18-01-2022, 07:41 AM
சென்ற பகுதியின் தொடர்ச்சி...
கோமதி என்ற பெயரையும் கேட்டதும் என் மனதிற்குள் ஒருவிதமான சிலிர்ப்பு ஏற்பட்டு அடங்கியது. அதற்கு காரணம் அந்த பெயர் என் வாழ்க்கை பக்கங்களை ஒரு வினாடியில் பின்னோக்கி எடுத்து சென்றுவிட்டது. திருமணத்திற்கு முன்பான இளமை காலத்தில் எப்போதும் கோமதி மயமாக தான் இருந்தேன். திரிந்தேன்.. அந்த பெயர் மீது அவ்வளவு காதல்.. அந்த பெயரை மட்டும் காதலிக்கவில்லை.. அந்த பெயருக்கு சொந்தக்காரியையும் சேர்த்து காதலித்தேன்.. அந்த காதல் காலத்தால் கை கூடவில்லை என்றாலும் அவளின் நினைவுகள் எல்லாம் அந்த ஒற்றை பெயரை கேட்டதும் மனதிற்குள் வந்து சென்றது.. மீண்டும் அந்த கோமதி என்ற பெண்மணியை பார்த்தேன்.. அவள் இன்னும் அதே இடத்தில் தான் உட்காந்திருப்பதை பார்த்ததும் என்னையும் அறியாமல் மனதிற்குள் ஒரு நிம்மதி... அவளுடன் பேசிக் கொண்டிருந்த பெண்,
"உங்க பொண்ணுங்களுக்காக நீங்க இந்த பனியில வந்து உட்கார்ந்து இருக்கனுமா?" கேட்க, அப்போது அவளுடைய பெண்ணிற்க்காக இந்த பனியையும் பொருட்படுத்தாமல் உட்காந்திருப்பது தெரிய வந்தது.
"என்ன பண்ண அவளுக ரெண்டு பேரும் நா உட்காந்திருக்கிறத பாத்த தான் வீட்டுக்கு வரனும் நெனப்பாச்சும் வரும்.. இல்லைனா ஊரை சுத்திட்டு விடிஞ்சதும் தான் வீட்டுக்கு வருங்க.."
"ம்ம்.. உங்க பொண்ணுங்க என்ன இன்னும் சின்ன பொண்ணுங்களா? கல்யாணம் பண்ணிக் குடுக்குற வயசு வந்திடுச்சு.. அவங்களாவே வந்துடுவாங்க.. நீங்க வீட்டுக்கு போய் தூங்குங்க.."
"என்னம்மா கெளரி நீயும் அவங்களுக்கே சப்போர்ட் பண்ணி பேசுற.. உன்கிட்ட சொன்ன புருஞ்சுப்ப நெனச்சேன்.." சொல்லும் போது தான் அந்த கோமதி பக்கத்தில் இருக்கும் பெண்ணின் பெயர் கௌரி என்பது தெரிய வந்தது. அவள் பார்க்க இளம் வயதாக தான் தெரிந்தாள். ஆனால் அவள் திருமணம் ஆனவள். கழுத்தில் தாலி செயின் இருந்தது..
"உங்கள் மனசுல இருக்குற கஷ்டம், பயம் புரியதும்மா.. அவங்கள நெனச்சு உங்க உடம்ப கெடுத்துக்காதிங்க. பனி வேற கொட்டுது பாருங்க.."
"இந்த பனி என்னம்மா பண்ணிட போகுது.. அவங்க ரெண்டு பேரும் இல்லாம நா எப்போ போய் தூங்கியிருக்கேன்.. அவங்க ரெண்டு பேரையும் ஒருத்தன் கையில புடிச்சு குடுக்குற வரைக்கும் மனசு இப்படி தான்ம்மா அடிச்சிட்டே இருக்கும்.."
"ம்ம்.. சரிம்மா கையில மொபைல் வச்சுருப்பாங்கள.. கால் பண்ணி வேணா கேட்டு பாருங்க.. இப்படி எவ்வளவு நேரம் உட்காந்திருப்பிங்க."
"என்னத்த கால் பண்ணி கேட்க? நா கால் பண்ணுவேன் தெரிஞ்சே மொபைல்ல ரெண்டு பேரும் சொல்லி வச்சு வீட்டுல வச்சுட்டு போய்ட்டாங்க.."
