23-12-2018, 09:55 AM
'2.0' ரியல்மீ ப்ரோ & '3.0' ரியல்மீ U1... இரண்டில் எதை வாங்கலாம்?
Realme 2 Pro ஸ்மார்ட்போனைப் போலவேவடிவமைக்கப்பட்டிருக்கிறது ரியல்மீ U1. இரண்டிற்கும் பெரிய அளவில் எந்த வித்தியாசங்களும் இல்லை
ஆறு மாதங்களுக்கு முன்னால்தான் முதன்முதலாக இந்திய சந்தையில் கால் பதித்தது ரியல்மீ நிறுவனம். அதற்குள்ளாக நான்கு ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி விட்டது. மிகக் குறுகிய காலத்திற்குள் பெரிய அளவில் வளர்ச்சியடைந்திருக்கிறது. சந்தையில் இருக்கும் தேவை அறிந்து அதற்கேற்ப ஸ்மார்ட்போன்களை வெளியிடுவதுதான் அதற்குக் காரணம். ஷியோமியைப் போலவே ஒரு திட்டத்தோடுதான் செயல்படுகிறது ரியல்மீ. இருபதாயிரம் ரூபாய்க்குக் குறைவான ஸ்மார்ட்போன்களை மட்டுமே இதுவரை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இரண்டு நாள்களுக்கு முன்னால் ரியல்மீ U1 என்ற ஸ்மார்ட்போனை புதிதாகச் சந்தைக்கு கொண்டு வந்திருக்கிறது. இன்றைக்கு மொபைலில் செல்ஃபி எடுப்பதையே பலரும் விரும்புகிறார்கள். அதனால் இப்பொழுது வெளியாகும் பெரும்பாலான மொபைல்கள் அதற்கேற்றவாறே வடிவமைக்கப்படுகின்றன. ரியல்மீ U1 ஸ்மார்ட்போனிலும் முன்புற கேமராவிற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.