Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
நன்றியை மறந்த தயாரிப்பாளர்கள்: சிவகார்த்திகேயன் வேதனை
[Image: mr-local-press-meet-23jpgjpg]

சில தயாரிப்பாளர்கள் நன்றியை மறந்துவிட்டதாக, 'Mr.லோக்கல்' பத்திரிகையாளர் சந்திப்பில் சிவகார்த்திகேயன் வேதனையுடன் குறிப்பிட்டார்.
ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ராதிகா, ரோபோ ஷங்கர், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'Mr.லோக்கல்'. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் மே 17-ம் தேதி வெளியாகவுள்ளது. இதற்காக பத்திரிகையாளர்களைச் சந்தித்தது படக்குழு.
இதில் சிவகார்த்திகேயன், இயக்குநர் ராஜேஷ், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, ஹிப் ஹாப் ஆதி, ரோபோ ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இதில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசும் போது, “இந்த தருணத்தில் ஒரு முக்கியமான நன்றியை சிவகார்த்திகேயன் ப்ரதருக்கு சொல்ல வேண்டும். 14 ஆண்டுகளாக தயாரிப்பாளராக இருக்கிறேன்.
வாழ்க்கையில் ஒரு முக்கியமான காலகட்டத்தில் எனக்கு சிவகார்த்திகேயன் ப்ரதர் பண்ணிக் கொடுத்திருக்கார். அதற்கு ரொம்ப ரொம்ப நன்றி. இதனை நேரிலும் சொல்லியிருக்கிறேன். அனைவருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக இங்கு சொல்கிறேன். என் வாழ்க்கை முழுக்க நினைத்துப் பார்க்கக்கூடிய நன்றியாக இந்தப் படம் இருக்கும். என்னுடைய பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு, எனக்கு அவர் சிரமம் கொடுக்கவே இல்லை” என்று குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக சிவகார்த்திகேயன் தனது பேச்சில், “நீங்கள் எவ்வளவு பெரிய தயாரிப்பாளர் என்பது தெரியும். ரொம்ப முக்கியமான காலகட்டத்தில் இந்தப் படத்தை பண்ணிக் கொடுத்ததாக நன்றியும் சொன்னீர்கள். நிறைய தயாரிப்பாளர்கள் நன்றியை நினைக்காமல், அதைப் பற்றிப் பேசாமல் அப்படியே போய்விட்டார்கள். எதெல்லாம் வெளியே பேசப்பட வேண்டுமோ, அதெல்லாம் பேசப்படுவதே இல்லை” என்று பேசினார்
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 14-05-2019, 07:20 PM



Users browsing this thread: 5 Guest(s)