screw driver ஸ்டோரீஸ்
ம்ம்.. உனக்கு ஏன் இந்த தேவை இல்லாத வேலைலாம்..?? அவன் சொல்ற மாதிரி ஆட் ரெடி பண்ணி தர்றது மட்டுந்தான்டா நம்ம வேலை..!!"

"ப்ச்.. என்னால அப்படி இருக்க முடியல..!!"

"முடியாது.. உன்னால முடியாது.. நீ பாட்டுக்கு அந்த ஆள் கூட சண்டை போட்டுட்டு வந்துட்ட.. அப்புறம் நான் அவன் கைல காலுல விழுந்து, காண்ட்ராக்ட் கேன்சல் ஆகாம பாத்துக்கிட்டேன்..!! ஷ்ஷ்ஷ்ஷ்.. முடியலடா சாமி.. உன்னை வச்சுக்கிட்டு என்ன பண்றதுன்னே எனக்கு ஒன்னும் புரியல..!! ஹ்ம்ம்ம்ம்... போன வாரம் ஒரு தெலுகு படம் பாத்தேன்.. அதுல.. ஹீரோ ரொம்ப முரட்டுப்பயலா இருப்பான்.. அவனை பாத்து.. காமடியன் ஒரு டயலாக் சொல்வாரு..!! அந்த டயலாக்தான் எனக்கும் உன்னை பாத்து சொல்ல தோணுது..!!"

"ஓ.. அப்படி என்ன டயலாக்..??"

"ம்ம்.. 'இவன் ரொம்ப வயலண்டா இருக்கான்டா.. இவனுக்கு கொஞ்சம் பூ, பொண்ணுலாம் கண்ணுல காட்டுங்கடா..'ன்னு சொல்வாரு..!!"

"ஹாஹா... பூ, பொண்ணுலாம் பாத்துட்டா..??"

"நீ இப்படிலாம் பிரச்னை பண்ண மாட்டேன்னு தோணுது..!! நீ பெருசா மக்கர் பண்றதே இந்த லவ்ன்ற மேட்டர்லதான்.. லவ்வை பத்தி நீ வச்சிருக்குற தப்பான அபிப்ராயத்துலதான்.. நீ ஏதாவது ஒரு பொண்ணை லவ் பண்ண ஆரம்பிச்சேன்னா.. எல்லாம் சரியாயிடும்னு எனக்கு தோணுது.. நம்ம பிசினசும் நல்லபடியா உருப்படும்னு தோணுது..!!"

"போடா.. இந்த பரந்தாமன், மோகன்ராஜ்-க்காகலாம் என்னை லவ் பண்ண சொல்றியா..??"

"சரி.. அவனுகளுக்காக பண்ண வேணாம்.. எங்களுக்காக பண்ணு..!!"

"உங்களுக்காகவா.??"

"ம்ம்.. உன்னோட ஃப்ரண்ட்ஸ் நாங்க எல்லாம் லவ் பண்றோம்.. எங்களை பாத்து உனக்கு லவ் மேல ஆசை வரல..??" கிஷோர் அந்த மாதிரி கேட்க,

"ஏய்.. நீங்களாடா..?? உங்களை பாத்தப்புறந்தான்.. எனக்கு லவ் மேல இருந்த கொஞ்ச நஞ்ச ஆசையும் காணாமப் போயிடுச்சு..!!" அசோக் கிண்டலாக சொன்னான்.

"ஏண்டா இப்படி சொல்ற..??"

"பின்ன..?? ஒருத்தன்.. லவ் பண்றவ.. பாடுறேன்ற பேர்ல நரி மாதிரி 'ஊஊஊ'ன்னு ஊளையிடுறதைலாம்.. லவ்லி வாய்ஸ்னு மனசாட்சியே இல்லாம பொய் சொல்றவன்..!!" - அசோக் அவ்வாறு சொன்னதும் கிஷோர் தலையை தொங்கப் போட்டுக் கொண்டான்.

"ஒருத்தன்.. பாத்ரூம் போறதுக்கு கூட 'ரொம்ப அர்ஜன்ட்மா.. போயிட்டு வந்து பேசுறேனே.. ப்ளீஸ்..' அப்டின்னு பெர்மிஷன் கேக்குறவன்..!!" - இப்போது வேணு தலையை கவிழ்த்துக் கொண்டான்.

