொத்திட்டு போயிருவான்னு…
உன்னை என்று ப்ரியாவின் காதைத் திருகி ரம்யா விளையாடிய போது, ராம் சொன்னான்!
ப்ரியா சொன்னது சரிதாம்மா! நான் கல்யாணம் பண்ணிக்கலாமான்னுதான் யோசிச்சிட்டிருந்தேன்!
(அய்யோ, நான் சொல்றதைக் கேட்டுட்டா இருந்தாரு! போச்சு!)
என்ன ராம் சொல்ற? உண்மையாவா?
ஆமாம்மா, நான் ஒரு பொண்ணை லவ் பண்ணுறேன்! அவளுக்காக, நான் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைக்கிறேன்!
அவளுக்காக இவ்ளோ சீக்கிரமா கல்யாணம் பண்ணனுங்கிற! என்கிட்ட ஒரு வார்த்தை உன் லவ்வைப் பத்திச் சொல்லலியேடா? அவ்ளோதானா? தன்னிடம் சொல்லாததிற்க்காக மிகவும் ஃபீல் பண்ணினாள் ரம்யா!
சிரித்தவாறே அருகில் வந்து ரம்யாவை தோளோடு சேர்த்து இழுத்தவன், ரொம்ப ஃபீல் பண்ணாத கேர்ள் ஃபிரண்டு! எத்தனை லவ்வர் வந்தாலும், நீதான் என் கேர்ள் ஃபிரண்டு! ஓகேவா!
போடா, வெறும் வாய்லதான். என்கிட்ட சொல்லலீல்ல நீ?!
அவசரப்படாதீங்க! நான் இன்னும் அந்தப் பொண்ணுகிட்டயே லவ்வைச் சொல்லலை! சொன்னாலும், அவ உடனே ஒத்துக்குவாளான்னும் தெரியாது! ஆனா, சீக்கிரம் கல்யாணம் நடக்கனும். அதான் யோசிக்கிறேன்!
என்ன ராம் சொல்ற? யாரு அந்தப் பொண்ணு? அப்டி என்ன பிரச்சினை? உன்னை வேணாம்னு சொல்லிடுவாளா? நீ யாருன்னு காமி? நான் பேசுறேன் அவகிட்ட!
உண்மையாவாம்மா?! என்ன ப்ரியா, நீயும் எனக்காக பேசுவியா?
கண்டிப்பா சார்! உங்களை வேணாம்னு சொல்ற பொண்ணு இருக்க முடியுமா? யாருங்க சார் அந்தப் பொண்ணூ? நானும் பேசுறேன் சார்!
நீதான் ப்ரியா அந்தப் பொண்ணு! உன்னைதான் லவ் பண்றேன்! என்றவன் ரம்யாவிடம் திரும்பி, நீங்க பேசி சம்மதம் வாங்குங்கம்மா என்றான்!
ப்ரியா, பிரம்மை பிடித்து நின்றிருந்தாள்!
நீ உண்மையாத்தான் சொல்றியா ராம்?
இந்த விஷயத்துல யாராவது விளையாடுவாங்களாம்மா? உங்களுக்கு சம்மதம்மாம்மா?
சம்மதமா??? எனக்கு, ரொம்ப ரொம்ப சந்தோஷம் ராம்! ப்ரியா நீ என்ன என்று திரும்பிய போதுதான் ரம்யா உணர்ந்தாள், ப்ரியா இன்னும் பிரம்மை பிடித்தவாறே இருந்ததை! அவள் உதடுகள் முணுமுணுத்துக் கொண்டிருந்தன…
நான்…. கல்யாணமா…
’ப்ரியா’ என்ற ரம்யாவின் அதட்டலில் சுய நினைவு திரும்பியவள், கோபமாக ராமைப் பார்த்து கேட்டாள்!
பரிதாபப்பட்டு வாழ்க்கை கொடுக்குறீங்களா சார்?
பரிதாபப்படுற அளவுக்கு உன்கிட்ட என்ன குறை ப்ரியா?
