Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
`கொஞ்சம் சுத்திப் போகணும்... அவ்ளோதான்!” - குவாலிஃபையர்  போட்டிகுறித்து தோனி #MIvCSK

மும்பை அணிக்கு எதிரான குவாலிஃபையர் ஆட்டத்தில், சென்னை அணியின் ஆட்டம்குறித்து தோனி மனம் திறந்து பேசினார். செய்யத் தவறியது, லக்கி, அன்லக்கி எனப் பல்வேறு விஷயங்கள்குறித்து பேசினார், கேப்டன் தோனி. 
[Image: AP19127641725942_07267.jpg]

ஐபிஎல் தொடரின் முதல் ப்ளே ஆஃப் போட்டி. சொந்த மண்ணில் சென்னை அணி மீண்டும் ஒருமுறை மும்பை அணியுடன் தோல்வியைச் சந்தித்திருக்கிறது. கடைசி நான்கு முறை சென்னை அணி மும்பையிடம் தோல்வியை மட்டும்தான் சந்தித்தது. அதுவும் சொந்த மண்ணில் 2010 -ம் ஆண்டுக்குப் பிறகு சென்னை அணி மும்பையை வீழ்த்தவே இல்லை. இறுதிப் போட்டியும் ஹைதராபாத் மைதானத்துக்கு மாற்றப்பட்டுள்ளதால், மும்பை அணியை சென்னையில் வீழ்த்த இன்னும் ஒருவருடம் காத்திருக்க வேண்டும். 


போட்டி முடிந்த பின்னர் பேசிய சென்னை அணியின் கேப்டன் தோனி, சில விஷயங்களைச் சரியாகக் கணித்திருக்க வேண்டும் என்கிறார். தோனி, ``போட்டி என்றால் ஒருவர் தோற்கத்தான் செய்வார். அதுதான் போட்டியின் தன்மை. எங்களுக்கு சில விஷயங்கள் சிறப்பானதாக அமையவில்லை. குறிப்பாக பேட்டிங். 




[Image: AP19127518979997_07013.jpg]
சொந்த மண்ணில் விளையாடும்போது, இங்கு இருக்கும் சூழலுக்கு ஏற்ப சீக்கிரம் மாற வேண்டும். இங்கு, நாங்கள் ஏற்கெனவே 7 போட்டிகள் விளையாடியுள்ளோம். மற்ற அணிகளைவிட ஆடுகளத்தை நாங்கள்தான் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஆடுகளம் எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்திருக்க வேண்டும்.  இதைத்தான் சொந்த மண்ணில் விளையாடுவதற்கான சாதகங்கள் என்கிறோம். ஆனால், இதை நாங்கள் சரியாகச் செய்யவில்லை. 
[Image: AP19127566215166_07553.jpg]
என்னைப் பொறுத்த வரை பேட்டிங்கில் முன்னேற்றம் தேவை. அணியில் இருக்கும் பேட்ஸ்மேன்கள் நல்ல திறமையானவர்கள்தான். சிறப்பாகவும் விளையாடியுள்ளனர். ஆனால், முக்கியமான ஆட்டத்தில் தேவையற்ற ஷாட்டுகள் அடித்துவிடுகின்றனர். ஆனால், அவர்களிடம் அனுபவம் இருக்கிறது. அடுத்த போட்டியில் நிச்சயம் சிறப்பாக விளையாடுவார்கள்” என்றார். 
[Image: AP19127619290606_07176.jpg]
சென்னையின் பந்துவீச்சு குறித்துப் பேசிய தோனி, ``பந்துவீச்சைப் பொறுத்தவரை கொஞ்சம் அன்லக்கி என்றுதான் சொல்லுவேன். சில கேட்சுகள் பிடிக்காமல் தவறவிட்டோம். பேட்ஸ்மேன்களுக்கு சற்று தள்ளி பந்து வீசியிருக்க வேண்டும். பந்துவீச்சில் இன்னும் சில வேரியேஷன்ஸ் காட்டியிருக்க வேண்டும். இதனை செய்யத் தவறிவிட்டோம். எனினும், போதுமான ஸ்கோர் இல்லை என்பதுதான் உண்மை. 130 மாதிரியான இலக்கினைக்கொண்டு ஆடும்போது, ஒரு பவுண்டரிகூட சிக்கலை ஏற்படுத்தும். 
இதுபோன்ற தொடரின் முக்கியமான கட்டத்தில் ஆட்டத்தை இழப்பது நல்ல விஷயம் கிடையாது. ஆனாலும், புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் சென்னை அணி இடம்பிடித்தது லக்கி. இதனால் இன்னும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. நேராகச் செல்ல முடியவில்லை. கொஞ்சம் சுற்றிச் செல்லவேண்டி இருக்கிறது.  அதனால், இந்தப் பயணம் இன்னும் கொஞ்சம் நீண்ட பயணம் ஆகியுள்ளது” என்று நம்பிக்கையுடன் முடித்தார். 
Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 08-05-2019, 09:44 AM



Users browsing this thread: 101 Guest(s)