நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு
யுகேந்திரன் வீட்டிற்குப் போகாமல் தங்கள் கம்பெனிக்குச் சென்றான்.

அதற்குக் காரணம் இடையில் மகேந்திரன் அவனை அழைத்திருந்ததுதான்.
அவனது குரலில் ஏதோ கவலை தெரிந்தது. அதனாலேயே சென்றான்.
“என்ன யுகா. பரிட்சை எல்லாம் எப்படி எழுதினே?”
கேட்டவாறே சாருலதா வந்தாள்.
அவன் தன் கையை கீழே கவிழ்த்துக் காண்பித்தான்.
“ஊத்திக்கும்.”
என்று உதட்டைப் பிதுக்கியவாறே பதில் சொன்னான்.
“என்ன கிருஷ்ணவேணியை காணோம்.”
“அவ கொஞ்ச நேரம் மத்த ப்ரெண்ட்ஸ் கூட இருந்துட்டு வர்றேன்னு சொன்னா. இப்ப அதுக்கென்ன?”
சற்றே எரிச்சலாய் பதில் சொன்னான்.
இன்று என்னவோ சாருலதா கொஞ்சம் அக்கறையோடு பேசுவது போல் பட்டது. அது நடிப்புதான் என்று அவனுக்குத் தெரியும். அவன் அண்ணனின் முன்பு அவள் போடும் வேசம்.
இதற்கொரு முடிவு வராதா?
அண்ணன் என்றுதான் அவளது நடிப்பை புரிந்துகொள்ளப்போகிறான்?
இவள் அண்ணனை விடவேமாட்டாளா?

ஆதங்கமாக வந்தது.
“ஆமா. நீ கிருஷ்ணாகிட்ட உன் விருப்பத்தை சொல்லிட்டியா?”
மகேந்திரன் முன்பே போட்டு உடைத்த மாதிரி அவள் கேட்டதைக் கண்டு அவன் திடுக்கிட்டான்.

இவளுக்கு எப்படி தெரியும்?
என்னையும் வேவு பார்க்க ஆள் வைத்திருக்கிறாளா?
உனக்கு எப்படிக்கா தெரியும்?”

அவள் கேட்டதற்கு பதில் சொல்லாமல் அதை ஆமோதிப்பது போல் இருந்தது அவன் கேள்வி.

சாருலதா ஜாடையாக மகேந்திரன் முகத்தைப் பார்த்தாள். அது இறுகியிருந்தது.

“இதை யாராவது சொல்லனுமா என்ன? அவளுக்கு பரிட்சை முடியுது. அதன் பிறகு ஊருக்குப் போயிடுவாளே. அதான் சொல்லிட்டியான்னு கேட்டேன்.”

“ஏன் அவ ஊருக்குப் போனா என்னால் பேச முடியாதா? இந்த விஞ்ஞான உலகத்தில் அதெல்லாம் பெரிசு மாதிரி பேசறே?”

“இல்லை. உனக்கு அவளை எவ்வளவு பிடிக்கும்னு எனக்குத் தெரியும். அதான் சொல்லிட்டியான்னு கேட்டேன்.”

அவன் தன் பல்லைக் கடித்தான்.

இந்த அண்ணன் முன்பு அவள் என்னவெல்லாம் கேட்கிறாள்?

அவள் யார் என் விசயத்தில் தலையிட?

“நான் அவகிட்ட சொல்லிட்டேன். போதுமா?”

“போதாது. அதுக்கு அவ என்ன சொன்னான்னு சொல்லு.”
“தேவையில்லாம என்னோட விசயத்தில் தலையிடாதேக்கா. அவ என்கிட்ட என்ன பதில் சொன்னான்னு உன்கிட்ட சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.”
வெடுக்கென்று அவளை பேசியவன் தன் அண்ணனிடம் கூட சொல்லிக்கொள்ளாமல் கிளம்பிவிட்டான்.

“நான் இப்ப என்ன கேட்டேன்னு இப்படி கோவிச்சுக்கிட்டு போறான். அவ சம்மதம் சொல்லியிருக்கமாட்டா. அதை என்கிட்ட வந்தா காட்டறது?”

தனக்குள் பேசுவது போல் மகேந்திரன் காதில் விழுமாறு பேசியவள் அவனைக் கவனித்தாள்.

அவன் முகத்தில் எந்த மாறுதலும் இல்லை. வேலையில் கவனமாக இருந்தது போல்தான் தெரிந்தது.

கல்லுளிமங்கன். தனது தம்பி திருமணத்தைப் பற்றி யோசிக்க ஆரம்பித்துவிட்டான் என்றால் கூட அதை இவன் பெரிதுபடுத்தமாட்டான். இவன் என்ன இப்படியே சாமியாராவா இருந்துடப்போறான்.

யுகேந்திரன் சோர்வாக வீட்டினுள்ளே நுழைந்தவன் அங்கிருந்த நாற்காலியில் அப்படியே சரிந்தமர்ந்தான்.