ஆங்… என்று விழித்தாள் ப்ரியா? பின் சுதாரித்தவள், எ… எனக்கு கல்யாணத்துல இஷ்டம் இல்லை சார்!
ஸ்ஸ்… நீ என்னை கல்யாணம் பண்றியோ, பண்ணலையோ, முதல்ல இந்த சாரைக் கட் பண்ணு! என்னம்மா, என்னை எந்தப் பொண்ணும் வேணாம்னு சொல்லாதுன்னு சொன்னீங்க?! உங்க கூட இருக்கிற பொண்ணுக்கே என்னை புடிக்கலியே?!
இல்ல சார்… நீங்க வேற நல்லப் பொண்ணாப் பாத்து… என்று பேசியவளை ராமின் கோபப்பார்வை நிறுத்தியது!
சரி ப்ரியா, நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்க வேணாம். ஆனா, உன் மனசைத் தொட்டுச் சொல்லு. நீ உன் வாழ்க்கைல கல்யாணம் பண்ணுவியா மாட்டியா?
கல்யாணாமா? நானா என்று வாய் பிளந்து நின்றாள் ப்ரியா!
தன்னையறியாமல் ஏதோ நடக்கிறது என்பதை உணர்ந்த ரம்யா, என்ன சொல்ற ராம்? அவ கல்யாணம் பண்ணாம என்ன பண்ணப் போறா?
அதை அவளைச் சொல்லச் சொல்லுமா?
உ… உங்களுக்கு எப்டி தெரியும் சார்???
டாக்டர் சார்மிளா!
அப்போதுதான் ப்ரியாவிற்கும், ரம்யாவிற்க்கும் ஞாபகம் வந்தது!

27.
3 வருடங்களுக்கு முன்பு, வந்த புதிதில், ப்ரியாவின் மன உளைச்சல்களைப் பார்த்து விட்டு, ப்ரியா சில நாட்கள் ஒரு கவுன்சிலிங் செல்வது நல்லது என்று, ராம் அழைத்து வந்த மனநல மருத்துவர்தான் டாக்டர் சார்மிளா! அதன் பின் ப்ரியாவிடம் நல்ல மாற்றம் இருந்தது!
அதன் பின் ஒரு வருடம் கழித்து, டாக்டர் சார்மிளாவே மீண்டும் சில முறை ப்ரியாவைத் தேடி வந்தவர், ப்ரியாவிடம் கொஞ்சம் பேசி விட்டுச் சென்றார்! அதைத்தான் இப்பொழுது சொல்கிறான்.
உங்ககிட்ட டாக்டர் சொன்னாங்களா? பேஷண்ட்டைப் பத்தி, இன்னொருத்தர்கிட்ட சொல்ல கூடாதுன்னு தெரியாதா அவங்களுக்கு?
ஹா ஹா… நான் இன்னொருத்தன் இல்லங்கிறது வேற விஷயம் ப்ரியா! ஆனா, ஒரு வருஷம் கழிச்சு, நீயா கேக்காம, கூப்பிடாம, டாக்டரே எப்டி வந்தாங்கன்னு என்னிக்காவது யோசிச்சிருக்கியா?
ஆங்… அதானே?
என்ன நடக்குது ராம்? நீ சொல்லிதான் சார்மிளா வந்தாங்களா? உனக்கு எப்டி தெரியும்?
ப்ரியாவுக்கு சில பயம் இருந்துதும்மா. தனியா, நம்ம டிரைவர் கூட போறதுக்கு கூட, உள்ளுக்குள்ள பயப்பட்டா! ஆம்பிளைங்க மேல ஒண்ணு பயமோ, இல்லாட்டி கோபமோ இருந்துகிட்டே இருந்துது! உங்க விஷயம் தெரிஞ்சு, அவ நார்மல் ஆகுற வரைக்கும், மருதமலை பேரைச் சொன்னாலே, டென்சன் ஆவா! என்னோட பர்த்டேக்கு, நான், நீ தாத்தா எல்லாம் அவளை அடம்புடிச்சி கூட்டிட்டு போற வரைக்கும், அங்க போகவே பயப்பட்டா! அன்னிக்கும், உங்கக் கையை புடிச்சிகிட்டு, கண்ணை மூடிகிட்டு, தூங்குற மாதிரி நடிச்சி, ரொம்பவே சிரமப்பட்டா! இப்டி சொல்லிட்டே போலாம்!
