Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
`தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்குமார்' - குச்சனூர் கோவில் கல்வெட்டால் சர்ச்சை
பிரபலமான சனீஸ்வர பகவான் திருக்கோயிலான குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் நேற்று (16.5.2019)  அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டில், `தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்குமார்' என பொறிக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
[Image: IMG-20190516-WA0130_00016.jpg]

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே அமைந்துள்ளது சுயம்பு சனீஸ்வரபகவான் திருக்கோயில். கோயில் வளாகத்திற்குள்ளேயே அமைந்துள்ளது காசி ஶ்ரீ அன்னபூரணி கோயில். இக்கோயிலில் நேற்று (16.5.2019) கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து கோயிலுக்குள் அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டில், கோயிலுக்கு உதவி புரிந்தவர்கள் எனக் குறிப்பிட்டு துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெயர் மற்றும் ஓ.பி.எஸ்ஸின் கடைசி மகன் ஜெயபிரதீப் குமார் பெயர் இடம்பெற்றுள்ளது. இவை அனைத்துக்கும் மேலாக, `தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்குமார்' என்று பொறிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்து இன்னும் வாக்கு எண்ணிக்கை முடியாத நிலையில், கோயில் நிர்வாகம், ரவீந்திரநாத்குமாரை எப்படி தேனி எம்.பி என்று கல்வெட்டில் பொறிக்கலாம் என எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்புகின்றனர்.


[Image: IMG-20190516-WA0131_00451.jpg]




இந்த நிலையில், இச்சம்பவம் குறித்து விசாரித்தபோது, ``கோயில் நிர்வாகத்துக்குத் தெரியாமல் இது நடந்திருக்காது. அதில் தேதி 16.5.2019 எனக் குறிப்பிட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை வரும் 23-ம் தேதி நடைபெறும் நிலையில், அதற்கு முன்னதாகவே துணைமுதல்வரின் மகன் ரவீந்திரநாத்குமாரை எம்.பி என அறிவிக்கும் விதமாக கல்வெட்டு பொறிக்கப்பட்டிருப்பதன் பின்னால், அரசு அதிகாரிகள் இருப்பதையே காட்டுகிறது" என்கிறார்கள் தகவலறிந்த வட்டாரங்கள். குச்சனூர் சனீஸ்வரபகவான் கோயிலும், அதன் வளாகத்துக்குள் உள்ள காசி ஶ்ரீஅன்னபூரணி கோயிலும், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 17-05-2019, 10:09 AM



Users browsing this thread: 1 Guest(s)