22-12-2018, 10:05 AM
ஆனால், கிரிக்கெட்டை நிர்வகிக்கும் பொறுப்பு அமைப்பாக எந்தவிதமான தடையும் இல்லாமல் பிசிசிஐ செயல்பட்டு வருகிறது. மேலும், நாட்டின் பிரதிநிதியாகவும், கிரிக்கெட்டை நிர்வகிக்கும் அங்கீகாரம் பெற்ற அமைப்பாகும் பிசிசிஐ செயல்பட்டு வருகிறது.
பிசிசிஐ அமைப்பு எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் ஆங்கிலேயர்கள் காலணி ஆதிக்கத்தில் இருந்தபோது பயன்படுத்தப்பட்ட நட்சத்திரத்தை தனது லட்சினையாக பயன்படுத்திக் கொண்டு, அங்கீகாரம் இல்லாத நிலையில் இந்தியாவின் பிரதிநிதி என்று கூறிக்கொள்கிறது.
ஆங்கிலேயர்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்ட லட்சிணையை அரசின் அனுமதியில்லாமல் பிசிசிஐ பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும். லட்சிணை மற்றும் பெயர்சட்டம் 1950ன்படி, சட்டத்தை மீறியதாகும்
இந்தியா என்ற வார்த்தையை பயன்படுத்த பிசிசிஐ அமைப்புக்கு எந்தவிதமான சட்டப்பூர்வ அனுமதியும் இல்லை, வெளிநாடுகளில் இந்தியாவின் பிரதிநிதி அணியாக செயல்படவும் உரிமை இல்லை. இந்தியா என்பது இந்திய அரசுக்கு சொந்தமான பெயராகும்.
அதுமட்டுமல்லாமல் அரசு நிறுவனமான பிசிசிஐ மாற்றுவதற்கு தொடர்ந்து அதன் நிர்வாகிகள் மறுத்துவருகிறார்கள், சட்டப்பூர்வ தேசிய விளையாட்டு அமைப்பாக அறிவிக்கவும் எதிர்க்கிறார்கள். வீரர்கள் தேர்விலும் எந்தவிதமான வெளிப்படைத் தன்மையும் இல்லாமல், பாகுபாட்டுடனே வீரர்கள் தேர்வும் இருந்து வருகிறது.கிரிக்கெட் விளையாட்டை மத்திய விளையாட்டு அமைச்சகதத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் எம். சத்தியநாராயணா, பி. ராஜமாணிக்கம் ஆகியோர் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிசிசிஐ அமைப்பு, மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி பதில் அளிக்க உத்தரவிட்டனர். வழக்கை 2019, பிப்ரவரி 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்