இதெல்லாம் கவனிச்சதுனாலத்தான், நான் டாக்டரையே கூட்டிட்டு வந்தேன்.
ரம்யாவிற்கு மட்டுமல்ல, ப்ரியாவிற்கும் உள்ளுக்குள் மலைப்பாக இருந்தது! இவ்ளோ கவனிச்சிருக்கானா என்று?!
ரம்யா வருத்தத்தோடு ப்ரியாவிடம் கேட்டாள்!
என்கிட்ட கூட சொல்லாம மறைச்சுட்டீல்ல ப்ரியா? என்று வருத்தமாகக் கேட்டாள்!
அப்பொழுதுதான், ப்ரியா அந்த வார்த்தையை விட்டாள்!
உங்ககிட்ட சொல்லனும்னு என்ன கட்டாயம்? உங்க வீட்ல இருந்தா, உங்களுக்கு அடிமைன்னு நினைச்சீங்களா??? என் வாழ்க்கையை, நான் முடிவு பண்ணிக்குவேன். தேவையில்லாம நீங்க தலையிடாதீங்க!
அதில் கோபமடைந்த ராம், அவளை அடிக்கக் கை ஓங்க, அவனை முதலில் எதிர்த்தது ரம்யாவே!
ஒரு பொண்ணுகிட்ட அடிக்க கை ஓங்குற? இதான், நான் வளர்த்த முறையா?
ரம்யா தன்னைத் திட்டியதால், ‘இப்ப உனக்கு சந்தோஷம்தானே’ என்று ப்ரியாவைத் திட்டி விட்டு, ராம் அவனது அறைக்குச் சென்றான்!
ஒன்றாயிருந்த மூவரும், ஆளுக்கொரு திசையில்!
ஒரு மணி நேரம் கழித்து, ராமின் அறைக்கு வந்த ரம்யா,
சாரி ராம், ரொம்ப ஹார்ஷா பேசிட்…. என்று சொல்லிக் கொண்டு வந்தவளின் பேச்சு நின்றது! ஏனெனில், ராம், ரம்யாவைப் பார்த்து ஜாலியாகச் சிரித்துக் கொண்டிருந்தான்!
டேய், நான் உனக்காக எவ்ளோ ஃபீல் பண்ணிட்டு வந்தா, நீ சிரிச்சிட்டிருக்க!
சும்மா தேவையில்லாம, ஃபீல் பண்ணாத டார்லிங்! போயி, இதை சாக்கா வெச்சு, அவளை கன்வின்ஸ் பண்ற வழியை பாரு! போ! எலி வளையில மாட்டிருச்சி! நான் கூட கல்யாணத்துக்கு, அவளை ஒத்துக்க வைக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கும்னு நினைச்சேன். ஆனா, அவளே வந்து மாட்டிகிட்டா!
என்னடா சொல்ற?
ஆமா! உன்னைத் திட்டுனா பதிலுக்கு கோபத்துல, இவ இல்லாட்டி வேற பொண்ணே இல்லைய்யான்னு நீயோ, இல்ல, எங்கம்மாவைத் திட்டுற பொண்ணு எனக்கு தேவையில்லைன்னு நானோ, சொல்லுவேன்னுதான் அவ வேணும்ன்னே அப்டி பேசுனா! இப்ப, நானும் நீயும், இப்டி இருந்தா, மனசு கேக்காம, அவளே வந்து உங்ககிட்ட பேசுவா பாருங்க! அப்ப, கன்வின்ஸ் பண்ணுங்க!
அவ வேணும்ன்னே பேசுனாளா?
