Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
குன்னூர் விடுதி பாத்ரூம் டஸ்ட்பின்னில் ரகசிய கேமரா! - பதறிய சுற்றுலாப் பயணிகள்

நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதியில் உள்ள தனியார் காட்டேஜ்களில் ரகசிய கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாப் பயணிகள் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.
தற்போது கோடை சீசன் என்பதால் நீலகிரி மாவட்டம் முழுவதும் சுற்றுலாப் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. நாளுக்கு நாள் காட்டேஜ்கள், உணவகங்கள் முளைத்தவண்ணம் உள்ளன. மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் சுற்றுலாப் பயணிகள் தாங்கள் விரும்பிய காட்டேஜ்களை ஆன்லைன் மூலம் புக்கிங் செய்கின்றனர். தற்போது குன்னூர் டால்பின் நோஸ் செல்லும் சாலையில் உள்ள காட்டேஜ் ஒன்றில் வெளி மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் சிலர் தங்கினர். தங்கியிருந்த காட்டேஜில் உள்ள குளியல் அறை குப்பைத் தொட்டியில் ரகசிய கேமரா இருப்பதை பார்த்துள்ளனர். விடுதியில் இருந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுவிட்டு, அப்பர் குன்னூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். ஜெயமுருகன் தலைமயில் போலீஸார் அந்த காட்டேஜில் சோதனை மேகொண்டனர். இதில் குளியல் அறையில் இருந்த குப்பைத் தொட்டியில் ரகசியகேமரா வைக்கப்பட்டிருந்ததுக்கான துளைகள் இருப்பதை உறுதி செய்தனர்.
[Image: IMG-20190508-WA0043_09014.jpg]


ஆனால், சோதனையில் கேமராக்கள் எதுவும் கிடைக்கவில்லை. தொடர்ந்து விடுதியில் பணிபுரியும் ஊழியர்களின் செல்போன்களை பறிமுதல் செய்து ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விடுதியில் கேர் டேக்கராக இருக்கும் முன்னாள் ராணுவ வீரரிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். முதல் கட்ட விசாரணையில் நகராட்சி அனுமதியின்றி இந்த காட்டேஜ் இயங்கி வந்தது தெரியவந்துள்ளது. ஆனால், போலீஸார் இப்படி ஒரு சம்பவமே நடைபெறாததை போலவே சமாளிக்கின்றனர். சுற்றுலாப் பயணிகளுக்கு  பாதுகாப்பு அளிக்கவேண்டியவர்களே மெளனமாக இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 10-05-2019, 12:31 PM



Users browsing this thread: 96 Guest(s)