Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
வரியை அதிரடியாக உயர்த்தி அமெரிக்காவுக்கு சீனா பதிலடி
[Image: 201905151013475662_trade-war-China-raise...SECVPF.gif]

பீஜிங்:

உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தக போர் மூண்டுள்ளது. சமீபத்தில் சீனாவில் இருந்து இறக்குமதியாகும் ரூ.1 லட்சத்து 41 ஆயிரத்து 250 கோடி மதிப்புள்ள (இந்திய மதிப்பில்) பொருட்களுக்கு 10 சதவீதமாக இருந்த இறக்குமதி வரியை 25 சதவீதமாக அமெரிக்கா உயர்த்தியது. இது

 சீனாவுக்கு அதிர்ச்சியாக அமைந்தது
உடனடியாக அமெரிக்காவுக்கு சீனாவும் பதிலடி கொடுத்தது. அது, அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியை உயர்த்தியுள்ளது. ரூ.42 ஆயிரத்து 375 கோடி மதிப்புள்ள அமெரிக்க பொருட்களுக்கு சீனா இறக்குமதி வரியை உயர்த்தி உள்ளது. சீனாவின் நிதித்துறை அமைச்சகம் இதனை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுடன் சீனா உடனே வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ளாவிட்டால், மேலும் வரி உயர்வு செய்யப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், எச்சரிக்கையும் விடுத்தார்.

இதையொட்டி சீனா பதில் அளித்துள்ளது. அந்த நாட்டின் வெளியுறவு செய்தி தொடர்பாளர் செங் சுவாங் நேற்று கருத்து தெரிவிக்கையில், “வரிகளை உயர்த்திக்கொண்டே போவது பிரச்சினைக்கு தீர்வு ஆகாது என்று சீனா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. சீனா வர்த்தகப்போரை விரும்பவில்லை. அதே நேரத்தில் சீனா வர்த்தகப்போருக்கு அஞ்சவும் இல்லை. யாரேனும் எங்கள்மீது வர்த்தகப்போரை தொடுத்தால் நாங்கள் இறுதிவரை போராடுவோம். வெளியில் இருந்து வருகிற எந்தவொரு நிர்ப்பந்தத்துக்கும் நாங்கள் அடிபணிய மாட்டோம். எங்கள் சட்டப்பூர்வமான உரிமைகளை, நலன்களை பாதுகாப்பதற்கான தீர்வும் தகுதித்திறனும் எங்களுக்கு உள்ளது” என குறிப்பிட்டார்.

மேலும் இதில் சீனாவின் உறுதியான நிலைப்பாட்டை டிரம்ப் தவறாக மதிப்பிட்டு விட வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். 
Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 16-05-2019, 10:20 AM



Users browsing this thread: 45 Guest(s)