23-12-2018, 09:57 AM
பட்ஜெட் முதல் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் வரை இதன் பயன்பாடு அதிகம்தான். ரியல்மீ நிறுவனம் இதற்கு முன்பு வெளியிட்ட மூன்று ஸ்மார்ட்போன்களில் இரண்டில் இருப்பது ஸ்னாப்டிராகன் புராஸசர்கள்தான். குவால்காமுக்கு அடுத்தபடியாக இருப்பது மீடியாடெக் நிறுவனம். இந்த நிறுவனத்தின் புராஸசர்களை சில நிறுவனங்கள் மட்டுமே பயன்படுத்துகின்றன. இந்நிலையில் ரியல்மீ U1 ஸ்மார்ட்போனில் மீடியாடெக்கின் Helio P70 புராஸசரை இதில் பயன்படுத்தியிருக்கிறது ரியல்மீ. இந்த புராஸசர் முதன்முதலாக இந்த ஸ்மார்ட்போனில்தான் அறிமுகப்படுத்தப்படுகிறது.