10-05-2019, 12:33 PM
`சும்மா ஒரு விளம்பரம்!' - மோடி அரசு விளம்பரங்களுக்கு எவ்வளவு பணம் செலவிட்டது? #VikatanInfographics
தன் தாயைச் சந்திக்கச் சென்றாலும், பிரதமர் மோடி கேமராவை மறந்து செல்வதில்லை' என்று மோடி மீது தொடர்ந்து விமர்சனங்கள் வைக்கப்பட்டு வரும் சூழலில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மோடி அரசின் விளம்பரச் செலவுகளை விமர்சித்து வருகின்றனர்.
முந்தைய மன்மோகன் சிங், இப்போதைய மோடி இருவரில் யார் ஆட்சியில் அதிக விளம்பரங்கள் கொடுக்கப்பட்டன என்பது பற்றிய ஒரு தொகுப்பு...
தங்கள் ஆட்சியில் உருவாக்கப்பட்ட திட்டங்களை மக்களிடையே விளம்பரம் செய்வது மத்திய, மாநில அரசுகளின் வழக்கம். அரசு வகுத்த திட்டங்களை மக்களிடையே கொண்டு சேர்க்கும் விதமாக, தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை உள்ளிட்ட அரசுத் துறைகள் இயங்குகின்றன.
அரசுத் திட்டங்கள் பற்றிய அறிமுகம், மக்களிடையே விழிப்புணர்வு முதலானவற்றைத் தாண்டி, தற்போது ஆட்சியாளர்களையும், ஆளுங்கட்சிகளையும் விளம்பரப்படுத்துவதற்காக இந்தத் துறைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வோர் ஆண்டும் அரசு விளம்பரங்களுக்குச் செலவு செய்யப்படும் தொகை இதை உறுதி செய்கிறது.
கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவை ஆட்சி செய்த காங்கிரஸ், பி.ஜே.பி ஆகிய இரண்டு கட்சிகளும் விளம்பரங்களுக்காக மட்டும் ஏறத்தாழ 8,700 கோடி ரூபாய் செலவு செய்துள்ளன. 2009 முதல் 2014 வரை, மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு 3,480 கோடி ரூபாய் விளம்பரங்களுக்கென செலவு செய்துள்ளது. தற்போது பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் ஏறத்தாழ 5,200 கோடி ரூபாய் விளம்பரங்களுக்காகச் செலவிடப்பட்டுள்ளது. இது முந்தைய மன்மோகன் சிங் ஆட்சியில் செய்த செலவைவிட ஏறத்தாழ 51 சதவிகிதம் அதிகமான தொகையாகும்.
மத்திய அரசின் கீழ் இயங்கும் துறைகள் வெளியிடும் விளம்பரங்களை மக்களிடையே பிரபலப்படுத்துவதற்கென மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறையின் விளம்பரத்துறை செயல்படுகிறது. இதன்மூலம், பத்திரிகைகள், பிரசுரங்கள், தொலைக்காட்சி, திரையரங்கங்கள், இணையம், திறந்தவெளி முதலானவை விளம்பரங்கள் செய்வதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
தற்போதைய மோடி ஆட்சியில், அதிகபட்சமாக எலக்ட்ரானிக் ஊடகங்களில் வெளியாகும் விளம்பரங்களுக்காக 2,313 கோடி ரூபாயும், குறைந்தபட்ச செலவாக திறந்தவெளி விளம்பரங்களுக்காக 652 கோடி ரூபாயும் செலவிடப்பட்டுள்ளன. அச்சு ஊடகங்களில் வெளியான விளம்பரங்களுக்குச் செலவிடப்பட்ட தொகை 2,281 கோடி ரூபாய்.
[/font][/color]
பிரதமர் நரேந்திர மோடி படத்துடனும், `வளர்ச்சி' என்ற பெயரில் பெருமிதத்துடனும் வெளியிடப்பட்ட அரசு விளம்பரங்கள் பெரும்பாலும் தேர்தல்களை முன்னிறுத்தியே உருவாக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு விளம்பரங்களுக்குச் செலவு செய்த தொகையில் சுமார் ஐந்து கோடி குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கியிருக்க முடியும். நான்கு ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்களைக் கட்டியிருக்க முடியும். ஐந்து நகரங்களில் சிறப்பான மருத்துவ வசதி கொண்ட எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டியிருக்க முடியும். மங்கல்யான், சந்திராயன் போன்ற விண்வெளித் திட்டங்களை நிறைவேற்றியிருக்க முடியும். பேரிடர்களால் பாதிக்கப்பட்டு, நிவாரணத்தொகை கோரிய பல மாநிலங்களுக்கு உதவிக்கரம் நீட்டியிருக்க முடியும்.
TOP COMMENT
Sathish Somasundaram
திட்டங்களின் எண்ணிக்கை...விலைவாசி கணக்கில் வருமா ?
[/font][/color] [color][font]
5,200 கோடி ரூபாய் பணத்தை விளம்பரங்களுக்காகச் செலவு செய்த இதே மத்திய அரசு, மனிதக் கழிவுகளை அள்ளுபவர்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்காக 900 கோடி ரூபாய் மட்டுமே செலவு செய்திருக்கிறது.
`தன் தாயைச் சந்திக்கச் சென்றாலும், பிரதமர் மோடி கேமராவை மறந்து செல்வதில்லை' என்று மோடி மீது தொடர்ந்து விமர்சனங்கள் வைக்கப்பட்டு வரும் சூழலில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மோடி அரசின் விளம்பரச் செலவுகளை விமர்சித்து வருகின்றனர்.
[/font][/color]
[color][font]
காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியின் விளம்பரங்களை விமர்சித்து, ``பிரதமர் அலுவலகம் தற்போது `பப்ளிசிட்டி அமைச்சர் அலுவலகம்' ஆக மாறிவிட்டது" எனக் கூறினார். சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பிரதமர் மோடியை `பப்ளிசிட்டி பிரதமர்' என அழைத்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியபோது, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, மோடியை, `பிரதம பிரசார மந்திரி' என அழைத்தார்.
விளம்பரப்படுத்தப்பட்ட திட்டங்கள் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்குப் பதில் சொல்வதைவிட, மக்களின் வரிப்பணத்திலிருந்து, அதிகச்செலவில் வெளியிடப்பட்ட விளம்பரங்கள் மீது எழுப்பப்படும் விமர்சனங்கள், மோடி தலைமையிலான பி.ஜே.பி அரசுக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. [/font][/color]