16-05-2019, 04:31 AM
(This post was last modified: 02-08-2025, 10:14 AM by Navki. Edited 2 times in total. Edited 2 times in total.)
டிக்கெட் வாங்கப் போன ஸ்ரீதர் தன்னை மறந்து அவளை ரசித்து நின்றான். இயல்பாக அவளும் திரும்பி அவனை ஒரு பார்வை பார்த்தாள்.
அவளது பிரச்சினை புரிந்தது.
அவள் பார்த்த அந்த ஒரு பார்வை மின்னலாக வந்து அவனைத் தாக்கியது.
சில நொடிகளில் அவள் மீண்டும் அவனைப் பார்த்து லேசாக ஒரு புன்னகை காட்டினாள். அவனால் தன் கண்களையே நம்ப முடியவில்லை.
'என்னைப் பார்த்தா அந்த கட்டழகி சிரிக்கிறாள்.?'
ஆமாம். அவள் சிரித்தது அவனைப் பார்த்தத்தான். அவனும் உடனே சிரித்தான்.
"ஹலோ"
"டிக்கெட் எடுக்கறீங்களா?" அவள் கேட்டாள்.
"எஸ். உங்களுக்கும் சேர்த்து எடுக்கனுமா?"
அவளுக்காக டிக்கெட் என்ன அவள் எதைக் கேட்டாலும் தயங்காமல் செய்யலாம்.
"நோ நோ.. என்கிட்ட எக்ஸ்ட்ரா டிக்கெட் இருக்கு.. வேணுமா? என் பிரெண்டு வரேன்னா. டிக்கெட் எடுத்துட்டேன். லாஸ்ட் மினிட்ல அவளால வர முடியல. ஸோ..." என்று பேச்சை முடிக்காமல் நிறுத்தினாள்.
அவளது பிரச்சினை புரிந்தது.