"ஒருத்தன்.. லவ்வர் செருப்பால அடிக்காத குறையா.. 'என் மூஞ்சிலயே முழிக்காத'ன்னு.. இவன் மூஞ்சில காறித்துப்பிட்டு போனப்புறமும்.. இன்னும் அவளையே நெனச்சுக்கிட்டு.. 'அன்பே.. அழகே.. அவிச்ச முட்டையே.. அழுகுன முள்ளங்கியே..'ன்னு.. கவிதை எழுதிட்டு இருக்குறவன்.." - நீங்கள் நினைத்தது சரிதான். சாலமன் இப்போது மண்டையை தொங்க போட்டுக் கொண்டான்.

"உங்களை மாதிரிலாம் மானங்கெட்டு லவ் பண்றதுக்கு.. லவ் பண்ணாமலே இருக்கலாம்..!!" அசோக் முடிவாக சொல்ல,

"ஷ்ஷ்ஷ்ஷ்.. முடியல மச்சி..!! காதல் மேல உனக்கு அப்படி என்ன வெறுப்பு..?? சொல்லு மச்சி.. சொல்லு..!!" வேணு உணர்சிகரமாக கேட்டான்.

"என்னடா.. தமிழ் சினிமால.. ஹீரோயின் அப்பாகிட்ட பேசுற டயலாக்லாம் எங்கிட்ட பேசுற..?? எனக்கு காதல் மேலலாம் எந்த வெறுப்பும் இல்ல.. காதல்ன்ற பேர்ல நீங்க லூசுத்தனமா என்னன்னவோ பண்றதுதான் காமடியா இருக்கு..!! உங்களோட சுயத்தை இழந்துட்டிங்களேடா.. காதல் பண்றோம்னு உங்க ஒரிஜினாலிட்டியை தொலைச்சுட்டிங்களே..??" அசோக்கின் கேள்விக்கு இப்போது கிஷோர் பதில் சொன்னான்.

"மச்சி.. இதுலாம் உனக்கு புரியாது.. நீயும் ஒரு பொண்ணை லவ் பண்ணினாத்தான்.. எங்கபக்கம் இருக்குற நியாயத்தை உன்னால புரிஞ்சுக்க முடியும்..!! பண்ணிப்பாருடா.. எங்க கஷ்டம் உனக்கும் புரியும்..!!"

"ஹாஹா.. நான்லாம் லவ் பண்ணினேன்னா.. உங்களை மாதிரி பண்ண மாட்டேன் மச்சி..!!"

"அப்புறம்..??"

"வேற.. வேற.. வேற மாதிரி பண்ணுவேன்..!!" விஜய் மாதிரி அசோக் ஸ்டைலாக சொன்னான்.

அதற்குமேல் அவனிடம் என்ன பேசுவது என்றே புரியாமல், மற்றவர்கள் அமைதியாகினர். கொஞ்ச நேரம் பொறுத்துப் பார்த்த அசோக், அப்புறம் அவனே ஆரம்பித்தான்.

"சரி.. அந்தக்கதைலாம் அப்புறம் பேசிக்கலாம்..!! தண்ணியடிக்க போலாமா இன்னைக்கு.. நான் ட்ரீட் தர்றேன்..!!"

"என்னடா மச்சி திடீர்னு..??"

"இன்னைக்கு என் பர்த்டேடா..!!" அசோக் கூலாக சொல்ல, எல்லோர் முகத்திலும் இப்போது திடீர் மலர்ச்சி.

"டேய்.. என்னடா நீ.. இவ்ளோ சாதாரணமா சொல்லிட்டு இருக்குற..?? ஹேப்பி பர்த்டேடா மச்சி..!!!!" எல்லோரும் அவனுடைய கையை குலுக்கி வாழ்த்து தெரிவித்தார்கள்.

"ஹ்ம்ம்.. பர்த்டேயும் அதுவுமா.. ஒரு புல்டாக்கு என்னை டென்ஷன் பண்ணிட்டான் மச்சி..!!"

"ஹேய்.. நான் என்னடா பண்ணினேன்..??" கிஷோர் அவசரமாக, பரிதாபமாக கேட்க,

"உன்னை சொல்லலடா.. அந்த பரந்தாமன் டாகை சொன்னேன்..!! செம டென்ஷன்.. இன்னைக்கு கண்டிப்பா தண்ணி போட்டே ஆகணும்..!!"

"ஏய்.. இப்படி திடீர்னு சொன்னா எப்படிடா..??" வேணு சலித்துக் கொண்டான்.

"ஏன்.. உன் ஆளுட்ட பெர்மிஷன் கேக்கணுமா..??"

"ம்ம்..!!"

"போ போ.. போய் கேளு போ..!!"

