Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
விராத்துடன் வாக்குவாதம்: கதவை உடைத்த நடுவர், இழப்பீடு கட்டினார்!

[Image: 63259.jpg]
ஐபிஎல் போட்டியில் நோ-பால் சர்ச்சை காரணமாக விராத் கோலியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நடுவர், கதவை உடைத்ததில் அது உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஐபிஎல் தொடரில், விராத் கோலி தலைமையிலான பெங்களூரு அணி கடைசி ஆட்டத்தில் ஐதராபாத்தை வீழ்த்தியது.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய சன் ரைசர்ஸ் அணி, 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 175 ரன் எடுத்தது. கேப்டன் வில்லியம்சன் 43 பந்தில் 70 ரன் எடுத்தார். இந்த போட்டியில் பெங்களூரு வீரர் உமேஷ் யாதவ் கடைசி ஓவரை வீசினார். அந்த ஓவரில் சிக்சரும் பவுண்டரிகளும் பறந்தன.[Image: 082606_Umpire%201.jpg]
அப்போது, ஒரு பந்தை நோ-பால் என்று அறிவித்தார் நடுவர் நைஜல் லாங் (Nigel Llong). ஆனால், டிவி ரீப்ளேவில், அது நோ- பால் இல்லை என்று தெரிய வந்தது. இதனால் அதிருப்தி அடைந்த விராத் கோலியும் உமேஷ் யாதவும் நடுவரிடம் வாக்குவாதம் செய்தனர். 
இதனால் கடுப்பான நடுவர் நைஜல் லாங், இன்னிங்ஸ் பிரேக்கில் அறைக்குச் சென்றார்.  விரக்தியில், அறையின் கண்ணாடி கதவை ஓங்கி உதைத்தார். இதில் கதவு உடைந்தது. இதையடுத்து கர்நாடக கிரிக்கெட் சங்கத்திடம் அவர் இழப்பீடாக ரூ.5000 கொடுத்தார். இந்த சம்பவம் பற்றி இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது
Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 07-05-2019, 05:29 PM



Users browsing this thread: 100 Guest(s)