screw driver ஸ்டோரீஸ்
அன்புள்ள ராட்சசி - 1

[Image: AR+POSTER.jpg]



'அன்புள்ள ராட்சசி' - நான் அடுத்து எழுத நெனைச்சிருக்குற கதை..!! ரொம்ப சிம்பிளான கதைதான்.. என்னோட எழுத்து மூலமா சுவாரசியமாக்க முடியும்ன்ற நம்பிக்கைல.. கைல எடுத்திருக்குறேன்..!! கதை தலைப்புலேயே ஓரளவு க்ளூ கொடுத்திருக்கேன்.. ஆரம்பத்துல சில ஜாலியான விஷயங்களும், போக போக சில காதல் உணர்வுகளையும் கதைல கலக்க நெனச்சிருக்கேன்..!! என்னோட எல்லா முயற்சிக்கும், அன்போட ஆதரவளிக்கும் நண்பர்கள்.. இந்தக்கதைக்கும் என்னோட துணை இருப்பாங்கன்னு நம்பி.. இந்த முயற்சில இறங்குறேன்..!! நன்றி..!! – ஸ்க்ரூட்ரைவர்



அத்தியாயம் 1

"உ..உங்க பேரே மறந்து போச்சு..!!" பிரமிட் நடராஜன் சாயலில் இருந்த பரந்தாமன் நெற்றியை தடவியவாறே சொன்னார்.

"அ..அசோக்..!!" அவருக்கு பதிலளித்த அசோக் அல்லு அர்ஜுன் சாயலில் இருந்தான்.

"ஆங்.. கரெக்ட் கரெக்ட்.. அசோக்..!! இப்போ ஞாபகம் வந்துடுச்சு..!! ஹாஹா.. வயசாயிடுச்சுல..??"

"ம்ம்..!! அதனால என்ன ஸார்..?? பரவால..!!"

"வந்து ரொம்ப நேரம் ஆச்சோ..??"

"இல்ல ஸார்.. ஒரு பத்து நிமிஷம் இருக்கும்.. அவ்வளவுதான்..!!"

"ம்ம்.. காஃபி, டீ ஏதும் சாப்பிடுறீங்களா..??" அவர் சம்பிரதாயமாக கேட்க,

"இ..இல்ல ஸார்.. பரவால..!!" அசோக் புன்னகையுடன் தவிர்த்தான்.

"வெயில்ல அலைஞ்சு வந்திருப்பீங்க போல.. கொஞ்சம் தண்ணியாவது குடிங்க..!!" அவர் கண்ணாடி தம்ளரில் இருந்த தண்ணீரை அசோக்கின் பக்கமாக நகர்த்தினார்.

"பரவால ஸார்.. இருக்கட்டும்..!!" அசோக் அதை தொட்டுக்கூட பார்க்காமல் சொன்னான்.

"ஹ்ம்ம்.. சொல்லுங்க தம்பி.. கிஷோர் தம்பி உங்களை பத்தி ஆஹா ஓஹோன்னு சொன்னாரு.. நானும் 'சரி அனுப்பி வைங்க.. பேசிப்பாக்குறேன்..'னு சொல்லிருந்தேன்..!!" அவருடைய பேச்சில் ஒரு அலட்சியம் தெரிந்தது. இருந்தாலும்,

"ரொம்ப தேங்க்ஸ் ஸார்.. எனக்காக உங்களோட டைம் ஒதுக்கித் தந்ததுக்கு..!!" அசோக் நிஜமான நன்றியுணர்வுடன் சொன்னான்.

"பரவால தம்பி..!! மொதல்ல.. உங்களை பத்தி கொஞ்சம் சொல்லுங்க..!!"


அவர் கேட்க, அசோக் இப்போது தனது கையிலிருந்த ஃபைலை டேபிள் மீது வைத்தான். சர்ர்ர்ரென ஜிப்பை இழுத்து ஃபைலை திறந்தான். உள்ளே இருந்த அந்த டிவிடி கேஸை வெளியே எடுத்தான். எதிரே இருந்தவரின் முன்பாக வைத்து, அதை அவர் பக்கமாய் நகர்த்தினான். பரந்தாமன் இப்போது சற்றே குழம்பிப்போனவராய், அந்த டிவிடி கேஸ் மீதிருந்து பார்வையை விலக்காமலே கேட்டார்.