அசோக் சொன்னதும், வேணு செல்போனை எடுத்துக்கொண்டு கிளம்பினான். இப்போது கிஷோரும் தனது செல்போனை எடுக்க,

"ஏய்.. என்னடா.. நீயும் பாத்ரூம் போறதுக்குலாம் அவகிட்ட பெர்மிஷன் கேட்க ஆரம்பிச்சுட்டியா..??"

"ஹிஹி.. பாத்ரூம் போறதுக்கு தேவை இல்ல மச்சி.. பாருக்கு போறதுன்னா.. சொல்லிட்டுத்தான் போகணும் மச்சி..!!"

இளிப்புடன் சொல்லிவிட்டு செல்கிற கிஷோரையே அசோக் எரிச்சலாக பார்த்தான். இப்போது சாலமனும் செல்போனை எடுத்துக்கொண்டு கிளம்ப, அசோக் உச்சபட்ச கடுப்பானான்.

"டேய்.. அவனுகதான் லவ் பண்ற பொண்ணுககிட்ட பெர்மிஷன் கேக்க போறானுக..?? நீ எங்க போற.. உனக்குத்தான் பிரேக்கப் ஆயிடுச்சுல..??"

"இல்ல மச்சி.. எதுக்கும் கேட்டு வைக்கிறேன்.. ப்யூச்சர்ல யூஸ் ஆனாலும் ஆகலாம்டா..!!" சாலமன் பாவமாக சொன்னான்.

"அடப்பாவி..!!!!"

"அவ வேணா.. ஒரு நல்ல காதலியா இல்லாம இருக்கலாம் மச்சி.. ஆனா.. நான் நல்ல காதலன் மச்சி.. நான் நல்ல காதலன்..!!" அழுகிற குரலில் சாலமன் சொல்ல,

"கிழிஞ்சது..!! போடா.. போய்த்தொலைடா..!!" என்று தலையில் அடித்துக் கொண்டான்.

அப்புறம் அவர்கள் ஆளாளுக்கு பெர்மிஷன் கேட்டு திரும்பும் வரை, அசோக் கடுப்புடன் காத்திருந்தான். பிறகு எல்லோரும் ஆபீஸுக்கு தாழிட்டு கிளம்பினார்கள் அருகிலேயே இருக்கும் ஒரு பாருக்கு சென்று, இஷ்டம்போல் மது அருந்தினார்கள். திரவ உணவு அருந்திவிட்டு.. திட உணவும் அருந்த நினைத்தார்கள். அவர்கள் எப்போதும் மதிய உணவு அருந்துகிற ஃபுட் கோர்ட்டிற்கு, இரவு உணவு அருந்த வந்து சேர்ந்தார்கள். அவரவருக்கு பிடித்த ஐட்டங்களை ஆர்டர் செய்து வாங்கிக்கொண்டு, மூலையில் கிடந்த டேபிள் ஒன்றை ஆக்கிரமித்துக்கொண்டு, ஆர்டர் செய்த ஐட்டங்களை வயிற்றுக்குள் அனுப்ப ஆரம்பித்தனர்.

எல்லோரும் நல்ல போதையில் இருந்தனர். பேச்சு எங்கெங்கோ சென்று சுற்றி மீண்டும் காதலில் வந்து அமர்ந்தது. அப்போதுதான் சாலமன் அசோக்கிடம் மெல்ல கேட்டான்.

"நீ ஏன் மச்சி யாரையாவது லவ் பண்ணக்கூடாது..??"

"என்னடா நீங்க.. ஆளாளுக்கு லவ் பண்ணு லவ் பண்ணுன்னு சொல்றீங்க.. திடீர்னு நான் யாரைப்போய் லவ் பண்றது..?? லவ் பண்றதுக்கு பொண்ணு வேணாமா..?? அதுவும் எனக்கு பிடிச்ச மாதிரி பொண்ணா இருக்கணும்..??"

"என்ன மச்சி.. நாட்டுல பொண்ணுகளுக்கா பஞ்சம்..?? இப்போ நாங்கல்லாம் லவ் பண்ணல.. எங்களுக்குலாம் பொண்ணுக கெடைக்கல..??"

என்று நாகுழற கேட்டான் கிஷோர். அவன் அவ்வாறு கேட்டதும், அசோக் இப்போது மீண்டும் நக்கலாக ஆரம்பித்தான்.

