Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
[Image: 155805803061696.jpg]
இந்தியா
கோவாவில் செல்பி எடுத்த போது பெண் டாக்டர் உயிரிழப்பு

கோவா கடற்கரையில் செல்பி எடுக்க முயன்ற போது கடல் அலைகளில் சிக்கி உயிரிழந்த ஆந்திராவைச் சேர்ந்த இளம் பெண் மருத்துவர் ரம்யா கிருஷ்ணாவின் உடல் அவருடைய சொந்த ஊரான ஜக்கையா பேட்டைக்கு கொண்டு வரப்பட்டது.

கோவா அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த ரம்யா கிருஷ்ணா நேற்றுமாலை கடற்கரைக்கு சென்றார். கடலை பின்புலமாகக் கொண்டு அவர் தமது செல்போனில் செல்பி எடுக்க முயன்ற போது திடீரென எழுந்த ராட்சத அலை அவரை கடலுக்குள் இழுத்துச் சென்றது. அவரது உடலை மீனவர்களும் காவல்துறையினரும் கடலுடன் போராடி மீட்டனர்.

அவருடைய உடல் இன்று காலை அவருடைய சொந்த ஊருக்கு இறுதிச் சடங்குகளுக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. மருத்துவம் படித்து அரசு மருத்துவராகப் பணியாற்றி வந்த இளம் பெண்ணின் செல்பி மோகம் அவர் உயிரையே பறித்து விட்டதால் அந்த ஊரே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 17-05-2019, 11:34 AM



Users browsing this thread: 84 Guest(s)