"என்ன தம்பி இது..??"

"என் ரெஸ்யூமே ஸார்..!! நான் எடுத்த ஆட் ஃபில்ம்ஸ்.. ஷார்ட் ஃபில்ம்ஸ்.. டாகுமன்ட்ரிஸ்.. எல்லாம் இதுல காப்பி பண்ணிருக்கேன்..!! இதை பாத்தீங்கன்னா என்னைப் பத்தி உங்களுக்கு ஒரு ஐடியா கெடைக்கும்..!!"

"ஹாஹா.. எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி.. நீங்களே கொஞ்சம் உங்களை பத்தி சொல்லிடுங்க..!! என்ன பண்ணுனீங்க.. என்ன பண்ணிட்டு இருக்குறீங்க.. எப்படி போயிட்டு இருக்கு..??"

பரந்தாமன் அப்படி கேட்பார் என்று அசோக் எதிர்பார்க்கவில்லை. சற்றே தடுமாறினான். அவருக்கு பக்கவாட்டில் இருந்த கம்ப்யூட்டரை அமைதியாக ஒருமுறை பார்த்தான். 'நேரம் இல்லையா..?? அப்புறம் எதற்கு இதெல்லாம் இங்கு இருக்கிறது..??' என்பது போல இருந்தது அவனது பார்வை. பரந்தாமன் ஒரு கையை, அமர்ந்திருந்த சேரின் கைப்பிடியில் ஊன்றி இருந்தார். புறங்கையை இன்னொரு கையால் தடவிக்கொண்டே, ஒருபக்கமாய் தலையை சாய்த்து வைத்துக்கொண்டு, திறந்த வாயும் இடைவெளி விழுந்த பற்களுமாய் இவனையே பார்த்துக் கொண்டிருந்தார். அசோக் இப்போது மெல்ல ஆரம்பித்தான். தன்னைப் பற்றி கூறினான்.

"எ..என்னை பத்தி சொல்றதுக்கு பெருசா எதுவும் இல்ல ஸார்..!! பொறந்தது வளந்தது படிச்சதுலாம் சென்னைதான்..!! லயலால விஷுவல் கம்யூனிகேஷன் முடிச்சேன்.. காலேஜ்ல படிக்கிறப்போவே ஆட் ஃபில்ம் இண்டஸ்ட்ரி மேல ரொம்ப இன்ட்ரஸ்ட்..!! டிக்ரீ முடிச்சதும்.. சென்னை ஃபில்ம் ஸ்கூல்ல, சிக்ஸ் மன்த்ஸ் கோர்ஸ் அண்ட் ட்ரெயினிங் எடுத்துக்கிட்டேன்.. ஆட் ஃபில்ம் மேகிங் பத்தி..!! அப்புறம்.. நானும், என் கூட படிச்ச பிரண்ட்ஸ் கொஞ்ச பேரும் சேர்ந்து ஒரு அட்வர்டைசிங் கம்பனி ஆரம்பிச்சு, இப்போ நடத்திட்டு இருக்குறோம்.. கிஷோர் கூட அதுல ஒன் ஆஃப் தி பார்ட்னர்ஸ்..!!"

"ம்ம்ம்.. சொன்னாரு சொன்னாரு..!! உங்க ஆபீஸ் எங்க இருக்கு..??"

"வடபழனிதான் ஸார்.. ஆர்காட் டெரஸ்க்கு ஆப்போசிட்..!!"

"ஒ.. அப்போ ரொம்ப பக்கத்துலதான் இல்லையா..??"

" ஆமாம் ஸார்..!!"

"ம்ம்.. எந்த மாதிரி அட்வர்டைஸ்மண்ட்ஸ்லாம் பண்றீங்க..??"

"மெயினா ஆட் ஃபில்ம்ஸ்தான் ஸார்.. மோஸ்ட்லி டிவி கமர்ஷியல்ஸ்..!! இப்போ கொஞ்ச நாளா இன்டர்நெட் அட்வர்டைசிங்லயும் கான்சன்ட்ரெட் பண்ண ஆரம்பிச்சிருக்கோம்..!!"