"ஓ அப்படியா. நீங்க கவலைப்படாதீங்க.. இப்ப தான் ஃபங்சன் முடிஞ்சிடுல வந்துடுவாங்க.. இங்க தான் யார்கூடயாவது பேசிட்டு இருப்பாளுங்க.." கௌரி பேசிட்டு இருக்க அந்த சமயம் அந்த இடத்தில் கெளரி தேடி அவள் புருசன் ராம் வந்து,
"இங்க ஆண்டி கூட நின்னு என்ன பேசிட்டு இருக்க" கேட்டதும்
"ஒன்னுமில்லைங்க.. இன்னும் அந்த வாலுங்க வரலனு கவலைபட்டு இங்கேயே இந்த பனியில வெயிட் பண்ணிட்டு இருக்காங்க.."
"யாரு நந்தித்தா, நந்தனவா?"
"ம்ம்.. ஆமா.. வேற யார பத்தி கவலைபட போறாங்க.." சொன்னதும்
கோமதி, "நீயும் என் பொண்ணு தான்ம்மா." கன்னத்தை தடவ
கௌரி உடனே பதற, "அய்யோ அம்மா நா, இப்ப உங்களுக்காக தான் சப்போர்ட் பண்ணி பேசினேன்."
"ஓ.. சரி.. சரிம்மா.. நீ போய் படு.. நா அவங்கள தேடி கூட்டிட்டு வீட்டுக்கு போறேன்.." கோமதி சொன்னதும்
கௌரி "நீங்க இருங்கம்மா.. இவர வேணா பாத்திட்டு வர சொல்றேன்.."
"அதலாம் வேண்டாம்மா.. நா போய் பாத்துக்கிறேன்.." கோமதி எழுந்து அந்த இடத்திலிருந்து கிளம்பியதும் கௌரியும் அவள் வீட்டுக்காரனுடன் சென்றுவிட்டாள்.
கோமதி தலையில் சேலையை முக்காட்டு போட்டபடி அவள் மகள்கள் இருவரையும் தேடி செல்ல எனக்கும் அந்த பெண்மணியின் முகத்தை காணும் ஆவலில் உட்காந்திருக்க பிடிக்காமல் எழுந்து பின்னாடி சென்றேன்.. அவள் அங்கிருக்கும் நபர்களிடம் தன் மகளை பார்த்தீர்களா? என கேட்டுக் கொண்டே இருந்தாள். யாரும் பார்க்கவில்லை என சொன்னதும் சற்று மனம் கலங்கி என்ன செய்வதென்று தெரியாமல் அந்த இடத்தியிலே நின்றாள்.. அப்போது அங்கு வந்த இவள் வயதை ஒத்த பெண்மணி வந்து இவள் இருக்கும் நிலையை பார்த்துவிட்டு,
"என்ன கோமதி நீ இன்னும் தூங்கலையா? இங்க நின்னுட்டு இருக்க" கேட்க
"இந்த பொண்ணுங்க ரெண்டு பேரையும் காணோம். அத தான் தேடிட்டு வந்தேன்.. நீங்க எதுவும் பாத்திங்களா?" கோமதி கேட்க
"ஆமா கொஞ்ச நேரத்துக்கு முன்ன அவங்க ப்ரண்ட்ஸ் கூட நின்னுட்டு இருந்தாளுங்க.."
"ஓ அப்படியா? நீங்க எங்க பாத்திங்க?"
"புதுசா ஸ்டேஜ் போட்டு இருக்காங்கள அங்க தான் பாத்தேன்.."
"சரி.. நா போய் என்னானு பாக்குறேன்."
"சரி கோமதி.. எனக்கு தூக்கம் கண்ண கட்டுது" சொல்லிவிட்டு நகர கோமதி அந்த ஸ்டேஜ் போட்ட இடத்தை நோக்கி நடந்து சென்றாள். நானும் அவளுக்கு தெரியாமல் பின்னாடி சென்றேன். அவள் மகளை தேடும் அவசரத்தில் கொஞ்சம் வேகமாகவே நடந்து சென்றாள். அவளின் வேகத்திற்கு ஈடுக் கொடுத்து நானும் அவளின் பின்னே சென்றேன்..
