Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
பிரியங்கா சோப்ராவை நடிகர் யோகி பாபுவுடன் ஒப்பிடும் இணையவாசிகள் - ஏன்?


[Image: _106820248_hi053791505.jpg]படத்தின் காப்புரிமைAFP
அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் நடைபெற்ற 'மெட் காலா' என்ற நிகழ்வில் கலந்துகொண்ட இந்திய திரைப்பட நடிகை பிரியங்கா சோப்ராவின் சிகை அலங்காரம் இணையத்தில் பெரும் நகைச்சுவைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.
உலகம் முழுவதிலும் உள்ள பிரபல திரைப்பட நடிகர்களையும், ஆடை வடிவமைப்பாளர்களையும் ஒருசேர இணைக்கும் நிகழ்வுதான் மெட் காலா. நியூயார்க் நகரின் சிறப்பம்சமாக கருதப்படும் இந்நிகழ்வு, அங்குள்ள கலை ஆடை குறித்த பெருநகர அருங்காட்சியத்தின் நன்மைக்காக நடத்தப்படும் பிரம்மாண்ட விழாவாகும்.
ஒவ்வொரு ஆண்டும் விழாவில் பங்கேற்பவர்கள், குறிப்பிட்ட தலைப்புகளின்கீழ் வித்தியாசமான, மிகவும் விலைமதிப்புள்ள ஆடைகளை அணிந்து வருவார்கள்.
இந்த ஆண்டுக்கான தீம் "Camp: Notes On Fashion".
ஹாலிவுட்டை சேர்ந்த பல நடிகர் - நடிகைகள் மிகவும் விலையுயர்ந்த ஆடைகளை அணிந்து நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். இந்தியாவை சேர்ந்த பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவும், அவரது கணவர் நிக் ஜோனாஸும் இதில் கலந்து கொண்டனர்.
[Image: _106820251_hi053791643.jpg]படத்தின் காப்புரிமைAFP[Image: _106820253_hi053790008.jpg]படத்தின் காப்புரிமைAFP[Image: _106820527_hi053792800.jpg]IMAGES
பிரியங்கா சோப்ராவின் சிகை அலங்காரம் குறித்து என்ன சொல்கிறார்கள்?
[Image: arts-and-culture-48184211]

Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 08-05-2019, 09:41 AM



Users browsing this thread: 3 Guest(s)