"எப்படி.. எல்லாம் டைரெக்ட் டீலிங்தானா..??" அவர் கேட்டுவிட்டு அசோக்கையே கூர்மையாக பார்க்க, இப்போது அசோக் சற்றே தடுமாற்றமாய் நெளிந்தான்.

"இ..இல்ல ஸார்.. பாலாஜி அட்வர்டைசிங்கோட டை-அப் வச்சிருக்கோம்.. அவங்கட்ட இருந்து ப்ராஜக்ட் எடுத்து பண்றோம்.. அவங்க ப்ரொடக்ஷனுக்கு அப்பப்போ எங்க டீமை யூஸ் பண்ணிப்பாங்க..!!"

"ஆங்.. அப்படி சொல்லுங்க..!! ம்ம்ம்.. பரவால.. நல்லா புளியங்கொம்பாதான் புடிச்சிருக்கீங்க..!! பிஸினஸ் ஸ்டார்ட் பண்ணி எவ்வளவு நாளாச்சு..??"

"நாலு வருஷம் ஆச்சு ஸார்..!!"

"இப்போ என்ன திடீர்னு பிரச்சனை..??"

"எ..என்ன பிரச்சனைனா..?? பு..புரியல ஸார் ..!!"

"இல்ல.. பிசினஸ்ல ஏதும் ப்ராப்ளமான்னு கேட்டேன்..??"

"ஐயோ.. அதுலாம் ஒன்னும் இல்ல ஸார்..!! பிசினஸ்லாம் நல்லாத்தான் போயிட்டு இருக்கு.. ரொம்ப ஃபாஸ்ட் க்ரோத்னு சொல்ல முடியாட்டாலும்.. ஸ்டெடியா முன்னேறிட்டு இருக்கோம்..!!"

"அப்புறம் ஏன் சினி இண்டஸ்ட்ரிகுள்ள வர ஆசைப்படுறீங்க..??"

"அ..அது.. அது.."

"ம்ம்.. சொல்லுங்க தம்பி..!!"

"இ..இது.. இது எனக்கு ஒரு பேஷன் மாதிரி ஸார்.. இப்போ கொஞ்ச நாளாத்தான்.. ஒரு ஒன் இயராத்தான் இந்தமாதிரி பெரிய ஸ்க்ரீன் மேல எனக்கு ஆசை..!! மூவீஸ் டைரெக்ட் பண்ணனும்னு எனக்குள்ள ஒரு கனவு..!!"

"ஹாஹா.. கனவுதான..?? காண வேண்டியதுதான்..!! இப்போத்தான் ஆளாளுக்கு டைரெக்டர் ஆகணும்னு கனவு வந்துடுதே.. உங்களுக்கும் வந்ததுல ஒன்னும் தப்பு இல்ல.. ஹாஹா..!!"

சொல்லிவிட்டு அவர் சிரித்தார். அவர் சிரிப்பில் இருந்த கிண்டல் அசோக்கை சற்றே எரிச்சலுற செய்தது. ஆனாலும், அவர் புதுமுக இயக்குனர்களை வைத்து இரண்டு ஹிட் படங்கள் கொடுத்திருக்கிற தயாரிப்பாளர் என்ற நினைவு அசோக்கின் மனதை குறுக்கிட, எழுந்த எரிச்சலை மறைத்துக் கொண்டான்.

"தம்பி தப்பா எடுத்துக்க கூடாது.. நான் ஏன் சொல்றேன்னா.. எப்போவுமே இருக்குறதை விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசைப்பட கூடாது..!!" சொல்லிவிட்டு அவர் பல்லிளித்தார்.

"இல்ல ஸார்.. இதை அப்படி சொல்ல முடியாது.. நான் ஒன்னும் தகுதி இல்லாம ஆசைப்படல.. பெரிய ஸ்க்ரீன்ல கண்டிப்பா ஜெயிக்கமுடியும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு..!! உண்மையை சொல்லப்போனா.. ஒன் இயர் முன்னாடி வரை எனக்கு சினி இண்டஸ்ட்ரி மேல எந்த ஈடுபாடும் இல்லாமத்தான் இருந்தது..!!"

"ஓ.. அப்புறம் எப்படி திடீர்னு..??"