கோமதியின் மகள்கள் இருவரும் அந்த பெண்மணி சொன்னது போல் இன்னும் அந்த ஸ்டேஜ் பக்கத்தில் நின்று அவளின் ப்ரண்ட்ஸ்களோடு பேசிக் கொண்டு தான் இருந்தனர்.. நான் கோமதியை விட்டு கொஞ்சம் இடைவெளி விட்டு நின்று கொண்டேன். அவர்கள் இருவரும் பார்க்க இரட்டையர்கள் போல் முக ஜாடையில் ஒரே மாதிரியாக இருந்தனர். அந்த பெண்கள் இருவரும் கோமதியை பார்த்ததும் பக்கத்தில் வந்து,
"மம்மி நீ இன்னும் தூங்கலையா?" கேட்க
"நீங்க ரெண்டு வரமா எப்போ தூங்கியிருக்கேன். இல்ல தூக்கம் தான் வருமா?" தாய் பாசத்தில் பேச
"அய்யோ மம்மி உன் வில்லேஜ் புராணத்தை ஸ்டாப் பண்ணு.. நாங்க ஒன்னும் சின்ன பொண்ணுங்க இல்ல.."
"நீங்க என்ன சமாதானம் சொன்னாலும் ரெண்டு பேரும் எனக்கு இன்னும் சின்ன பிள்ளைங்க தான்.."
"சரி.. சரி.. நீ போய் தூங்கு.. நாங்க வந்துருவோம்.."
"அதலாம் முடியாது.. நீங்க பேசிட்டு வேணா வாங்க.. நா இங்க பெஞ்ச்ல உட்காந்திருக்கேன்.." சொல்லி அங்கிருந்த ஸ்டோன் பெஞ்சில் உட்கார்ந்து கொண்டாள்.
"ஏன் மம்மி இப்படி படுத்துற.?"
"நா ஒன்னும் சொல்லல.. பேசிட்டு வாங்க வீட்டுக்கு போலாம்.." கோமதி சொல்ல இருவரில் ஒருத்தி,
"இது சரிபடாதுடி.. வீட்டுக்கு கிளம்பலாம்." சொல்ல
"ம்ம். எனக்கும் அதான் கரெக்ட் படுது.. சரி நா போய் சொல்லிட்டு வரேன்.. நீ கூட்டிட்டு போ.."
"ம்ம்.. ஓகே.." சொல்ல
ஒருத்தி, "வா மம்மி வீட்டுக்கு போலாம்" சொல்ல
"அவ எங்க போறா?" கோமதி கேட்க
"அய்யோ மம்மி அவ பேச ஒன்னும் போகல.. சொல்லிட்டு வர தான் போயிருக்கா.. நீ வா.."
"உங்கள ரெண்டு பேரையும் நம்ப முடியாது.. அவளும் வரட்டும் சேந்து போலாம்" சொல்ல அவளின் மகள் ஒருத்தி தலையில் கை வைத்து கொண்டு கோமதியின் பக்கத்திலே அந்த பெஞ்சில் உட்கார்ந்து கொண்டாள்.
"நீ ஏன் தலையில இப்படி கைய வச்சிட்டு உட்காந்திட்ட"
"பின்ன வீட்டுக்கு கூப்பிட்டா வரனும்.. அவ வந்தா தான் வருவேன் அடம்பிடிச்சா. வேற என்ன பண்ண சொல்ற." கொட்டாவி விட
உடனே கோமதி, "உனக்கு தூக்கம் வந்தா போய் தூங்கு.. நா அவ வந்ததும் அவளையும் கூட சேந்து வரேன்.."
"ஏன் மம்மி இப்படி பண்ற..?"
"இப்ப உன்னைய என்ன பண்ணிட்டேன்?"
"உன்ன விட்டு நா மட்டும் போய் தூங்குனா.. வீட்டுக்கு வந்ததும் கத்துவா தெரியும்ல."
"சரி.. சரி.. அவள கூப்பிடு நாம போலாம்" கோமதி சொல்ல
"ஏய் நந்தி" கூப்பிட அவள் காதில் விழாததால் வாயில் இரு விரலை வைத்து அந்த நிப்சதமான இரவில் அழகாக விசில் அடித்து கூப்பிட அங்கிருந்த கும்பலில் இருந்த எல்லோரும் திரும்பி பார்க்க இங்கிருந்து கையை காட்ட அவள் ஏதோ அவர்களிடம் சொல்லிவிட்டு இவர்கள் இருவரையும் நோக்கி வந்தாள்...
