Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
பெருங்களத்தூரில் பிட்ச் ஆகி திருவான்மியூர் வரை திரும்பிய பந்து - சுழலில் வீழ்ந்த சென்னை!
மூன்று ஸ்பின்னர்களும் சேர்ந்து 11 ஓவரில் 60 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார்கள். நான்கு விக்கெட்கள் வேறு! 'சரி பந்து அவங்களுக்கு பெருங்களத்தூர்ல குத்தி திருவான்மியூர் வரைக்கும் ஸ்பின் ஆனா நமக்கு அட்லீஸ்ட் வேளச்சேரி வரைக்குமாவது திரும்பும்ல' என மனதைத் தேற்றிக்கொண்டார்கள் சென்னை ரசிகர்கள்.
[Image: 156918_thumb.jpg]
உழைப்பாளர் சிலை இருக்கும் சேப்பாக்கத்தில் சென்னை சிங்கம் கர்ஜித்தால் அது வள்ளுவர் சிலை இருக்கும் குமரி முனை வரை கேட்கும்தான். ஆனால், மும்பையோடு ஆடும்போது மட்டும் ரிங் மாஸ்டரைக் கண்ட சர்க்கஸ் சிங்கம்போல பம்மிவிடுகிறது சென்னை. சேப்பாக்கத்தில் இதுவரை (நேற்றைய ஆட்டத்துக்கு முன்புவரை) இரு அணிகளும் மோதியுள்ள ஆறு ஆட்டங்களில் நான்கில் மும்பைதான் வெற்றி பெற்றுள்ளது. அதுவும் கடைசியாக சென்னை இங்கே மும்பையை வீழ்த்தியது 2010-ல்தான். 
கடைசியாக இங்கு ஆடிய 23 ஆட்டங்களில் 19 ஆட்டங்களில் சென்னைக்கே ஜெயம். தோற்ற நான்கு ஆட்டங்களில் மூன்று மும்பையோடு! இப்படி எந்தப் பக்கம் போனாலும் காவிரிக்கு அணைபோடும் கர்நாடகாபோல மும்பையின் டேட்டா குறுக்கே நிற்பதால் கொஞ்சம் பயத்தோடுதான் ஸ்டேடியம் வந்தார்கள் ரசிகர்கள்.
கடந்தமுறை சொதப்பியதற்காக அந்தரத்தில் பறந்தபடி மன்னிப்பு கேட்டுவிட்டு இந்தமுறை 'தல'க்கு ஆதரவாக தலைகாட்டியது டாஸ் காயின். ஆனால், ஆச்சர்யமாக பேட்டிங்கைத் தேர்வு செய்தார் தோனி. வருண பகவான் நேற்று சென்னைக்கு மேலே 'வர்ற மாதிரி வருவேன்... ஆனா அப்படியே போயிடுவேன்' என உள்ளாட்சித் தேர்தல்போல போக்குக் காட்டிக்கொண்டிருந்தார். மேகமூட்டமிருந்ததால் பனி இருக்காது என முடிவு செய்து பேட்டிங் தேர்ந்தெடுத்திருப்பார் தோனி. போக, டெல்லியுடனான கடைசி ஆட்டத்தில் இரண்டாம் பாதியில் பிட்ச் இரானிய படங்களைப்போல ஸ்லோவானது. இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.


சென்னையில் ஆடினால் பக்கத்து டீமில் கடன் வாங்கியாவது எக்ஸ்ட்ரா ஸ்பின்னரோடு ஆடுவது என மற்ற டீம்கள் முடிவு செய்துவிட்டபடியால் மும்பையிலும் நேற்று ராகுல் சஹார், க்ருணால், ஜெயந்த் யாதவ் என மூன்று ஸ்பின்னர்கள். சென்னையில் காயமடைந்த கேதாருக்குப் பதில் முரளி விஜய். அவ்வளவுதான்.




முதல் ஐந்து பந்துகளை இது ட்ரையல் பால், இது பேட்ஸ்மேன்ஸ் ட்ரையல், இது ரெண்டாவது பேட்ஸ்மேன்ஸ் ட்ரையல் என ஸ்ட்ரீட் கிரிக்கெட் ரீதியிலேயே டீல் செய்தார் டு ப்ளெஸ்ஸி. ஆறாவது பந்தில்தான் 'இது நிஜ கிரிக்கெட்' என்ற ஞாபகமே வந்து சிங்கிள் தட்டினார். அடுத்த ஓவரின் இரண்டாவது பாலில் கட் ஷாட் அடிக்க அது ஷார்ட் தேர்ட் மேனுக்கு கொஞ்சம் தள்ளி லேண்டாகி பவுண்டரி ஓடியது. அதற்கடுத்த ஓவரிலும் அதே ட்ரிக்கை அவர் பின்பற்ற, 'ஏல ஏமாத்தவா பாக்க?' என பந்தை அமுக்கினார் அன்மோல்ப்ரீத்.
