Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
பெண்ணின் கருப்பையிலிருந்து அகற்றப்பட்ட பைக் கைப்பிடியின் உடைந்த பகுதி: கணவர் கைது
[Image: 63734.jpg]
பெண்ணின் கருப்பையில் இருந்து பைக் கைப்பிடியின் 6 இஞ்ச் அளவிலான உடைந்த பிளாஸ்டிக் துண்டை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். இது தொடர்பாக பெண்ணின் கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
போலீசார் வெளியிட்ட தகவலின்படி மத்தியப்பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தைச் சேர்ந்த பெண், 15 வருடங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டுள்ளார். தற்போது அவருக்கு 6 குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக கணவரால் சித்ரவதைக்கு ஆளாகி வந்துள்ளார். இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த வாக்குவாதத்தில் பெண்ணை, கணவர் தாக்கியுள்ளார். கோபத்தின் உச்சத்தில் பெண்ணின் பிறப்புறுப்பில் பைக்கின் உடைந்த கைப்பிடியை சொருகி சித்ரவதை செய்துள்ளார். ஆனால் இந்த கொடுமை குறித்து அப்பெண் யாரிடமும் எதுவும் தெரிவிக்கவில்லை. 

[Image: 082321_we.JPG]
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பெண் வயிற்றுவலியால் பாதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையை அணுகிய போது அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்றும், ரூ.1 லட்சம் வரை செலவாகும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கையில் போதுமான பணமில்லாததால் திரும்பி வந்த அப்பெண் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 
பெண்ணின் புகாரைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பெண்ணின் புகாரின் அடிப்படையில் அவரது கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
[Image: 081422_pinobv7tbbg72bpth4ku.jpg]
நான்கு மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சையில் பெண்ணின் கருப்பையில் இருந்து  பைக் கைப்பிடியின் 6 இஞ்ச் அளவிலான  உடைந்த பகுதியை மருத்துவர்கள் அகற்றியுள்ளதாகவும், தற்போது அவர் நலமாக இருப்பதாகவும், பெண்ணின் கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்
Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 15-05-2019, 10:35 AM



Users browsing this thread: 103 Guest(s)