இங்கே கோமதி தன் மகளிடம், "ஏன்டி இப்படி பசங்க மாதிரி நடந்துக்கிற"
"பசங்க மாதிரியா அப்படி என்ன பண்ணேன்?"
"இப்ப சீட்டி அடிச்சியே அதெல்லாம் பசங்க தான பண்ணுவாங்க.."
"அய்யோ மம்மி அது சீட்டி இல்ல.. விசில் அடிக்குறது.. இத அடிக்க தெரிஞ்ச யாரு வேணாலும் அடிக்கலாம்.. நீ வேணா வாயில்ல விரல்ல வச்சு ஒன் டைம் ட்ரை பண்ணு மம்மி.."
"எம்மா தாயே ஆள விடு" சொல்ல கோமதியுடைய இன்னொரு மகளும் வந்து சேர்ந்தாள்..
வந்ததுமே "ஏன்ம்மா இப்படி தூங்கமா இம்ச பண்ற.."
"நீங்க இல்லாம எப்போ தூங்கியிருக்கேன்.. உங்க ரெண்டு பேருக்கும் என்ட்ட கேட்க வேற கேள்வியே இல்லையா?" கொஞ்சம் கோவமாக கேட்க
இருவருமே "சரி.. சரி கூல்.. கோவபட்டா பிபிலாம் வந்துடும்." சொல்லி இருவரும் கோமதியின் தோளை பற்றியபடி ஆளுக்கு ஒரு கன்னத்தில் முத்தமிட்டு அழைத்து சென்றனர்.. இதுவரை அந்த கோமதியின் என்ற பெண்ணின் முகத்தை பார்க்கவில்லை. என்னுடைய வாலிப வயது காதலியாக இருந்த கோமதிக்கும் திருமணம் ஆகி இது மாதிரி குழந்தைகளோடு சந்தோஷமாக இருப்பாள் என்ற எண்ணம் மனதில் வந்தது.. அவளுடன் சேர்ந்து வாழ முடியவில்லை என்ற வருத்தம் அவளை பிரிந்து தனிமையில் இருந்த நேரத்தில் அந்த துக்கம் என்னை வாட்டியது..
இப்போது அப்படியில்லை என் வாழ்க்கை தான் தனிமையில் கழிய போகிறது.. கோமதியுடைய வாழ்க்கையாவது இனிமையாக சந்தோஷமாக கழியட்டும் என்ற எண்ணம் தான் மேலோங்கி இருந்தது. என்னை போல் இல்லாமல் அவள் குடும்பத்துடன் கடைசி வரை இருக்க வேண்டும் என மனதிற்குள் கடவுளை வேண்டிக் கொண்டேன்..
நானிருக்கும் அபார்மெண்டில் குடியிருக்கும் அந்த முகம் தெரியாத கோமதி இந்நேரம் அவள் மகள்களுடன் வீட்டினுள் நுழைந்திருப்பாள்.. அவள் பின்னாலே தொடர்ந்து சென்றிருந்தால் இந்த கோமதியின் ப்ளாக்கையாவது கண்டுபிடித்து இருக்கலாம்.. என் காதலி கோமதியின் சிந்தனையால் இந்த கோமதியை கூட தவறவிட்டு விட்டேன் என நினைக்கும் போதே எனக்கே என் மீது சற்று வெறுப்பு வந்தது. ஒவ்வொரு முறையும் கிடைக்கும் வாய்ப்பில் எல்லாம் கோமதியை தவறவிட்டுக் கொண்டிருக்கிறோம்..
இந்த அபார்மெண்டில் இருக்கும் கோமதியை பற்றிய சிந்தனை ஏன் அடிக்கடி வருகிறது என தெரியவில்லை. இத்தனைக்கும் அந்த பெண்மணி யார் என தெரியாது. இன்னும் முகத்தை பார்க்கவில்லை. பனியில் கொஞ்சம் தொண்டை கட்டி கரகரவென பேசியதால் குரலும் மாறியிருந்தது. இவள் என் காதலி கோமதியா? இல்லையா? என்பதை தாண்டி கோமதி என்ற பெயருக்காகவே கண்டிப்பாக அந்த பெண்மணியின் முகத்தை காண வேண்டும் என்ற ஆவல் மட்டும் காரணமில்லாமல் மனதிற்குள் என்னையும் அறியாமல் இருந்துக் கொண்டே இருக்கிறது.