பின்ன? அவளாவுது, உங்களைத் திட்டுறதாவுது! நான் உன்னைத் திட்டுனாலே சண்டைக்கு வந்துடுவா! அவ போயி, உங்களைத் திட்டுறதா?! எல்லாம் பாவ்லா! அவ உன்கிட்ட தன்னோட பிரச்சினைகளைச் சொல்லாததுக்கு காரணம், தெரிஞ்சா நீ ஃபீல் பண்ணுவன்னுதான்! ஆனா, இங்க மாத்தி பேசிட்டிருக்கா! சாயங்காலமே வருவா பாருங்க!
ராம்...
அடிக்கடி ஷாக் ஆவுறதை நிறுத்துமா? உனக்கு இதுல விருப்பம்தானே? இல்ல, எல்லா அம்மா மாதிரியும், பெரிய இடம், அந்தஸ்துல்லாம் பேசப் போறியா?
போடா! எனக்கு எவ்ளோ சந்தோஷம் தெரியுமா? நான் மட்டுமில்லை, விஷயம் தெரிஞ்சா, கணேசப்பாவே ரொம்ப சந்தோஷப்படுவாரு!
அதெல்லாம் உன்கிட்ட இன்னிக்கு சொன்னவுடனே, அவருக்கு ஃபோன் பண்ணி சொல்லிட்டேன்!
ஆங்…
ஷாக்கை குறை! போயி கோபத்தை அப்டியே மெயிண்டெய்ன் பண்ணு! அவ பேச வந்தா கன்வின்ஸ் பண்ணு! போ!
சரியான எமாத்துக்காரண்டா நீ!
பார்ரா, லவ் பண்ற பொண்ணை கல்யாணம் பண்ணிக்க ப்ளான் பண்றவன் ஏமாத்துகாரனா?! நேரந்தான்! என் கவலையெல்லாம் ஒண்ணே ஒண்ணுதான்!
என்னடா?
ம்ம்.. எல்லா வீட்டுலியும் வர்ற, மாமியார் மருமக சண்டையை என்னால பாக்கவே முடியாதுல்ல?! அதான்!
ஹா ஹா ஹா
காலையில் நடந்த சண்டை, மாலை வரை நீடிக்கவும், ப்ரியாவே, ராம் சார்பாக, ரம்யாவிடம், சண்டைக்குச் சென்றாள்! ராம் இருக்கும் போதே!
தப்பு பண்ணது நானு! நீங்க ஏன் உங்களுக்குள்ள பேசாம இருக்கீங்க? உங்களை யாராவது அப்டி பேசுனா, நானே சண்டைக்கு போவேன்! அப்ப நான் பேசுனா, அவரு சும்மா இருப்பாரா? அவரு செஞ்சது சரிதான் ரம்யாம்மா! எ… என்ன இருந்தாலும் நான் பேசுனது தப்புதானே?! சொல்லப் போனா, ஏண்டி இப்டி பேசுனன்னு, நீங்களே என்னை அறைஞ்சிருக்கனும்?
இது எனக்கும், என் பையனுக்கும் இருக்கிற சண்டை ப்ரியா! இதுல தலையிட நீ யாரு? என் மருமகளா? ம்ம்ம்?
ரம்யாம்மா…
இங்க பாரு ப்ரியா, பிரச்சினைக்கு காரணமே அவன் கல்யாண விஷயம்தான்! அதுனால, அவன் கல்யாணம் நடக்குற வரைக்கும், நான் அவன் கூட பேச மாட்டேன்!
அம்மா, நான் ப்ரியாவைதான் கல்யாணம் பண்ணிக்குவேன். ப்ரியாவுக்கு விருப்பமில்லாட்டி, விட்டுடுங்க, 4.5 வருஷம் போகட்டும் பாக்கலாம்!
அப்ப அதுவரைக்கும் என்கிட்ட பேசாத!
என்ன ரம்யாம்மா இப்டி பேசுறீங்க? அவருக்கு எவ்ளோ கஷ்டமாயிருக்கும்? ப்ளீஸ் ரம்யாம்மா!