"ஆக்சுவலா.. ஒன் இயர் முன்னாடி.. எங்க க்ளையன்ட் ஒருத்தருக்காக நான் ஒரு கான்சப்ட் சொன்னேன்.. அதை அவங்க ரிஜக்ட் பண்ணிட்டாங்க.. இருந்தாலும் எனக்கு அந்த கான்சப்ட் பிடிச்சிருந்ததால.. ஒரு செல்ஃப் இன்ட்ரஸ்ட்ல, அந்த கான்சப்டை ஷார்ட் ஃபில்மா ஷூட் பண்ணிணேன்.. யூட்யூப்ல அப்லோட் பண்ணினேன்.. நெறைய பேர் நல்லாருக்குன்னு சொன்னாங்க.. அதுல இருந்துதான் எனக்கு மூவிஸ் மேல இன்ட்ரஸ்ட் வர ஆரம்பிச்சது..!! அதுக்கப்புறம் நானே நெறைய கான்சப்ட்ஸ் யோசிக்க ஆரம்பிச்சேன்.. அப்பப்போ அதை ஷார்ட் ஃபில்ம்ஸா எடுத்து யூட்யூப்ல அப்லோட் பண்ணுவேன்.. எல்லாத்துக்குமே செம ரெஸ்பான்ஸ்..!! இதுவரை அஞ்சு ஷார்ட் ஃபில்ம்ஸ் எடுத்திருக்குறேன்.. அந்த ஷார்ட் ஃபில்ம்ஸ்லாம் பாத்தீங்கன்னா, என்னோட கனவுல ஒரு நியாயம் இருக்குன்னு உங்களுக்கே புரியும்..!! ப்ளீஸ் ஸார்.. ஒரு அஞ்சு நிமிஷம்.. அந்த டிவிடி கொஞ்சம் பாருங்களேன்..!!" அசோக்கின் குரலில் மெலிதான கெஞ்சல் ஒளிந்திருந்தது.

"ஹாஹா.. இதைப்பாத்து நான் என்ன தம்பி பண்ணப் போறேன்..?? என்னை பொறுத்தவரை ஷார்ட் ஃபில்ம்ஸ் வேற.. சினிமா வேற..!! எனக்கு இந்த பாஸ்ட் எக்ஸ்பீரியன்ஸ், ராசியான ஆர்டிஸ்ட், இமேஜ், பொடலங்கா, கத்தரிக்கா.. இதுலலாம் நம்பிக்கை இல்ல தம்பி..!! நான் அறிமுகப்படுத்தின ரெண்டு டைரக்டரும் புதுப்பசங்கதான்.. உங்கள மாதிரி சினிமால எந்த அனுபவும் இல்லாதவங்கதான்..!!"

"ம்ம்.. தெரியும் ஸார்.. அதான் நானும் ஒரு நம்பிக்கையோட வந்திருக்கேன்..!!"

"எனக்கு சப்ஜக்ட்தான் தம்பி முக்கியம்.. எந்த மாதிரி ஸ்டோரி வச்சிருக்கீங்க, எந்த மாதிரி புதுபுது ஐடியாஸ் வச்சிருக்கீங்க.. அதுதான் எனக்கு முக்கியம்..!! டெக்னாலாஜி பத்தி நீங்க ஒன்னும் வொர்ரி பண்ணிக்க தேவை இல்ல.. அதுக்கெல்லாம் ஆள் வச்சுக்கலாம்..!! சப்ஜக்ட் பத்தி சொல்லுங்க தம்பி.. நீங்க சொல்ற ஸ்டோரி எனக்கு பிடிச்சிருந்தா.. கண்டிப்பா உங்களை வச்சு படம் எடுக்குறேன்..!!"

பரந்தாமன் அப்படி சொன்னதும், கொஞ்ச நேரமாக தளர்ந்து போயிருந்த அசோக் இப்போது மீண்டும் உற்சாகமானான். முதுகில் யாரோ குத்தியது மாதிரி நிமிர்ந்து அமர்ந்தான். லேசாக தொண்டையை செருமிக்கொண்டு, கொஞ்சமாய் எச்சில் கூட்டி விழுங்கிக்கொண்டு, மெல்ல ஆரம்பித்தான்.
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 15-05-2019, 11:42 AM



Users browsing this thread: 7 Guest(s)