25-12-2021, 09:48 PM
கரும்பு அடிக்க ஆட்கள் கிடைக்க கம்படிக்க ஆரம்பித்தேன்.கலியன் இரண்டு ஆம்பள மூனூ பொம்மபள ஆள் கொண்டு மோட்டார் ரூமில் தங்கி கரும்பு வெட்ட ஆரம்பிக்க பொம்பள இரண்டு பேருக்கு நாற்பது முப்பந்தி ஐந்து வயது இருக்கும்.ஒருத்திக்கு இருப்பத்தி ஐந்து வயது இருக்கும்.எல்லோரும் பெரம்பலூர் பக்கம்.இங்கேயே தங்கி சமைச்சி சாப்பிட்டு வேலை செய்பவர்கள்.இரண்டு குடும்பம் அதில் ஒரு குடும்பம் பல வருடமாக எங்களுக்கு வேலைக்கு வர குடும்பம்.இன்னொரு குடும்பம் புதிதாக இந்த வருடம்தான் வேலைக்கு வருகிறது.பழய குடும்பத்து ஆம்பள பெயர் மருதமுத்து அவர் மனைவி பெயர் காவேரி.அவங்க எங்க அப்பாவிடம் அட்வான்ஸ் பணம் வாங்கி இருக்கிறார்கள்.இரண்டு முறை ஏற்கனவே பார்த்து இருக்கேன்.கோழி காவுக்குடுத்து சாமிக்கு படையல் வைத்து கரும்பு அடிக்க ஆரம்பித்தோம்.திருச்சி போய் சக்கரை கட்ட மூன்று கட்டு சாக்கு வாங்கி ரெகுலர் சர்வீஸ் லாரியில் போட்டு விட்டு தஞ்சாவூர் வந்து ஊர் வருவதற்க்கு இரவு ஆகி விடும் என்று கமலா அத்தை வீட்டில் இரவு தங்கி காலையில் போகலாம் என்று இரவு பத்து மணி வாக்கில் கமலா அத்தை வீட்டு கதவை தட்ட அவர்கள் இந்த நேரத்தில் யாரென்று கதவை திறந்து என்னை பார்த்து ஆச்சர்ய பட்டு பிறகு சந்தோசபட்டு வாங்க மாப்பிள வாங்க வாங்கண்ணு வீட்டுள்ள அழச்சிக்கிட்டு போயி சேர்ர எடுத்து போட்டு இந்த நேரத்துல எங்கங்க. நான் திருச்சி போன தகவலை சொல்லி இரவு உங்க வீட்டுல தங்கி போகலாம்ணு வந்தேங்க.அவங்க முகத்துல அவ்வளவு சந்தோசம்.அய்யோ இந்த அத்தைத்த நினைச்சு வந்துருக்கிங்களே உங்களுக்கு என்னா இந்த நேரத்துல செய்யறதுண்ணு.மாவு இருக்கு தோச ஊத்தட்டுமாங்க.சரிங்க அத்தண்ணு. நான் வாங்கிக்கிட்டு போன ஆப் பாட்டில் பிராந்திய எடுத்து கீழ வைச்சு டம்ளர் ஒண்ணு கொண்டாங்க அத்தண்ணு சொல்ல. அவுங்க தண்ணீ ஊறுகாய் எல்லாம் கொண்டு வந்து வைத்து ஒரு ஸ்டூல் எடுத்து வந்து போட்டு.சாப்பிடுங்க மாப்பிள நான் தோச ஊத்திட்டு வந்துடுறேன்னு போய் ஐந்து ஆறு தோசையும் மிளகாய் சட்டுணியும் அறைச்சு எடுத்து வந்தார்கள்.