"யாரு.. நீங்க லவ் பண்ணின பொண்ணுகதான..?? ஒருத்தனை பிரண்டுன்னு நம்ம்ம்பி.. இன்னொருத்தன் அவன் வீட்டுக்கு கூட்டிட்டு போனான்.. வீட்டுக்கு போனவன் என்ன பண்ணினான் தெரியுமா.. கூட்டிட்டு போன பிரண்டு தங்கச்சியையே.. உஷார் பண்ணிட்டான்..!!!!" - அசோக் அந்த 'நம்பி'க்கு தனி அழுத்தம் கொடுத்து, அவ்வாறு சொன்னதும் கிஷோர் தலையை தொங்கப் போட்டுக் கொண்டான்.

"ஒருத்தனை தம்பின்னு நம்ம்ம்பி.. அண்ணன் ஒருத்தன்.. தனக்கு பொண்ணு பாக்க தம்பிகிட்ட மேட்ரிமோனி ஐடி, பாஸ்வோர்ட் குடுத்தான்.. அதுல லட்டு மாதிரி ஒரு அலையன்ஸ் வந்ததும்.. வீட்டுக்கே தெரியாம தனியா லவட்டிட்டு வந்து.. இப்போ இவன் அந்த பொண்ணை லவ் பண்ணிட்டு இருக்குறான்..!!" - இப்போது வேணு தலையை தொங்கப்போடும் முறை.

"இன்னொருத்தன் ப்ளஸ் டூ படிக்கிறப்போவே பயங்கர கேடி, கிரிமினல் நாயி.. பையன் கணக்குல வீக்கா இருக்கானேன்னு.. ஒரு அப்பா பையன் மேல உள்ள அக்கறைல.. அவனை நம்ம்ம்பி.. கணக்கு ட்யூஷனுக்கு அனுப்பிச்சா.. பையன் கணக்கு டீச்சரையே கணக்கு பண்ணிட்டான்.. இவ்வளவுக்கும் அது அஞ்சு வயசு மூத்த ஆண்ட்டி..!!"

"ஒய்.. என் ஆளை ஆண்ட்டின்னு சொல்ற வேலைலாம் வச்சுக்காத அசோக்கு..!! அஞ்சு வயசுலாம் ஒன்னும் இல்ல.. மூணு வயசுதான் டிபரன்ஸ்..!!" என்று தாழ்ந்த குரலில் தன் மறுப்பை தெரிவித்தாலும், தலையை தொங்கப்போடவும் தவறவில்லை சாலமன்.

இப்போது கிஷோர் தன் தலையை நிமிர்த்தி அசோக்குக்கு பதில் சொன்னான்.

"மச்சி.. 'All is fair in love and war'..!! காதல்ன்ற ஒரு விஷயமே.. நீ சொன்ன கம்ப்ளயின்ட் எல்லாத்தையும் சரி பண்ணிடும்டா..!!"

"போங்கடா.. என்னாலலாம் யாரோட நம்பிக்கையையும் கொன்னுட்டு.. அதுமேல காதல் செய்ய முடியாது..!!"

"அப்படிலாம் பாத்தா யாரையுமே லவ் பண்ண முடியாதுடா..!!"

"ஏன்.. பண்ணனும்னு நெனச்சா பண்ணலாம்..!!"

"சரி.. மத்தவங்கள விடு.. நீ எந்த மாதிரி பொண்ணை லவ் பண்ணுவ..??"

வேணு அந்த மாதிரி கேட்கவும் அசோக் சற்றே நிதானித்தான். சில வினாடிகள்..!! பிறகு.. எங்கோ சூனியத்தை வெறித்தவாறு மெல்லிய குரலில், ரசனையாக சொன்னான்.

"நான் லவ் பண்றதா இருந்தா.. யாராவது ஒரு 'Perfect Stranger'-ஐத்தான் லவ் பண்ணுவேன்..!!"

"ம்ம்.. பாத்துடா.. கடைசில அவ 'Perfect Psycho'-வா இருக்கப்போறா..!!"

வேணு கிண்டலாக சொல்லிக்கொண்டிருக்கும்போதே, சாலமனின் செல்போன் கிணுகிணுத்தது. யார் அழைப்பது என்று எடுத்து பார்த்தான் சாலமன். பார்த்ததுமே, ஏதோ தங்க வேட்டையில் வென்றவன் மாதிரி துள்ளிக் குதித்தான். அசோக்கைப் பார்த்து கத்தினான்.

"மச்சி.. நான் சொன்னேன்ல.. ப்யூச்சர்ல யூஸ் ஆகும்னு..?? இன்னைக்கே யூஸ் ஆகிடுச்சுடா.. எனக்கு மிஸ்ட் கால் குடுத்திருக்கா.. ஐயோ.. எனக்கு தலயும் புரியல.. காலும் புரியல..!! இருங்கடா.. இதோ வந்துர்றேன்..!!" என்றவாறு செல்போனை எடுத்துக்கொண்டு ஓடினான். அவனுடைய சந்தோஷத்தை பார்த்து கிஷோருக்கும் ஆசை வந்திருக்கும் போலிருக்கிறது.