நாளைக்கு முதல் வேலை இந்த அபார்மெண்டில் இருக்கும் கோமதியை எந்த ப்ளாக், ப்ளாட் நம்பர் தெரிந்து கொள்ள வேண்டும் என முடிவு செய்து என்னுடைய ப்ளாட்டிற்க்கு வந்து சேர்ந்தேன்.. அந்த நினைப்புடனே படுக்கையில் படுத்தேன். ஆனால் தூக்கம் தான் வரவில்லை.. என் காதலியுடன் இருந்த பசுமையான நினைவுகள் மற்றும் இப்போது பார்த்த இந்த முகம் தெரியாத கோமதியை பற்றிய சிந்தனை மாறி மாறி வந்துக் கொண்டேயிருந்தது.
இளம் வயதில் காதலின் ஆழம் என்னவென்று புரியவில்லை. வாழ்க்கையில் செய்ய வேண்டிய கடமைகள் முடிந்த பிறகு இந்த வயதில் கோமதி என்ற அந்த ஒற்றை வார்த்தை மீண்டும் அவள் மீதான காதலை உயிர்பித்து மலர செய்துள்ளது. அவளை மீண்டும் பார்ப்பேனா? இல்லையா? என தெரியவில்லை. ஆனால் அவளை காதலித்த காலகட்டத்தை இப்போது நினைத்து பார்க்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது என நினைத்துக் கொண்டே என்னையும் அறியாமல் கண் அயர்ந்தேன்.
காலையில் மொபைல் அடிக்கும் சத்தம் கேட்டு தான் விழித்தேன்.. மணியை பார்க்கும் போது ஏழாகி இருந்தது.. மொபைல் தொடர்ந்து அடித்துக் கொண்டேயிருந்தால் அதை எடுத்து பார்த்தேன். என் மகள் தீப்தி தான் பண்ணியிருந்தாள்.. கால் செய்ததும்
"விஸ் யூ ஹேப்பி நியூ இயர்ப்பா." சொல்லி கூடவே அன்பு முத்தத்தை குடுத்தாள்..
"சரிம்மா நீ எப்படி இருக்க.. மாப்பிள்ளை நல்லா இருக்காரா?"
"ரெண்டு பேரும் நல்லா இருக்கோம்.. யூ டோன்ட் வொரி.. நீ இங்க இருந்தா நல்லா இருந்திருக்கும்.. எவ்வளவு சொல்லியும் கேட்கவே இல்ல.."
"நா ஆர்மி மேன்ம்மா.. நா எப்படி என் நாட்ட விட்டு வருவேன்.."
"பொண்ணு பக்கத்துல இருக்கனும் மனசு வச்சாலே எல்லாமே முடியும்.."
"உன்கிட்ட பேசி ஜெயிக்க என்னால முடியாது.."
"ஹா.. ஹா.. சரிப்பா அந்த அபார்மெண்ட் எப்படி இருக்கு.. எல்லாம் ஓகே தான.."
"இப்ப தான்ம்மா திங்கஸ் ஸ்ப்ட் பண்ணி வந்திருக்கேன்.. பாக்கலாம்.. நேத்து நைட் இங்க நியூ இயர் செலிப்ரேட் பண்ணாங்க.."
"ஓ சூப்பர்.. நீங்களும் போய் அட்டன் பண்ணிங்களா?"
"இல்லம்மா அத உன்ன மாதிரி யூத் தான் இருந்தாங்க. சோ ஓரமா உட்காந்து பாத்திட்டு இருந்தேன்.. சரி இப்ப அமெரிக்காவுல நைட் தான"
"ஆமாப்பா.. இனி தான் டின்னர் ரெடி பண்ணனும்.."
"சரிம்மா நீ போய் ரெடி பண்ணும்மா.. நானும் போய் என் வேலைய பாக்குறேன்." சொன்னதும்
"சரிப்பா.. பை. டேக் கேர்" சொல்லி காலை கட் செய்ததும் என் வாழ்க்கை கொஞ்சம் சலிப்பாக தோன்றியது. சட்டென்று அபார்மெண்டில் இருக்கும் அந்த கோமதியை பற்றி நினைப்பு வந்ததும் எனக்குள் கொஞ்சம் சுறுசுறுப்பு வந்தது..
மீண்டும் அவளுடன் வருவேன்.