Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
தேர்தலில் பதிவான 50% ஒப்புகைச் சீட்டுகளை எண்ணி சரிபார்க்க தேவையில்லை: உச்சநீதிமன்றம்!
அபிஷேக் மனு சிங்வி வாதத்தை தொடங்கிய பொழுதே குறுக்கிட்ட நீதிபதிகள், ஏற்கெனவே உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தலையிட வேண்டிய அவசியமில்லை எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்தனர்.



[Image: vvpat.jpg]
மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகளை, 50 சதவீத ஒப்புகைச் சீட்டுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கக் கோரி 21 எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மக்களவைத் தேர்தலின்போது, ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள ஏதாவது ஒரு வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகளையும், ஒரு தொகுதிக்கு உட்பட்ட ஒரு வாக்குச்சாவடியில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் ஒப்புகைச் சீட்டுகளையும் ஒப்பிட்டுப் பார்க்க இருப்பதாக, தேர்தல் ஆணையம் கூறியது.


இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ், திமுக, தெலுங்குதேசம், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 21 எதிர்க்கட்சிகள். குறைந்தபட்சம் 50 சதவீத ஒப்புகைச் சீட்டுகளை, வாக்குகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

அப்போது, ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 5 வாக்குச் சாவடிகளில் பதிவான வாக்குகளை ஒப்பிட்டுப் பார்க்குமாறு, நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இதையடுத்து,  தீர்ப்பை சீராய்வு செய்யக் கோரி 21 எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த மனு, இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் எதிர்க்கட்சிகள் சார்பில் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகியிருந்தார். அபிஷேக் மனு சிங்வி வாதத்தை தொடங்கிய பொழுதே குறுக்கிட்ட நீதிபதிகள், ஏற்கெனவே உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தலையிட வேண்டிய அவசியமில்லை எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, இந்த முறை 25 சதவீதம் என்ற அளவிலாவது அதிகரித்திருக்கலாம் என தெரிவித்தார்
Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 08-05-2019, 09:56 AM



Users browsing this thread: 95 Guest(s)