Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
ஹேக்கிங்கை தடுக்க வாட்ஸ்அப்பை அப்டேட் செய்வது எப்படி?
வாட்ஸ்அப் செயலியை இந்தியாவில் 200 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.


[Image: whatsapp-2.jpg]வாட்ஸ் ஆப்


Updated: May 14, 2019, 5:07 PM IST
வாட்ஸ்ஆப் செயலியில் கடந்த சில வாரங்களாக ஸ்பைவேர் தாக்குதல் ஒன்று நடைபெற்று வந்துள்ளது. அதை தொடக்கத்திலேயே கண்டறிந்த வாட்ஸ்அப் நிறுவனம் அதற்கான தீர்வையும் உடனே வெளியிட்டுள்ளது.

வாட்ஸ்அப் செயலியை இந்தியாவில் 200 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலியில் கடந்த சில வாரங்களாக மிஸ்டு கால் மூலம் மொபைல் ஃபோன்களை தாக்கக் கூடிய ஸ்பைவேர் வைரஸ் தாக்குதல் ஒன்று நடந்து வந்துள்ளது.


இந்த தாக்குதல் குறித்து உடனே கண்டறிந்த வாட்ஸ்அப் நிறுவனம் ஸ்பைவேர் வைரஸ் தாக்குதலில் மாட்டிக்கொள்ளாமல் மொபைல் போன்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள புதிய அப்டேட் ஒன்றை மே 10-ம் தேதி வெளியிட்டுள்ளது.

இந்த வாட்ஸ்ஆப் அப்டேட்டை மொபைல் போனில் நிறுவும் போது ஸ்பைவேர் வைரஸ் தாக்குதலிலிருந்து தப்பிக்கலாம் என்றும் வாட்ஸ்ஆப் தெரிவித்துள்ளது.

அதற்கு வாட்ஸ்அப் பயன்படுத்தும் அனைவரும் தங்களது ஸ்மாட்ஃபோனில் உள்ள கூகுள் பிளே ஸ்டோரில் > My apps & games தெரிவுக்குச் சென்று இன்ஸ்டால் செய்த செயலிகளில் வாட்ஸ்ஆப் செயலியைத் தேர்வு செய்ய வேண்டும். பின்னர் அப்டேட் என்பதை கிளிக் செய்து வாட்ஸ்ஆப் செயலியைப் புதுப்பிக்க வேண்டும்.

இதை செய்தால் உங்கள் வாட்ஸ்அப் செயலியை மிஸ்டு கால் மூலமாகத் தாக்கும் ஸ்பைவேர் வைரசிலிருந்து தற்காத்துக்கொள்ளலாம்.

வாட்ஸ்ஆப் செயலியை ஸ்பைவேர் வைரஸ் தாக்கியது குறித்து அறிக்கை வெளியிட்டு இருந்தாலும் அதனால் என்ன மாதிரியான பாதிப்புகள் எல்லாம் ஏற்படும், எவ்வளவு நபர்கள் அதில் பாதிப்படைந்துள்ளனர் என்பது பற்றி தெரிவிக்கவில்லை 


ஆனால் வாட்ஸ்ஆப் செயலி மீது இஸ்ரேலை சேர்ந்த என்எஸ்ஓ என்ற சைபர் உளவுத்துறை நிறுவனம் தான் இந்த ஸ்பைவேர் தாக்குதலை நடத்தியது சென்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 14-05-2019, 06:34 PM



Users browsing this thread: 38 Guest(s)