Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
ராகுல் காந்தி மீது பொய் குற்றச்சாட்டு – ஸ்மிரிதி இராணியை கடிந்த தேர்தல் ஆணையம்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக மத்திய பாஜக அமைச்சர் ஸ்மிரிதி இராணி அளித்த புகாருக்கு தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்து இருக்கிறது.
நேற்று நாடு முழுக்க ஐந்தாவது கட்ட லோக்சபா தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 7 மாநிலங்களில் தேர்தல் நடந்தது. 51 தொகுதிகளில் இந்த தேர்தல் நடந்தது.
இந்த தேர்தல் அமேதி, ரேபரேலி ஆகிய முக்கிய தொகுதிகளிலும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அமேதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். ராகுல் காந்தியை எதிர்த்து பாஜக அமைச்சர் ஸ்மிரிதி இராணி போட்டியிடுகிறார்.
[Image: 3ffbfcc239df7d014a6ac4f3bed5dd78.jpg]
இந்த நிலையில் நேற்று அமேதியில் வாக்களித்த பின் செய்தியாளர்களை சந்தித்த ஸ்மிரிதி இராணி, அமேதியில் தேர்தலில் முறைகேடு நடக்கிறது. இங்கு வாக்குசாவடிகளை கைப்பற்ற நினைக்கிறார்கள். இதற்காக ராகுல் காந்தியின் ஆட்கள் செயல்பட்டு வருகிறார்கள் என்று கூறினார்.
அப்படி கூறியதோடு, இது தொடர்பாக மூதாட்டி ஒருவர் வெளியிட்ட வீடியோவையும் இணையத்தில் வெளியிட்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. அதேபோல் தேர்தல் ஆணையத்திடம் டிவிட்டர் மூலம் புகார் அளித்தார்.
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக மத்திய பாஜக அமைச்சர் ஸ்மிரிதி இராணி அளித்த புகாருக்கு தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்து உத்தர பிரதேச மாநில தேர்தல் அதிகாரி பதில் அளித்துள்ளார்.
அதில், இந்த புகார் பொய்யானது. இதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. அங்கு தேர்தல் மிக மிக பாதுகாப்பாக நடைபெற்றது. இந்த வீடியோ பொய்யானது, என்று குறிப்பிட்டுள்ளார். அதேபோல் ராகுல் காந்திக்கு எதிரான புகாரையும் தள்ளுபடி செய்துள்ளார்.
Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 07-05-2019, 09:54 AM



Users browsing this thread: 100 Guest(s)