மூன்று ஓவர்கள் முடிவில் ஸ்கோர் 7/1. ஸ்கோர்போர்டைப் பார்த்து பாவப்பட்டு ஜெயந்த் யாதவ் நோ பால் வீச, ஃப்ரீ ஹிட்டில் ரெய்னாவுக்கு பவுண்டரி கிடைத்தது. 'ஹை நம்ம புள்ள' என ஜெயந்த்தைக் கொண்டாடியது கூட்டம். நான்காவது பாலிலேயே அவர் ரெய்னாவை பேக் செய்ய, தத்தெடுத்த வேகத்தில் அவரை டைவர்ஸும் செய்தார்கள் ரசிகர்கள். அடுத்ததாகக் களமிறங்கினார் முரளி விஜய்.
சேப்பாக்கம் கிரவுண்டில் இருக்கும் புற்களை எண்ணச் சொன்னால் 'மொத்தமா 1,23,456 புல்லு' என சரியாகச் சொல்லிவிடுவார் விஜய். அந்தளவுக்கு அவருக்கு இந்தக் கிரவுண்ட் பரிச்சயம். அதனால் அவர் மேல் நம்பிக்கை வைத்தார்கள் ரசிகர்கள். மறுபக்கம் பும்ரா வீசிய ஐந்தாவது ஓவரில் இரண்டு பவுண்டரிகள் அடித்தார் வாட்சன். கூட்டம் உற்சாகமானது.
வாட்சன் இந்த சீஸனின் தொடக்கத்திலிருந்தே ஒரு பழக்கம் பழகியிருக்கிறார். ஒரு பவுண்டரி அடிப்பார், கூட்டம் உற்சாகமாகி 'வாட்சன் வாட்சன்' எனக் கத்தத் தொடங்கினால், 'பாசக்கார பயலுக நம்மள கூப்பிடுறாய்ங்க பாரு' என விக்கெட்டைக் கொடுத்துவிட்டு கூப்பிட்ட கூட்டத்தை நோக்கி பாசமாக ஓடுவார். இந்த எஸ்.டி.டி தெரியாமல் நேற்றும் கூட்டம் 'வாட்சன் வாட்சன்' எனப் பல்லவி தொடங்க, 'இந்தா வந்துட்டேன்' என சரணம் பாட அவர்கள் முன் ஆஜரானார் வாட்சன். ஸ்கோர் ஆறு ஓவர் முடிவில் 32/3.


[Image: rayudu_02342.jpg]
[color][font]
விஜய்யின் பட்டப்பெயர் 'monk'. பெயருக்கேற்றாற்போல மைதானத்தில் தவ வாழ்க்கை வாழ்ந்து பிட்ச்சில் தியானம் எல்லாம் செய்துகொண்டிருந்தார். மறுபக்கம் ராயுடு. சொல்லவா வேண்டும்? ஃபீல்டில் இருக்கும் அம்பயரே விடுவிடுவெனப் போய் டீ சாப்பிட்டுவிட்டு வந்துவிடலாம். அவ்வ்வ்வ்வ்வளவு நிதானமாக ஏறியது ஸ்கோர். 'இந்தா இங்க எல்லாம் தியானம் பண்ணக்கூடாது. காம்பவுண்டை ஏறிக் குதிச்சா சமாதிதான். அங்கே போய் பண்ணுங்க ஃப்ரெண்ட்' என விஜய்யை அனுப்பிவைத்தார் ராகுல் சஹார். கூட்டம் குஷியானது. பின்னே? தோனி தரிசனமாயிற்றே!
களமிறங்கினார் தோனி. ஸ்கோர் 65/4. கைவசம் 47 பந்துகள்தான் இருந்தன. அடித்தாக வேண்டிய பிரஷர். அடுத்த ஓவரிலேயே பொளீரென ஒரு சிக்ஸ் அறைந்துவிட்டு சிங்கிள் எடுத்தார். அடுத்த பாலை, ராயுடு தட்டிவிட்டு தோனிக்கு சிங்கிள் ஆசைகாட்டி அப்புறம் பின்வாங்கினார். உடனே அவரை அருகில் அழைத்தார் தோனி, 'தம்பி, இப்படிலாம் ஐஸ்பால் விளையாடினா டீம்மேட்னுகூட பாக்கமாட்டேன். பொசுக்குனு நானே ரன் அவுட் பண்ணிவிட்ருவேன்' என மிரட்டியிருப்பார்போல! பயந்துபோய் அடுத்த பந்தை சிங்கிள் தட்டாமல் சிக்ஸுக்குத் தூக்கினார் ராயுடு!
[/font][/color]
[Image: dhoni_02048.jpg]
[color][font]
19-வது ஓவரில், 'ஹலோ மலிங்கா, 2011ல உங்க டீம்கூட சிக்ஸ் அடிச்சேனே ஞாபகம் இருக்கா, ஓ... இல்லியா? இந்தா இப்படித்தான் அடிச்சேன்' என இரு பிரமாண்ட சிக்ஸ்களைப் பறக்கவிட்டார் தோனி. அவர் பேட் எழுப்பிய 'சொத்' சத்தம் ஊருக்குள் இருந்தவர்களையும் அலாரம் க்ளாக்போல எழுப்பியிருக்கும்.
