Thread Rating:
  • 2 Vote(s) - 3.5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கங்கா யமுனா சரஸ்வதி [dono]
#7
திலிபன்

அந்த அதிகாலை குளிரில் சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனை வந்து அடைந்த கோயம்புத்தூர் எக்ஸ்பிரசில் இருந்து இறங்கினேன்..

மக்கள் வெள்ளத்தை கிழித்துக் கொண்டு ரயில் நிலையத்தின் வாயிலுக்கு வந்தேன்..

வா சார்.. வா சார்.. உனக்காக தான் காத்துகிட்டு இருக்கேன்.. வந்து வட்டில குந்து சார்.. என்று ஒரு காக்கி சட்டை அவன் கையில் இருந்த பேக்கை பிடுங்காத குறையாக அழைத்தான்…

டேய் முத்து.. சாரு என்னோட மாமுல் சவாரி.. ஒழுங்கா ஒதுங்கிக்கோ.. என்று இன்னொரு காக்கி சட்டை வந்தான்..

இரு ஆட்டோகாரர்களும் என் பெட்டியை பிடித்து இழுக்க…

யோவ்.. நான் கோவைல இருந்து இப்ப தாங்க முத தபா சென்னைக்கு வர்றேன்.. என்று சிங்காரவேலன் கமல் ஸ்டைலில் நான் சொன்னேன்..

ஐயோ.. கருவாடு பார்ட்டியா.. என்று இரண்டாவது வந்தவன் ஒதுங்கினான்..

முத்து நீயே சார இட்டுகினு போ.. என்று சொல்லிவிட்டு அவன் சென்று விட்டான்..

முத்துவின் ஆட்டோவில் ஏறினேன்..

மெய்யாலுமா கருவாட்டு கூடை கொண்டு வந்தியா சார்.. என்றான் ஆட்டோவை ஸ்டார்ட் செய்தபடி

செ.. செ.. இல்லங்க.. ஒரு கல்யாணத்துக்கு வந்தேன்.. என்று சொல்ல

அட்ரஸ் சொல்லு சார்.. என்றான்..

ஷோபா விஜய் திருமண மண்டபம்..

ஓ.. சாலிகிராமமா.. சரி சார்.. என்று ஆட்டோவை எடுத்தான்..

ஆட்டோ அந்த அதிகாலை நேரத்தில் மின்னல் வேகத்தில் பறந்தது..

எனக்கு இன்னும் அந்த வார்த்தைகள் என் காதிலும் மனதிலும் ரீகாரம் இட்டுக் கொண்டே இருந்தது..

திலிபா.. நீ தான் இந்த கல்யாணத்தை எப்படியாவது..

திலிபா.. நீ தான் இந்த கல்யாணத்தை எப்படியாவது..

திலிபா.. நீ தான் இந்த கல்யாணத்தை எப்படியாவது..

மீண்டும் மீண்டும் அந்த வாக்கியங்கள்..

தங்கவேலுவும்.. ரத்தினவேலுவும்.. போனில் மாற்றி மாற்றி பேசினார்கள்..

கண்டிப்பா கரக்ட் டைம்க் வந்திடு திலிபா.. உன்ன தான் நம்பி இருக்கோம்.. எப்படியாவது நீ தான் இந்த கல்யாணத்தை …

என்று சொன்னார்கள்..

பணத்தை அன்று இரவு என்னுடைய வங்கி கணக்கில் மாற்றி விட்டார்கள்..

அட்வான்சே பெரிய தொகையாக இருந்தது..

காரியத்தை கச்சிதமாக முடித்தால்.. கண்டிப்பாக லப்பாக கிடைக்கும் என்று எதிர் பார்த்தேன்..

ஆட்டோ கோடம்பாக்கம் மேம்பாலம் இறங்கி நேராக போய் கொண்டிருந்தது..

இன்னும் சற்று நேரம் தான்..

சரியாக முகூர்த்தம் ஆரம்பிப்பதற்குள் மண்டபத்திற்குள் சென்று விட வேண்டும் என்று மனம் பதை பதைத்தது..

ஆட்டோ.. ஷோபா விஜய் திருமண மண்டபம் வாசலில் சென்று நின்றது..

ஆட்டோவுக்கு பணம் கொடுத்து விட்டு இறங்கினேன்..

பிரமாண்டமாக அலங்காரம் செய்யப் பட்டிருந்தது..

வாசலில் நுழைவு தோறனத்தில் கோபால் குடும்பம் திருமணத்திற்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறோம்.. என்று வலைவாக பூக்களால் அலங்காரம் செய்திருந்தார்கள்..

நான் உள்ளே சென்றேன்..

மண்டபம் வாசலில் மணமக்கள் பெயர் தர்மாகோலில் கலர் கலராக வடிவமைக்கப் பட்டிருந்தது..

மணமக்கள்

யமுனா விஷ்ணு
கங்கா ராஜா

இரட்டை திருமணம்..

அதுவும் ஒரே மேடையில்…

கண்டிப்பாக நான் உள்ளே சென்றால்.. அனைவருக்கும் திகைப்பாக தான் இருக்கும்..

ஏன் என்றால் நான் வந்த விஷயம் அப்படி..