என்ன, அவனுக்காக ரொம்ப ஃபீல் பண்ற? நீ வேணாம்னு சொன்னாக் கூடத்தான் கஷ்டப்படுவான். அதுனால நீ மனசை மாத்திகிட்டியா என்ன?
என்னம்மா நீங்களும் இப்டி பேசுறீங்க?! அதென்ன பொண்ணுங்கன்னா கல்யாணம் பண்ணியே தீரனும்? ஆண்கள் இல்லாம சாதிக்க முடியாதா? பொண்ணுங்கன்னா என்ன குறைச்சல்?
அப்ப, ஆம்பிளைங்க தங்களை உசத்தின்னு நினைச்சுக்கிறாங்க! பொண்ணுங்க சளைச்சவிங்க இல்லைன்னு நீ சொல்லுற? அப்டித்தானே ப்ரியா? கேட்டது ராம்!
ஆமா சார்!!! உண்மைதானே? நிறைய ஆண்கள் அப்டித்தானே யோசிக்கிறாங்க?
ஸ்ஸ்… சார் இல்லை! ராம்! ஏன் ப்ரியா, நாங்கதான் உயர்ந்தவங்கன்னு சொல்ற எந்த ஆம்பிளையாவுது, நான் ஏன் கல்யாணம் பண்ணிக்கனும்னு பேசி பாத்துருக்கியா?
அவன்தான் உசத்தியாச்சே? அப்புறம் ஏன் தேடித் தேடி, குறைச்சல்னு நினைக்கிற ஒரு பொண்ணைப் போய் கல்யாணம் பண்ணனும்? ம்ம்?
ஆங்… (அதனே?!)
பொண்ணுங்கதான் ப்ரியா, ப்ரூவ் பண்ணனுங்கிறதுக்காக கல்யாணம் தேவையில்லைன்னுன்னு பேசிட்டிருக்காங்க! ஆனா எந்த ஆம்பளையும் அப்டி இல்லை! உலகத்துல இருக்குற எல்லா, ஆம்பிளையும், பொம்பிளையும் கல்யாணம் பண்ணிக்கக் கூடாதுன்னு நினைச்சா, அடுத்த சந்ததின்னு ஒண்ணே இருக்காது!
ப்ரூவ் பண்றதுக்கு, உருப்படியா வேற எத்தனையோ விஷயம் இருக்கு! மத்தவிங்க எப்டியோ, அது அவிங்கவிங்க விருப்பம். ஆனா, நீ பேசுறதுக்கு காரணம் என்னான்னு உன் அடி மனசுக்கும் தெரியும்! எனக்கும் தெரியும்!
நீ பேசுறது பெண்ணுரிமையோ, சுதந்திரமோ இல்லை. ப்யூர் எஸ்கேபிசம்! வாழ்க்கையை எதிர் கொள்றதுல இருக்குற பயம்! அந்தப் பயத்தை மறைக்க, இந்தப் பேச்சு பேசி எல்லாத்தையும் ஏமாத்திட்டிருக்க! உன்னையும் சேத்து!
எல்லாரையும் ஏமாத்தலாம். ஆனா, என்னை ஏமாத்த முடியாது! நான் சொல்றதை சொல்லிட்டேன், அப்புறம் உன் இஷ்டம்! என்று சொல்லிவிட்டு நகர்ந்தான்!
ராமின் வார்த்தைகளும், அவன் பேசும் போது, அவளை ஆழமாகப் பார்த்த அவன் கண்களும் சொன்னது, ராம், அவளின் அடி மனதை படித்திருக்கிறான் என்று!
ரம்யாவிடம் கூட அவள் மூடி மறைத்திருக்கும் சில விஷயங்களை, அவன் தெரிந்திருக்கிறான் என்று! எந்தளவு தெரிந்திருக்கிறானோ என்று மலைத்து நின்றாள்!

![[Image: xossip-signatore.png]](https://i.ibb.co/3kbRVG8/xossip-signatore.png)
Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/
" I'm Not Story Writer, Just Posted my Backups. "
My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com
Hangouts : irr.usat[at]gmail[dot]com