கடைசி ஓவரின் முதல் பாலில் தோனி கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினார். அவரை திரும்பி அழைத்த அம்பயர் 'அது நோ-பால்' என அறிவித்தார். வாவ், மெடிக்கல் மிராகிள்! நோ-பாலை நோ பால் வீசியவுடனேயே கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆனாலும் அந்த ஓவரில் பெரிதாக ரன்கள் வரவில்லை. ஒன்பது ரன்கள்தான். ஸ்கோர் 131.
மூன்று ஸ்பின்னர்களும் சேர்ந்து 11 ஓவரில் 60 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார்கள். நான்கு விக்கெட்கள் வேறு! 'சரி பந்து அவங்களுக்கு பெருங்களத்தூர்ல குத்தி திருவான்மியூர் வரைக்கும் ஸ்பின் ஆனா நமக்கு அட்லீஸ்ட் வேளச்சேரி வரைக்குமாவது திரும்பும்ல' என மனதைத் தேற்றிக்கொண்டார்கள் சென்னை ரசிகர்கள்.
2008-ல் இங்கே 126 ரன்களை டிபெண்ட் செய்தது ஆர்.சி.பி. எனவே நமக்கும் வாய்ப்பிருக்கிறது என களமிறங்கினார்கள் சென்னை பௌலர்கள். தீபக் சஹாரின் முதல் பந்தையே பவுண்டரிக்கு விரட்டினார் ரோகித். செர்ரிக்கு முகம் இன்னமும் சிவந்துவிட்டது. அடுத்த பாலிலேயே எல்.பி.டபுள்யூவாக்கி தொடையைத் தட்டி பழிவாங்கினார். அடக்கி வாசிக்கத் தொடங்கினார்கள் மும்பை பேட்ஸ்மேன்கள். நான்காவது ஓவரில் பாஜி வீசிய பாலை லாங் ஆஃபில் அடிக்க ஆசைப்பட்டு விக்கெட்டை கிஃப்ட்டாகக் கொடுத்தார் டி காக்.
[/font][/color]
[Image: ishan_kishan_02345.jpg]
[color][font]
அடுத்த ஓவரிலேயே சூர்யகுமார் யாதவையும் பெவிலியன் அனுப்பியிருக்கலாம்தான். ஆனால், கேட்ச்சை நழுவவிட்டார் விஜய். விளைவு அந்த ஓவரிலும் அதற்கடுத்த ஓவரிலும் தலா 11 ரன்கள். ஸ்கோர் பவர்ப்ளே முடிவில் 44/2. விக்கெட் வாங்கியே ஆக வேண்டும் என்ற நிலை. ஆனால், விட்டுக்கொடுக்காமல் விடாக்கண்டன் கொடாக்கண்டனாக நின்றார்கள் சூர்யாவும் இஷான் கிஷனும்.
[/font][/color]
[Image: suryakumar_yadhav_02016.jpg]
[color][font]
பந்துக்கு பந்து ஃபீல்டிங் செட்டப்பை மாற்றிக்கொண்டே இருந்தார் தோனி. பௌலர்களையும் மாற்றினார். ஆனாலும் டார்கெட் குறைவென்பதால் ரிஸ்க் எடுக்காமல் தட்டி தட்டிவிட்டு ஸ்கோர் ஏற்றினார்கள் மும்பை பேட்ஸ்மேன்கள். 13 ஓவர்கள் முடிவில் 92 ரன்கள். 14வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்களைத் தட்டினார் தாஹிர். இஷான் அவுட், க்ருணால் பாண்ட்யா அவுட்! ஆனால் மேட்ச் முடியும் நேரமாகிவிட்டதால் எங்கும் ஓடவில்லை தாஹிர்!
அதற்கடுத்த பாலும் விக்கெட் ஆகியிருக்க வேண்டியது. கோட்டைவிட்டார் வாட்சன். அவ்வளவுதான் ஈஸியாக சிங்கிள்கள் தட்டி 19வது ஓவரில் வெற்றிக்கோட்டைத் தொட்டது மும்பை. சூர்யகுமார் யாதவ் 70 ரன்கள். சென்னை இனி இன்னொரு ஆட்டத்தில் மோதி தன் பலத்தை நிரூபிக்க வேண்டும். ஆனாலும் முதன்முறையாக 'பரவால்ல விடு, செமி ஃபைனல்ல தோத்தா என்ன? பைனல்ல பாத்துக்கலாம்' என விஜய்யின் புகழ்பெற்ற டயலாக்கை சொல்லித் தேற்றியிருக்கிறார் தல! பார்க்கலாம்! [/font][/color]
Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 08-05-2019, 05:42 PM



Users browsing this thread: 52 Guest(s)