25-12-2021, 03:03 PM
(This post was last modified: 25-12-2021, 03:04 PM by Parkshin. Edited 1 time in total. Edited 1 time in total.)
(23-12-2021, 02:12 PM)Dubai Seenu Wrote: நண்பா உங்கள் எண்ணங்களை பதிவிட்டதற்கு நன்றிகள்.
முன்பொருமுறை rojaraja மற்றும் me.you சொன்னதுபோல்... கதை பற்றிய சிந்தனை என் மனதில் ஓடிக்கொண்டேதான் இருக்கும். நிஷா பொல்லாதவள், என்னை ஆட்டிப்படைத்துவிட்டாள். So மன உளைச்சல் எப்போதும் இருந்திருக்கிறது. காரணம் இக்கதையை பற்றி நான் யாரிடமும் டிஸ்கஸ் செய்ய முடியாது. எல்லாம் மனதுக்குள்ளே ஓடிக்கொண்டிருக்கும்.
இதனால் என் குடும்ப வாழ்க்கையில், என் வேலையில் நான் கவனம் செலுத்த இயலாமல் போனது முற்றிலும் உண்மை. இதை நினைத்து நான் என்றும் வருந்துவேன்.
பல நேரங்களில் கதை மூளையில் ஓடுவதை தவிர்க்க முயல்வேன். முடியாது. எந்த காட்சி முதலில் வரவேண்டும். எந்த காட்சி எங்கே வந்தால் சுவாரஸ்யம் குறையாமல் இருக்கும், சூழ்நிலையை எப்படி உருவாக்கினால் கிக்காக இருக்கும்... என்று எண்ணங்கள் தாறுமாறாக ஓடிக்கொண்டேயிருக்கும்.
முக்கியமாக அலுவலகத்தில் வேலை செய்ய முடியாமல் பல முறை தடுமாறியிருக்கிறேன். கதை என் மனதில் ஓடுவதை கட்டுப்படுத்தவே முடியவில்லை. இதனால் பலமுறை வருந்தியிருக்கிறேன்.
கூடவே திருட்டுத்தனமாக எழுதும்போது வரும் குற்ற உணர்வு.... வேதனையானது.
எழுதித் தீர்த்தபிறகுதான் இப்போது ஓரளவு பரவாயில்லை. நிம்மதியாக உணர்கிறேன்.
இனி இப்படியொரு மாய வலையில் விழுந்துவிட கூடாது என்று நினைக்கிறேன்.