22-12-2018, 10:01 AM
அரசின் அங்கீகாரம் இல்லாமல் நாட்டின் பிரதிநிதியாக பங்கேற்கபதா?'- பிசிசிஐ அமைப்புக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு
மத்திய அரசிடம் இருந்து எந்தவிதமான முறையான அங்கீகாரம் இன்றி நாட்டின் பிரதிநிதியாக உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் செயல்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு அமைப்பை (பிசிசிஐ) தடை செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த கீதா ராணி என்பவர் இந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, பிசிசிஐ அமைப்புக்கு எதிராகவும், அதன் அதிகாரிகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளார்.
டெல்லியைச் சேர்ந்த கீதா ராணி என்பவர் இந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, பிசிசிஐ அமைப்புக்கு எதிராகவும், அதன் அதிகாரிகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளார்.
பிசிசிஐ என்பது தமிழகத்தில் சங்கப் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டம் 12-ன் பிரிவின்படி அதனால் அரசின் பிரதிநிதியாக செயல்பட முடியாது. பிசிசிஐ பதிவுசெய்யப்பட்ட நேரத்தில் நாட்டின் பிரதிநிதியாக வெளிநாடுகளில் போட்டிகளில் பங்கேற்க பதிவு செய்யப்பட்ட நேரத்தில் அரசிடமிருந்து எந்தவிதமான அங்கீகாரத்தையும் அனுமதிதையும் பிசிசிஐ பெறவில்லை.