17-05-2019, 12:51 PM
ஊட்டி மலர் கண்காட்சி துவங்கியது
ஊட்டி: ஊட்டியில் இன்று(மே 17), மலர் கண்காட்சி துவங்கியது. கண்காட்சியை கவர்னர் பன்வாரிலால் புரோஹித் துவக்கி வைத்தார். இதனையொட்டி சுற்றுலா பயணியருக்காக, பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்டம், ஊட்டி தாவரவியல் பூங்காவில், 123வது மலர் கண்காட்சி, இன்று துவங்கி, 21ம் தேதி வரை, ஐந்து நாட்கள் நடக்கிறது. கண்காட்சிக்கு வரும் சுற்றுலா பயணியரை கவர, தாவரவியல் பூங்காவில் பல்வேறு மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.பூங்காவின் பெரணி இல்லம் அருகே, கார்னேஷன் மலர்களால், பார்லிமென்ட் வடிவம் தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு, 2 லட்சம் மலர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.