Thread Rating:
  • 2 Vote(s) - 3.5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஸ்மார்ட்போன்கள்...
#8
[Image: Capturei_23587.JPG]

அதற்கடுத்ததாக முன்புற கேமரா, Realme 2 Pro-வில் இருப்பது 16 MP கேமராதான். ஆனால் இதில் 25 MP முன்புற கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இது சிறப்பான தரத்தில் செல்ஃபி எடுக்க ஏற்றதாகவே இருக்கும். ஆனால் அதே நேரத்தில் பின்புற கேமராவில் செய்யப்பட்டுள்ள மாற்றத்தையும் கவனிக்க வேண்டும். Realme 2 Pro-வில் இருந்த 16 MP+ 2 MP கேமராவிற்கும் இந்த ஸ்மார்ட்போனில் இருக்கும் 13+2 MP கேமராவுக்கும் நிறைய மாற்றங்கள் உள்ளன. முந்தையதில் இருந்த மெயின் கேமராவில் PDAF (Phase Detection Auto Focus) வசதி இருந்தது, ஆனால் இதில் வெறும் AF (Auto Focus ) மட்டும்தான். மேலும் அபெர்ச்சரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. 3500 mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. 3 GB ரேம் + 32 GB இன்டெர்னல் மெமரி வேரியன்ட் 11,999 ரூபாய்க்கும், 4 GBரேம்+64 GB இன்டெர்னல் மெமரி வேரியன்ட் 14,499 ரூபாய்க்கும் விற்பனைக்கு வருகிறது. நீலம், கோல்டு மற்றும் கறுப்பு என மூன்று நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும். 14,499 ரூபாய் என்பது கிட்டத்தட்ட Realme 2 Pro-வின் விலையை நெருங்கி விடுகிறது. எனவே இதை வாங்க முடிவு செய்திருப்பவர்களுக்கு Realme 2 Pro-வா அல்லது Realme U1-னா என்ற குழப்பம் வரக்கூடும். Realme 2 Pro-வில் பயன்படுத்தப்பட்டுள்ள Snapdragon 660-ஐ விட Helio P70 சற்று திறன் கூடிய புராஸசர்தான். முன்புற கேமராவின் திறன் கூட அதிகம்தான். ஆனால் விலை மற்றும் பின்புற கேமரா போன்ற விஷயங்களை வைத்துப் பார்த்தால் Realme 2 Pro-வே சிறந்த தேர்வாக இருக்கும். முன்னர் சொன்னதைப் போலவே செல்ஃபிக்கு மட்டும் என்றால் ரியல்மீ U1-னை வாங்கலாம்.
Like Reply


Messages In This Thread
RE: ஸ்மார்ட்போன்கள்... - by johnypowas - 23-12-2018, 09:58 AM



Users browsing this thread: