17-05-2019, 09:50 AM
சீனாவுக்கு அடுத்தடுத்து செக் வைக்கும் அமெரிக்கா.. சீனா தொலைத்தொடர்பு சாதனங்களுக்கு தடை
வாஷிங்டன் : அமெரிக்கா சீனாவிடையே நிலவி வரும் வர்த்தக போர் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கும் இந்த நிலையில், அமெரிக்கா அதன் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால், அமெரிக்க தொலைத் தொடர்பு நிறுவனங்கள், வெளிநாட்டு தொலைத் தொடர்பு நிறுவனங்களில் தயாரிக்கப்படும் தொலைத் தொடர்பு சாதனங்களை பயன்படுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த நிலையில் ஏற்கனவே அமெரிக்கா - சீனா ஆகிய இரு பெரும் பொருளாதார நாடுகளுக்கு இடையே நடக்கும் வர்த்தகப் போரை இந்த தடை உத்தரவு மேலும் தீவிரப்படுத்துவதாய் அமைந்துள்ளது.
இந்த தடையை அமல்படுத்துமாறு கடந்த புதன்கிழமையன்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டார். இந்த நிலையில் இந்த உத்தரவில் எந்த ஒரு தனி நிறுவனத்தையோ அல்லது நாட்டையோ குறிப்பிடவில்லை என்று கூறப்பட்டுள்ளதாம். எனினும் இது சீனாவின் ஹூவாய் போன் நிறுவனங்களுக்கான 'செக்' என்றே அதிகாரிகள் மத்தியில் கருத்து நிலவி வருகிறது.