Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
மின்னணு வாக்கு இயந்திரங்களும் ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களும்ஓட்டலில் இருந்து கைப்பற்றப்பட்டன



[Image: 201905071116431894_EVMs-VVPATs-found-in-...SECVPF.gif]

சாபர்பூர்

நேற்று நடைபெற்ற 5-ம் கட்ட மக்களவை தேர்தலில், பீகாரில் உள்ள முசாபர்பூர் உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் நேற்று முசாபர்பூரில் ஒரு ஓட்டலில் இருந்து 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டு கருவி, 2 ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் துணை ஆட்சியரால் கைப்பற்றப்பட்டன.


முசாபர்பூர் துணை ஆட்சியர் அவற்றை மீட்டபோது, அங்கு திரண்ட உள்ளூர்வாசிகள், மின்னணு வாக்கு இயந்திரங்களில் மோசடி நடைபெற்றிருப்பதாகக் கூறி முழக்கங்களை எழுப்பியுள்ளனர்.

தேர்தல் அலுவலரான அவதேஷ் குமார் என்பவர் மின்னணு வாக்கு இயந்திரங்களை ஓட்டலில் சென்று வைத்தது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

பழுதான மின்னணு வாக்கு எந்திரங்களுக்கு பதிலாக பயன்படுத்துவதற்கான மாற்று எந்திரங்கள் மற்றும் கருவிகளையே அவர் ஓட்டலில் வைத்திருந்ததாக மாவட்ட ஆட்சியர் அலோக் ரஞ்சன் கோஷ் (Alok Ranjan Ghosh) கூறியுள்ளார்.

தனது கார் ஓட்டுநர் சென்று வாக்களித்து விட்டு வரும்வரை காத்திருப்பதற்காக மாற்று மின்னணு வாக்கு இயந்திரங்களை அவர் ஓட்டலில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இருப்பினும் இது விதிமுறைகளுக்கு எதிரான செயல் என்பதால், விளக்கம் கேட்டு தேர்தல் அலுவலருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பதாகவும் விசாரணைக்குப் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முசாபர்பூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 08-05-2019, 09:58 AM



Users browsing this thread: 103 Guest(s)