24-12-2018, 09:48 AM
லாஜிக், மேஜிக் எல்லாம் தூக்கி பரணில் போட்டுவிட்டுப் படத்தைப் பார்த்தால், வாய்விட்டு சிரிக்கலாம். இல்லையேல், வாய்விட்டு அழுதாலும் ஆச்சரியமில்லை. கல்யாண வீடு, உருட்டுக்கட்டை, சாக்கு மூட்டை, டாடா சுமோ, ஜில்ஜில் பார், செல்போன் ஆதாரம், மாறுவேடம் என எல்லாமும் ஏற்கெனவே பார்த்துவிட்டதுதான். அடுத்தடுத்து என்ன நடக்கப்போகுமென ஆண்டாண்டு காலமாய் நாம் பார்த்துப் பதியவைத்த திரைக்கதை, அச்சு பிசகாமல் அப்படியே நகர்கிறது. ஆனால், அந்தப் படங்களில் இருக்கும் சுவாரஸ்யமான நீளமான காமெடிகள் இதில் மிஸ்ஸிங். பாட்ஷா, கேப்டன் பிரபாகரனை வைத்து ஆனந்த ராஜுக்கும், மன்சூர் அலிகானுக்கும் பிடித்திருக்கும் ரீவண்ட் காட்சிகள் மட்டும் செம. லேடீஸ் டாய்லெட்டுக்குள் தொடர்ச்சியாக ஆண்கள் நுழைந்துகொண்டே இருப்பதையெல்லாம் இன்னுமா காமெடியா என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
லியோன் ஜேம்ஸின் பின்னணி இசையில் புதுமை என்று ஒன்றுமில்லை. அதேநேரம் குறை என்றும் ஒன்றுமில்லை. பாடல்கள் ஓகே! ஜெ.லெக்ஷமனின் ஒளிப்பதிவிலும் அதேதான். புதுமை என்று ஒன்றுமில்லை, அதேநேரம் குறை என்றும் ஒன்றுமில்லை. ரூபனின் எடிட்டிங் சேஸிங் காட்சிகளில் கவனிக்கவைக்கிறது. மற்றபடி, அதிலும் புதுமை என்று... நீங்களே கம்ப்ளீட் செய்துகொள்ளுங்கள்!
காமெடி மட்டும் கைவிட்டிருந்தால், ஜவ்வாக இருந்திருக்கும் படம். காமெடி போதுமான அளவு கைக்கூடி வந்ததால், ஜிவ்வென்னு இருக்கிறது இந்த, 'சிலுக்குவார்பட்டி சிங்கம்'.