"மச்சி.. நீங்க பேசிட்டு இருங்கடா.. நான் இதோ வந்துர்றேன்..!!" என்றவாறு பாக்கெட்டில் இருந்த செல்போனை எடுத்துக்கொண்டே கிளம்பினான். அவன் சென்ற சில வினாடிகளிலேயே,

"மச்சி.. நீ சாப்பிட்டுட்டு இருடா.. இதோ வந்துர்றேன்..!!"

சொல்லிக்கொண்டே வேணுவும் அசோக்கை தனியாக விட்டுவிட்டு, அங்கிருந்து அகன்றான். அசோக் எல்லோரும் செல்வதையே ஒருவித ஏக்கத்துடன் பார்த்தான். திடீரென தனியாகிப்போனதும், சாப்பிட்டுக்கொண்டிருந்த ப்ரைட் ரைசை அதற்கு மேலும் உண்ண மனமில்லாமல், ஓரமாக ஒதுக்கி வைத்தான்.

அசோக் எல்லாரிடமும் காதலைப்பற்றி சற்று ஏளனமாக பேசினாலும், 'உங்களைப்பாத்து எனக்கு காதலிக்கிற ஆசையே போயிடுச்சு..' என்று நண்பர்களிடம் சொல்லியிருந்தாலும், அவன் மனதில் எப்போதும் ஒரு மெலிதான ஏக்கம் உண்டு.. தனக்கென்று ஒரு பெண் இல்லையே என்ற ஏக்கம்..!! அதுவும்.. இந்த மாதிரி.. நண்பர்கள் எல்லோரும் தனித்து விட்டு செல்கையில்.. பேசுவதற்கு யாரும் இல்லாத சூழலில்.. அந்த ஏக்கம் சற்று அதிகமாகவே மேலெழும்..!! 

இப்போதும் அப்படித்தான்..!! ஒரு மாதிரியான விரக்தி உணர்வு மனதுக்குள் மெல்ல பரவியது..!! அந்த ஃபுட் கோர்ட்டை ஆக்கிரமித்திருந்த மக்களை இலக்கில்லாமல் வெறித்தான்..!! அப்போதுதான் அசோக்கின் கண்ணில் அவள் பட்டாள்.

[Image: RA+3.jpg]

அவர்கள் அமர்ந்திருந்த டேபிளுக்கு சற்று தள்ளி.. தனியாக.. தட்டில் இருந்த உணவை உண்ண மறந்தவளாய்.. எங்கேயோ வெறித்து பார்த்தவாறு அமர்ந்திருந்தாள்.. அமைதியே உருவாக..!! அழகாக.. அழகாக.. மிக மிக அழகாக இருந்தாள்..!! தேவதைக்கு ஜீன்சும், டி-ஷர்ட்டும் மாட்டி விட்ட மாதிரி.. தேன் நிலாவுக்கு பொட்டும், லிப்ஸ்டிக்கும் போட்டு விட்ட மாதிரி..!!

அவளை இதே ஃபுட் கோர்ட்டில் அசோக் ஓரிரு தடவைகள் பார்த்திருக்கிறான். எப்போதும் தனியாகத்தான் வருவாள். தனியாக வரிசையில் நின்று, பிடித்த உணவை வாங்கிக் கொள்வாள். தனியாக சென்று அமர்ந்து கொள்வாள். யாரிடமும் பேச மாட்டாள். தனியாகவே அமர்ந்து சாப்பிட்டுவிட்டு, பிறகு காணாமல் போவாள்.

அசோக் அவளையே பார்த்துக் கொண்டிருக்க, அவள் ஒருமுறை இவனை எதேச்சையாக திரும்பி பார்த்தாள். அவளுடைய பார்வையில் எந்த உணர்ச்சியும் இருக்கவில்லை. ஓரிரு விநாடிகள்தான். அப்புறம் வேறெங்கோ பார்வையை செலுத்தி வெறித்தாள். அசோக் அதன்பிறகும் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். சற்றுமுன் அவன் சொன்ன, 'Perfect Stranger' என்ற வார்த்தைகள், அவனது மூளையை அவசரமாய் குறுக்கிட்டன.
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 17-05-2019, 12:43 PM



Users browsing this thread: 8 Guest(s)