Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
2 வேடங்களில் ரஜினிகாந்த்


[Image: 201905170121420473_Rajinikanth-in-2-roles_SECVPF.gif]

[Image: t-max-icon.png] [Image: t-min-icon.png] Text Size [Image: print-icon.png] Print
ரஜினிகாந் தர்பார் படத்தில் 2 வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நயன்தாரா, யோகிபாபு ஆகியோரும் இணைந்து நடித்து வருகிறார்கள். 3 மாதங்கள் தொடர்ச்சியாக அங்கு படப்பிடிப்பை நடத்த உள்ளனர். இந்த படத்தின் கதை மற்றும் கதாபாத்திரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளன. 


சமீபத்தில் ரஜினிகாந்தின் தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டனர். அதில் போலீஸ் மோப்ப நாய், போலீஸ் பெல்ட், தொப்பி, குற்றம் நடக்கும் இடங்களில் ஒட்டப்படும் மஞ்சள் டேப் ஆகியவை இருந்தன. அதைவைத்து ஐ.பி.எஸ் அதிகாரியாக ரஜினிகாந்த் நடிப்பது உறுதிப்படுத்தப்பட்டது. 

இந்த நிலையில் ரஜினிகாந்த் தர்பார் படத்தில் 2 வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் ஒரு கதாபாத்திரத்தை மும்பையை மிரட்டும் ரவுடிகளை சுட்டுத்தள்ளும் என்கவுண்ட்டர் போலீஸ் அதிகாரியாக சித்தரித்து இருப்பதாக கூறப்படுகிறது. இன்னொரு வேடம் பாட்சா போன்று தாதாவாக இருக்கலாம் என்று பேசப்படுகிறது. ஆனாலும் படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை. 

தாதா ரஜினிக்கு மகளாக நிவேதா தாமஸ் நடிக்கிறார். என்கவுண்ட்டர் போலீஸ் அதிகாரியான ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா வருகிறார். தற்போது என்கவுண்ட்டர் போலீஸ் காட்சிகளை படமாக்கி வருகின்றனர்.
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 17-05-2019, 10:17 AM



Users browsing this thread: 4 Guest(s)