08-01-2022, 12:43 AM
(18-12-2021, 12:39 PM)Vandanavishnu0007a Wrote:
என்ன bigger போட்டாலும் ஆதரவும் பார்வையாளர்களும் கமெண்ட்ஸ்களும் கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது நண்பா
ஏன் எழுத்தாளர்கள் கதைகளை பாதியில் நிப்பாட்டுகிறார்கள் என்ற உணர்வை நானும் கொஞ்சம் கொஞ்சமாக புரிந்து கொள்ள ஆரம்பித்துவிட்டேன் நண்பா
அதனால் தான் இப்போதெல்லாம் தேவை இல்லாமல் கதை எழுதுவதற்கு நேரம் செலவிடுவதில்லை
நாலு வரி போட்டாலும் ஒரே ரியாக்ஷன் தான் நாப்பது வரி போட்டாலும் அதே ரியாக்ஷன் தான்
அதானால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஓரிரு வரிகள் அப்டேட் பண்ணலே போதும் என்று முடிவெடுத்து விட்டேன் நண்பா
இனிமே குட்டி குட்டி அப்டேட்ஸ் தான் நண்பா
தயவு செய்து தவறாக நினைத்துக்கொள்ளாதீர்கள் நண்பா
உங்கள் பேராதரவுக்கும் கமெண்ட்ஸ்க்கும் மிக்க நன்றி நண்பா
ஹாய் வந்தனா விஷ்ணு , உங்கள் நிலைமை புரிகிறது . ஒவ்வொரு கதாசிரியருக்கும் வாசகர் விமர்சனங்களும் பாராட்டும் முக்கியமானது தான்.
உங்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த அளவு வரவேற்பு இல்லாததற்கு என்ன காரணம் என்று யோசித்து பார்த்தீர்களா? கண்டிப்பாக உங்கள் "அப்ரோச்" தான்.
தளத்திற்கு வந்து ஒரு வருடம் கூட ஆகவில்லை அதற்குள் 13 திரிகள் தொடங்கியுள்ளீர்கள். ஒரு கதையைக்கூட இன்னும் முடிக்கவில்லை.
எனக்குள் ஒருவன் கதையை தொடர்ந்து படித்துக்கொண்டிருந்தேன்.ஒரு பதிவு முடிந்து அடுத்த பதிவிற்கு ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது. இந்த தாமதத்தினால் அந்த கதையை வாசிப்பதை நிறுத்திவிட்டேன். இடையில் உங்கள் உடல்நிலை சரியில்லை என்றால் இன்னும் தாமதமாகும். ஆகவே ஒரு கதையை முழுவதும் முடித்துவிட்டு அடுத்த கதையை எழுதுங்கள்.
பல கதைகளை ஒரே நேரத்தில் எழுதுவதால் தாமதம் அதிகமாவதோடு வாசகர்களும் பொறுமை இழந்து கதை வாசிப்பதை நிறுத்திவிடுவார்கள்.
மனதில் பட்டதை கூறிவிட்டேன் நண்பா. சிந்தித்து பாருங்கள்.