Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
ஓடவும் முடியாது... ஒளியவும் முடியாது - பிரமாண்ட செட்டில் பிக்பாஸ் 3 ஷூட்டிங்


[Image: BIGGBOS.jpg]பிக்பாஸ்


‘பிக்பாஸ் சீசன் 3’ நிகழ்ச்சியின் ஷூட்டிங் தற்போது ஆரம்பமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2017-ம் ஆண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அறிமுகமானது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சிக்கு கூடுதல் பலம் சேர்த்தது நடிகர் கமல்ஹாசன். இரவு 9 மணிக்கு ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சிக்கு ஆரம்பத்திலேயே எதிர்ப்புகளும், போராட்டங்களும் எழுந்தன. ஆனால் அவை அனைத்தும் நிகழ்ச்சிக்கான விளம்பரங்களாக மாறின.


[Image: bigg-boss-tamil.jpg]

ஒரே வீட்டுக்குள் 100 நாட்கள் 16 போட்டியாளர்கள் தங்கியிருந்து வெளி உலக தொடர்புகளின்றி,  பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்க்குகளை செய்ய வேண்டும். இதற்கு சில விதிமுறைகளும் விதிக்கப்படும். கடந்த 2017-ம் ஆண்டில் நடந்த நிகழ்ச்சியில் ஆரவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். ஓவியா, சினேகன் உள்ளிட்டோர் மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றனர்.

[Image: rajabheema.jpg]

இதையடுத்து 2018-ம் ஆண்டில் இரண்டாவது சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கியிருந்தார். ஆனால் இந்தமுறை நடிகர் கமல்ஹாசன் அரசியல்வாதியாக மாறியிருந்தார். யாஷிகா, ஐஸ்வர்யா, மஹத் என இளசுகள் பட்டாளங்கள் இடம்பெற்ற இந்நிகழ்ச்சியில் நடிகை ரித்விகா வெற்றியாளர


தற்போது பிக்பாஸ் சீசன் 3 துவங்க உள்ளது. இன்று அதற்காக பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு புரமொஷன் வீடியோக்களை படப்பிடிப்பு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர் நிகழ்ச்சிக் குழுவினர். இன்னும் சில நாட்களில் நிகழ்ச்சிக்கான விளம்பரங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகலாம் என தெரிய வருகிறது.

ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 08-05-2019, 05:48 PM



Users browsing this thread: 4 Guest(s)