மண்டபத்துக்குள் எனது பையுடன் நுழைந்தேன்..

தூரத்தில் கோபால் தான் ஒற்றை ஆளாய் நின்று அனைவரையும் வரவேற்றுக் கொண்டும்.. அனைவரையும் உட்கார வைத்துக் கொண்டும்.. கூல் டிரிங்ஸ் கொடுத்துக் கொண்டும் இருந்தார்..

நான் நேராக அவர் அருகில் சென்றேன்..

திடீர் என்று அவர் முன் நான் சென்று நிற்கவும்.. என்னை கொஞ்சம் யோசனையோடு பார்த்தார்..

தம்பி நீங்க.. என்று மனோபாலா ஸ்டைலில் என்னை பார்த்தார்..

சார்.. நான் கோயம்புத்தூரில் இருந்து வர்றேன்.. நான் உங்ககிட்ட சொல்ல போற விஷயம் ரொம்ப முக்கியமான விஷயம்.. கொஞ்சம் பதட்டப்படாம கேட்டு ஒரு முடிவுக்கு வரணும்..

தம்பி என்ன சொல்றீங்க.. எதும் வில்லங்கம் பண்ண வந்து இருக்கீங்களா..

ஹா.. ஹா.. என்று ஒரு சின்ன வில்லன் சிரிப்பு சிரித்தேன்..

கோபால் புரிந்து கொண்டார்..

தம்பி கொஞ்சம் இப்படி வாங்க என்று சற்று ஒதுக்கு புறமாக என்னை அழைத்து சென்றார்..

நாங்கள் பேசியது.. நிழலோட்டமாய் தான் மற்ற வந்திருந்த ஜனங்களுக்கு தெரிந்திருக்கும்.. யாருக்கம் நாங்கள் பேசியது கேட்டிருக்காது..

கோபால் கையை ஆட்டி ஆட்டி பேசியதும்.. நான் அதற்கு எதிர் கை ஆட்டி பேசியதும்.. தூரத்தில் இருந்து பார்த்தவர்களுக்கு கண்டிப்பாக இந்த திருமணத்தில் ஏதோ பிரச்சனை என்று நினைத்து இருப்பார்கள்..

கொஞ்ச நேரம் ஆர்க்யூமெண்ட்.. நானும் கோபால் சாரும் நேராக முகூர்த்த மேடைக்கு வந்தோம்..

தம்பி.. நீங்க அப்படியே.. முகூர்த்த மேடைக்கு நேர உள்ள சேர்ல உட்கார்ந்துக்கங்க.. அங்க இருந்தா தான் உங்களுக்கு சவுரியம்.. என்று கேட்டார்..

ம்ம்.. சரி சார்.. எனக்கு ஓ.கே.. தான்.. ஆனா.. இன்னும் ஒரு சின்ன ஸ்டூல் வேணும் சார் என்றேன்..

என்ன தம்பி.. நீங்க தான் நல்லா ஹைட்டா இருக்கீங்கலே.. அப்புறம் எதுக்கு ஸ்டூல்..

இல்ல சார்.. போக்கஸ் வச்சி எடுக்கும் போது கண்டிப்பா உயரத்துல இருந்து தான் எடுக்கணும்.. என்றேன்..

சரி தம்பி.. இரு உனக்கு அதுக்கும் ஒரு ஏற்பாடு பண்றேன்… என்று சொல்லி கோபால் சார் போய் விட்டார்..

நான் சென்று கோபால் சார் சொன்ன சேரில் அமர்ந்தேன்..

என் பையில் இருந்து ஹைடெக் கேமரா எடுத்தேன்..

எல்லாம் சரியாக செட் பண்ணிக் கொண்டேன்..

இன்னும் தங்கவேலுவும்.. ரத்தினவேலுவும் என் காதுக்குள் சொன்ன விஷயம் ரீகாரம் இட்டுக் கொண்டே இருந்தது..

திலிபா.. நீ தான் இந்த கல்யாணத்தை எப்படியாவது..

திலிபா.. நீ தான் இந்த கல்யாணத்தை எப்படியாவது.. முழுசுமா போட்டோ எடுத்து ஆல்பம் போட்டு தரணும்.. கோயம்புத்தூர்ல இருந்து அதுக்கு தான் உன்னை ஸ்பெஷலா வரவழைக்கிறோம்..

கோபால் சார் சென்னை போட்டோகாரனே போதும்னு சொன்னாரு.. ஆனா.. நாங்க தான் உனக்கு ஒரு சான்ஸ் குடுக்கணும்னு சொல்லி போன் போட்டோம்..

கோபால் அவ்வளவு சீக்கிரம் ஒத்தக்க மாட்டாறு.. நீ தான் அவரை கண்வீன்ஸ் பண்ணனும் என்று சொன்னதை தான்.. நான் கோபால் சாரிடம் தனியாக சென்று கெஞ்சி கூத்தாடி இந்த கல்யாணத்துக்கு போட்டோகிராப் ஆர்டரை பெற்றேன்.
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply


Messages In This Thread
RE: கங்கா யமுனா சரஸ்வதி [dono] - by M.Gopal - 08-05-2019, 06:23 PM



Users browsing this thread: 3 Guest(s)