24-12-2018, 09:46 AM
![[Image: Regina-Cassandra-Silukkuvarupatti-Singam..._15123.jpg]](https://image.vikatan.com/cinema/2018/12/23/images/Regina-Cassandra-Silukkuvarupatti-Singam-vishnu-vishal-movie-stills_15123.jpg)
திண்டுக்கல் சிலுக்குவார்பட்டியைச் சேர்ந்தவர், போலீஸ் கான்ஸ்டபிள் சத்தியமூர்த்தி. ஒற்றை ஓடைக் கூட உடைக்க தெம்பில்லாத, சரியான பயந்தாங்கோளி போலீஸ்!. தான் உண்டு தன் பாட்டி உண்டு என இருக்கும் இடம் தெரியாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறார். சென்னையில் காவல் அதிகாரியையே நடுரோட்டில் வைத்துப் போட்டுத்தள்ளும் பிரபல ரௌடி, சைக்கிள் சங்கர். அவனைக் கைது செய்ய ஒட்டுமொத்த காவல்துறையும் தேடி அலைகிறது. டோனி, நிலக்கோட்டை நாராயணன், பாஸ்கி, ராஜீ, ஷேர் ஆட்டோ சந்திரன், கனகா என எண்ணற்ற பாத்திரங்களை இடைப்புள்ளியாய் வைத்து, சத்தி - சங்கர் இருவரையும் காலமென்பது கோலம் போட்டுக் கோர்த்துவிடுகிறது. பின், நடப்பதெல்லாம் கலர்ஃபுல் காமெடி களேபரம்! ரேஸிங், சேஸிங், மாறுவேடம், உருட்டுக்கட்டை, சாக்கு மூட்டை என சுந்தர்.சி, எழில் பாணியில் கிச்சு கிச்சு மூட்டுகிறது, திரைக்கதை.