அப்போது அங்கே வந்த வனிதாமணி அவனருகே அமர்ந்தார்.

“என்னப்பா? கிருஷ்ணா என்ன சொன்னா?”

“அவ எதுவும் சொல்லலைம்மா. யோசிக்க நேரம் கேட்டிருக்கா?”

“இப்ப அவ உன்னோட வரலையா?”

“இல்லைம்மா.”

“சரி மெதுவா வரட்டும். நீ சாப்பிட வா.”

“சாப்பிட்டாச்சும்மா.”

யோசனையோடே சமையல் அறைக்குச் சென்றார்.

யுகேந்திரன் முகத்தில் இது வரைக்கும் காணாத சோர்வு தெரிந்தது.

யுகேந்திரன் நெடுநேரம் யோசனையோடே அமர்ந்திருந்தான்.

வனிதாமணியும் வேலைகளை முடித்துவிட்டு வந்து அவன் எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்து அவனையே பார்த்துக்கொண்டிருந்தார்.

கண்விழித்துப்பார்த்தவன் அவரைக் கண்டு திடுக்கிட்டான்.

“அம்மா.”

“என்னப்பா?”

“கொஞ்சம் தலைவலிக்குது. டீ தர்றீங்களா?”

“இதோ எடுத்துட்டு வர்றேன்ப்பா.”

அவர் சமையல் அறைக்குள் நுழைந்ததுமே அவன் தனதறைக்குச் சென்றான்.

கிருஷ்ணவேணி எத்தனை நேரம் அப்படியே அழுதவண்ணம் அமர்ந்திருந்தாள் என்றே தெரியவில்லை.

‘என் மேல் உனக்கு இத்தனைப் பாசமாடா?’

கண்களைத் துடைத்துக்கொண்டு நிமிர்ந்தாள்.

யுகேந்திரன் தன் மேல் வைத்திருந்த பாசம் அவளை மிகவும் நெகிழச்செய்தது.

மிகவும் பிரியமானவன். ஒரு தோழனாய் தான் அவனை நினைத்திருந்தாள்.

தன் மீது இத்தனைப் பாசத்தை அவன் வைப்பதற்கு தான் என்ன செய்துவிட்டோம் என்று அவளுக்குத் தோன்றியது.



அவனைப் போல் தான் அவன் மேல் பாசம் வைக்கவில்லை என்றே தோன்றியது.
அவனைப் போன்று ஏன் தன்னால் அன்பை செலுத்த முடியவில்லை? தன்னையே கேட்டுக்கொண்டாள்.

பதில்தான் கிடைக்கவில்லை.
உடனே அவனிடம் பேச வேண்டும் போல் இருந்தது.
அவன் கேட்டதற்கு தன்னால் பதில் சொல்ல முடியாமல் போனதற்கே அந்த குற்ற உணர்ச்சிதான் காரணம்.
தனது அலைபேசியை எடுத்துப்பார்த்தாள். அது அணைந்திருந்தது. அவனது வருத்தமான முகமே கண் முன் வந்தது.

உடனே அவனைப் பார்க்க வேண்டும் என்று தோன்ற கிளம்பிவிட்டாள்.

அவள் இன்று வண்டியையும் எடுத்து வரவில்லை. யுகேந்திரனையும் போகச் சொல்லிவிட்டாள்.

அவள் எத்தனை நேரம் யோசித்திருந்தாளோ? மிகவும் நேரமாகிவிட்டது என்று புரிந்தது.

அந்த இடத்தை விட்டு எழுந்து நடந்தாள்.

பேருந்து நிறுத்தத்திற்கு வந்தபோது யாரும் அங்கே இல்லை. தனியே நிற்க ஒரு மாதிரியாக இருந்தது.

பேருந்துக்காக காத்திராமல் ஆட்டோவில் ஏறிச் சென்றுவிடலாம் என்று நடக்க ஆரம்பித்தாள்.

ஏதாவது ஆட்டோ வருகிறதா? என்று பார்த்தவாறே நடந்தாள்.

சிறிது தூரத்தில் ஒரு ஆட்டோ நிறுத்தம் இருப்பதைக் கண்டிருக்கிறாள்.

அவளது நல்ல நேரம் ஒரு ஆட்டோ மட்டும் நின்றிருந்தது.

பேரம் பேசாமல் ஏறி அமர்ந்து செல்லும் இடத்தைச் சொல்லிவிட்டு இருக்கையில் சாய்ந்தமர்ந்தாள்.
‘சாரிடா யுகா. நீ கேட்ட உடனே என்னால் பதில் சொல்ல முடியவில்லை. என் மனம் குழம்பிப்போய் இருந்தது. அதனால் நீ என்ன சொல்ல வர்றேன்னு என்னால் புரிஞ்சுக்க முடியலை.’
Like Reply


Messages In This Thread
RE: நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு - by johnypowas - 08-05-2019, 12:13 PM



Users browsing this thread: 22 Guest(s)